MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • சிங்கிள் சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்: ரூ.1.35 லட்சத்தில் ஹோண்டாவின் நியூ இ-ஸ்கூட்டர்!

சிங்கிள் சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்: ரூ.1.35 லட்சத்தில் ஹோண்டாவின் நியூ இ-ஸ்கூட்டர்!

ஹோண்டா நிறுவனம் தனது புதிய க்யூசி3 (QC3) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 01 2026, 07:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரூ.1.35 லட்சத்தில் ஹோண்டா க்யூ.சி 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
Image Credit : google

ரூ.1.35 லட்சத்தில் ஹோண்டா க்யூ.சி 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

இந்தியாவின் மின்சார ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா நிறுவனம் தனது புதிய க்யூசி 3 (QC3) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ரூ.1.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. குடும்பப் பயன்பாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், டி.வி.எஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஏதர் ரிஸ்டா மற்றும் விடா விஎக்ஸ்2 உள்ளிட்ட மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நிலையான பேட்டரி அமைப்பு & ரேஞ்ச்
Image Credit : google

நிலையான பேட்டரி அமைப்பு & ரேஞ்ச்

புதிய ஹோண்டா க்யூசி3 ஸ்கூட்டரில் 3 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 145 கி.மீ வரை செல்லும் திறன் இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இது இந்திய ஓட்டுநர் சுழற்சி (IDC) சோதனை முறைகளின் அடிப்படையிலான மதிப்பீடு என்பதால், அன்றாடப் பயன்பாட்டில் கிடைக்கும் ரேஞ்ச் என்பது வேகம் மற்றும் ஓட்டும் முறையைப் பொறுத்து மாறுபடும். பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 80 % வரை சார்ஜ் செய்ய சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக 100 % வரை சார்ஜ் செய்ய சுமார் 4 மணி நேரம் தேவைப்படும். தினசரி பயன்பாட்டிற்கும், நெரிசல் மிகுந்த நகர்ப்புற பயன்பாட்டிற்கும் இந்த சார்ஜிங் நேரமும் ரேஞ்சும் போதுமானதாக இருக்கும்.

ஏற்கனவே சந்தையில் உள்ள க்யூசி1 மற்றும் ஆக்டிவா இ ஆகிய மாடல்களைத் தொடர்ந்து, ஹோண்டாவின் மின்சார ஸ்கூட்டர் வரிசையில் 3-வது மாடலாக க்யூசி3 வந்துள்ளது. அதிக தூரம் செல்லக்கூடிய குடும்ப ஸ்கூட்டராக இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆக்டிவா இ: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்ட கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிக்கு பதிலாக, க்யூசி3 ஸ்கூட்டரில் நிலையான (Fixed) பேட்டரி அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

35
டிஜிட்டல் வசதிகள் & சேமிப்பு வசதி
Image Credit : google

டிஜிட்டல் வசதிகள் & சேமிப்பு வசதி

புதிய க்யூசி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5 இன்ச் டிஎஃப்டி (TFT) டிஜிட்டல் திரை வழங்கப்பட்டுள்ளது. ஹோண்டா ரோடு ஸின்க் (RoadSync) இணைப்பு மூலம் ஸ்மார்ட்போன் தொடர்பான வசதிகளையும், வழிகாட்டி (Navigation) தகவல்களையும் பெற முடியும். மேலும், ஸ்மார்ட் கீ மற்றும் முன்புற யு.எஸ்.பி சார்ஜிங் போர்ட் வசதி ஆகியவை தினசரி பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன.

குடும்பப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்த ஸ்கூட்டரில் 32 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருக்கைக்கு அடியிலான சேமிப்பு வசதி (Under-seat storage) வழங்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் மற்றும் அன்றாடப் பொருட்களை வைத்துச் செல்ல இது உதவும். பேட்டரி அமைப்பால் சேமிப்பு இடம் குறையும் சில மின்சார ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, இதில் போதுமான அளவு இடம் கிடைக்கிறது.

45
விற்பனை & முன்பதிவு
Image Credit : google

விற்பனை & முன்பதிவு

முதல்கட்டமாக டெல்லி, ஆக்ரா, கட்டாக், சூரத் மற்றும் கொல்லம் ஆகிய 5 நகரங்களில் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோண்டா ரெட்விங் (RedWing) டீலர்ஷிப்கள் மூலம் இதன் விற்பனை தொடங்குகிறது. அடுத்த கட்டமாக தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் கொண்டு வரப்படும். குறிப்பிட்ட நகரங்களில் ரூ.5,000 கட்டணத்துடன் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.

55
ஹோண்டாவின் புதிய வியூகம்
Image Credit : google

ஹோண்டாவின் புதிய வியூகம்

இந்தியாவின் இருசக்கர வாகனச் சந்தையில் பெட்ரோல் பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டா முன்னிலையில் இருந்தாலும், எலெக்ட்ரிக் பிரிவில் பின்தங்கியே உள்ளது. முன்கூட்டியே தனது EV வாகனங்களைச் சந்தைக்குக் கொண்டு வரவில்லை என்பதும், ஆக்டிவா இ: ஸ்கூட்டரின் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி மற்றும் சார்ஜிங் முறைகள் போதுமான வரவேற்பைப் பெறாததும் இதற்கு முக்கியக் காரணங்களாகும். இதனை மனதில் கொண்டு, பட்ஜெட் விலையிலான QC1 ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக, சற்றே அதிக பிரிமீயம் அம்சங்கள் மற்றும் ரேஞ்ச் கொண்டதாக இந்த புதிய QC3 ஸ்கூட்டரை ஹோண்டா சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது.

About the Author

KD
Kiruthickraj D
ஆட்டோ
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVS Ronin: ஆகஸ்டில் 11,000 பேர் வாங்கிய சூப்பர் பைக்! விற்பனையில் நம்பர் 1.. அப்படி என்ன ஸ்பெஷல்?
Recommended image2
Electric Scooter Subsidy: இஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா? ரூ.5,000 வரை மானியம்.. எப்படி பெறுவது?
Recommended image3
New Bike Launches: ரூ.2 லட்சம் டூ ரூ.13 லட்சம் வரை... அக்டோபரில் இந்தியாவை அதிரவைக்க வரும் 6 புதிய பைக்குகள்!
Related Stories
Recommended image1
TVS Ronin: ஆகஸ்டில் 11,000 பேர் வாங்கிய சூப்பர் பைக்! விற்பனையில் நம்பர் 1.. அப்படி என்ன ஸ்பெஷல்?
Recommended image2
Car Price Hike: பண்டிகை சீசனில் கார் வாங்க பிளானா? இன்று முதல் ரூ.25,000 வரை விலை எகிறியது; விலையேறும் டாப் மாடல்கள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved