ரூ.5.49 லட்சம் மட்டும்.. 28 கிமீ மைலேஜ் + 419 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்ட டாடா டிகோர்
டாடா டிகோர், 4-ஸ்டார் GNCAP பாதுகாப்பு மதிப்பீட்டுடன் கூடிய ஒரு பிரபலமான செடான் ஆகும். பெட்ரோல், CNG வகைகளில் சிறந்த மைலேஜையும், 419 லிட்டர் பூட் ஸ்பேஸையும் கொண்டுள்ளது. இது குறைந்த செலவில் பிரீமியம் அம்சங்களை வழங்குகிறது.

28 கிமீ மைலேஜ் கார்
சிறந்த மைலேஜ், பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் குறைந்த விலையில் கூடிய கார் தேடுபவர்களுக்கு நல்ல செய்தி. டாடா மோட்டார்ஸின் பிரபலமான செடான் மாடல் டாடா டிகோர் தற்போது சந்தையில் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த செடான், GNCAP சோதனையில் 4-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பெண் பெற்றுள்ளது. இதனால், குடும்ப பயணத்திற்கும் நகரப் பயன்பாட்டிற்கும் இது பாதுகாப்பான தேர்வாக திகழ்கிறது. கூடுதலாக, இது சுமார் 419 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது. இந்த விலைக்குள் மிகப்பெரிய சேமிப்பு திறனை கொண்டுள்ளது.
டாடா டிகோர் விலை
டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விலை விவரப்படி, டிகோர் இன் ஆரம்ப விலை ரூ.5.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). மேல் மாடல்கள் ரூ.7.82 லட்சம் வரை உயர்கின்றன. அதிகபட்ச மைலேஜை விரும்புகிறவர்களுக்காக CNG மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை ரூ.8.69 லட்சம் முதல் ரூ.8.74 லட்சம் வரை விலையில் கிடைக்கின்றன. இந்த கார், மாருதி சுசுகி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற செடான்களுடன் போட்டியிடுகிறது.
டாடா டிகோர் அம்சங்கள்
மைலேஜில் டிகோர் சிறப்பான செயல்திறனைக் காட்டுகிறது. கார் தேகோ வழங்கிய தகவல்படி, பெட்ரோல் (மேனுவல்) மாடல் 19.28 kmpl, பெட்ரோல் (AMT) 19.6 kmpl, CNG (மேனுவல்) 26.49 kmpl மற்றும் CNG (AMT) 28.06 kmpl என மைல்கற்களை அடைகிறது. இதனாலேயே டிகோர் மிகவும் பொருளாதாரத்திற்கேற்ற கார் ஆகும். 2020ல் ICE மாதலும் 2021ல் EV மாடலும் விபத்து சோதனை செய்யப்பட்ட நிலையில், இரண்டிலும் 4-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்திற்கான கார்
அம்சங்கள் பக்கம் பார்த்தால், டிகோர் இந்த விலையில் மிகவும் உயர்தர வசதிகளை வழங்குகிறது. 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹர்மன் கார்டன் 8-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, பின்புற ஏசி வென்ட்கள், டூயல் ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், எச்டி ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், குறைந்த விலையில் உயர்தர பாதுகாப்பு, மைலேஜ் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இணையாக டாடா டிகோர் பயனாளர்களை கவர்ந்துள்ளது.

