- Home
- Auto
- TVS Ronin: ஆகஸ்டில் 11,000 பேர் வாங்கிய சூப்பர் பைக்! விற்பனையில் நம்பர் 1.. அப்படி என்ன ஸ்பெஷல்?
TVS Ronin: ஆகஸ்டில் 11,000 பேர் வாங்கிய சூப்பர் பைக்! விற்பனையில் நம்பர் 1.. அப்படி என்ன ஸ்பெஷல்?
TVS Ronin: ஆகஸ்ட் மாத பைக்குகள் விற்பனையில் 205சிசி-340சிசி பைக் பிரிவில் டிவிஎஸ் ரோனின் 11,679 யூனிட்டுகள் விற்று முதலிடம் பிடித்துள்ளது. இந்த பைக்கில் அப்படி என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஆகஸ்ட் மாத பைக்குகள் விற்பனை ரிப்போர்ட்
இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் 205சிசி முதல் 340சிசி வரையிலான பைக்குகளின் ஆகஸ்ட் மாத விற்பனை விவரங்கள் வெளியாகியுள்ளன. டிவிஎஸ், பஜாஜ், கேடிஎம், சுஸுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் களமிறங்கியுள்ள இந்தப் பிரிவில், டிவிஎஸ் ரோனின் (TVS Ronin) 225 பைக் அதிகளவில் விற்பனையாகி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 11,679 ரோனின் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிவிஎஸ் ரோனின் பிரம்மாண்ட வளர்ச்சி
2025 ஆகஸ்ட் மாதத்தில் 6,623 யூனிட்டுகளாக இருந்த ரோனின் விற்பனை, 2026 ஆகஸ்ட் மாதத்தில் 11,679 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரே ஆண்டில் 76.34% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், 200-350சிசி பிரிவின் மொத்த விற்பனையில் 39.48% பங்கைத் தன்வசப்படுத்தியுள்ளது. பஜாஜ் பல்சர் 220/250 (7,179 யூனிட்டுகள்) இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
ரோனின் ஸ்பெஷல் என்ன?
டிவிஎஸ் ரோனின் பைக்கின் மிகப்பெரிய ஸ்பெஷல் அதன் ரெட்ரோ-மாடர்ன் வடிவமைப்புதான். கிளாசிக் தோற்றமும் நவீன தொழில்நுட்பமும் இணைந்துள்ள இந்தப் பைக், தினசரி அலுவலகப் பயணம் மற்றும் நீண்ட தூரச் சுற்றுலா ஆகிய இரண்டிற்கும் மிகவும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் எல்.ஈ.டி லைட்டிங், கிளைடு த்ரூ டெக்னாலஜி டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய டிஸ்க் பிரேக்குகள், மற்றும் புளூடூத் இணைப்புடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற பல அதிநவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
டிவிஎஸ் ரோனின் விலை என்ன?
இந்த பைக்கில் சக்திவாய்ந்த 225.9 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், ஆயில்-கூல்டு என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 20.4 பிஎஸ் பவரையும், 19.93 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் 5-ஸ்பீட் கியர் பாக்ஸ் மற்றும் அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி இடம்பெற்றுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.30 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேடிஎம், அவெஞ்சர் மற்றும் பிற பைக்குகளின் நிலவரம்
கேடிஎம் 250: 4,471 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு, 117.46% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பஜாஜ் அவெஞ்சர் 220: 2,127 யூனிட்டுகள் விற்று, கடந்த ஆண்டைக் காட்டிலும் 438.48% அபார வளர்ச்சியை அடைந்துள்ளது. அப்பாச்சி 310/ஆர்டிஎக்ஸ்: 1,925 யூனிட்டுகள் விற்பனையுடன் 117.76% வளர்ச்சி கண்டுள்ளது.
சுஸுகி வி-ஸ்ட்ரோம் 250: கடந்த ஆண்டு 101 யூனிட்டுகள் மட்டுமே விற்ற நிலையில், தற்போது 1,012 யூனிட்டுகளாக உயர்ந்து 901.98% பிரம்மாண்ட வளர்ச்சியைத் தொட்டுள்ளது. மறுபுறம், பஜாஜ் டொமினார் 250 (-13.44%), கவாஸாகி கேஎல்எக்ஸ் 230, ஹீரோ கரிஸ்மா 210 மற்றும் யமஹா ஆர்3 போன்ற சில மாடல்களின் விற்பனை மந்தமாகிச் சரிவைச் சந்தித்துள்ளன.
ஒட்டுமொத்த சந்தை வளர்ச்சி
205சிசி - 340சிசி பைக் பிரிவில் 2025 ஆகஸ்ட் மாதம் மொத்தமாக 17,196 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், 2026 ஆகஸ்ட் மாதத்தில் இது 29,582 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தப் பிரிவின் ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சி 72.03% ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

