- Home
- Auto
- Bike Tyre Lifespan: பைக் டயர் சீக்கிரமா தேயுதா? இந்த ஈஸி டிப்ஸை ஃபாலோ பண்ணா நீண்ட நாள் கவலையில்லை!
Bike Tyre Lifespan: பைக் டயர் சீக்கிரமா தேயுதா? இந்த ஈஸி டிப்ஸை ஃபாலோ பண்ணா நீண்ட நாள் கவலையில்லை!
Bike Tyre Lifespan: பைக் டயர்களின் ஆயுளை நீட்டிக்கவும், நீண்ட காலம் உழைக்கவும் என்னென்ன எளிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

பைக் டயரை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்
பைக் ரைடிங் பிரியர்களுக்கு லாங் ட்ரிப் செல்வது அத்தகைய பெரிய சந்தோஷத்தைத் தருகிறது. இளைஞர்கள் பலரும் குழுவாக சேர்ந்து பைக் பயணம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். பைக் ஓட்டும்போது அவர்களின் கவனம் முழுவதும் சேர வேண்டிய இடத்தின் மீது மட்டுமே இருக்கும். ஆனால், அனைத்து விதமான சாலைகளிலும் வாகனத்தை சீராக இயக்க, டயர்கள் நல்ல நிலையில் இருப்பது மிக அவசியமான ஒன்றாகும்.
ஆம், பைக்கில் டயர் என்பது மிகவும் முக்கியமான ஒரு பாகமாகும். தரையுடன் நேரடியாக உரசும் ஒரே பாகம் இதுதான். எனவே, டயர்களை நல்ல கண்டிஷனில் வைத்துக்கொள்வது கட்டாயமானது. உங்கள் பைக் டயர் நீண்ட காலம் உழைக்க சில முக்கியமான வழிமுறைகள் இதோ:
சரியான காற்று அழுத்தம்
உங்கள் பைக் நிறுவனம் வழங்கிய கையேட்டின் படி, இரண்டு டயர்களிலும் காற்று சரியாக உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பைக்கிற்கும் டயர் அழுத்தம் மாறுபடும். முன்பக்க மற்றும் பின்பக்க டயர்களுக்கான சரியான PSI அளவை மேனுவல பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
நிழலில் நிறுத்துங்கள்
முடிந்தவரை பைக்கை நிழலில் பார்க் செய்யுங்கள். நேரடியாக வெயில் படும் இடங்களைத் தவிர்க்கவும். வெயில் டயரின் ஆயுளைக் குறைத்துவிடும். வெயிலில் பைக்கை நிறுத்தினால், டயரில் சிறிய விரிசல்கள் ஏற்படுவதைக் காண முடியும். எனவே, பைக்கை கவர் போட்டு மூடி வையுங்கள் அல்லது குளிர்ந்த இடங்களில் பார்க்கிங் செய்யுங்கள்.
மென்மையான பயணம்
பைக்கை திடீரென வேகப்படுத்த ஆக்சிலரேட்டரை கடுமையாக முறுக்காதீர்கள். இதனால் பின் சக்கரம் அதிவேகமாக சுழன்று, டயர் ரப்பர் சீக்கிரமாகத் தேய்ந்துவிடும். திடீர் பிரேக் அடிப்பதும் தவறான செயலாகும். பைக்கை எப்போதும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இயக்குங்கள்.
சாலையைக் கவனியுங்கள்
ஆஃப்-ரோடு பாதைகளில் வண்டி ஓட்டும்போது டயர்கள் விரைவில் தேய்ந்துவிடும். முடிந்தவரை முறையாக பராமரிக்கப்பட்ட நல்ல சாலைகளில் மட்டும் வாகனத்தை ஓட்டுங்கள்.
வீல் அலைன்மென்ட் சரிபார்த்தல்
பைக் மேனுவலில் குறிப்பிட்டுள்ளபடி, குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு சக்கரங்களுக்கும் வீல் அலைன்மென்ட் சரியான அளவில் உள்ளதா என பரிசோதிக்கவும். அலைன்மென்ட் தவறாக இருந்தால் டயரின் ஆயுள் விரைவாகக் குறைந்துவிடும்.
டயர் டிரெட் ஆழத்தை கண்காணிப்பது மிகவும் முக்கியம்
டயரின் மேல் பகுதியில் உள்ள பள்ளங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தேய்ந்துவிட்டால், உடனடியாக டயரை மாற்றிவிடுவது பாதுகாப்பானது. மழைக் காலங்களில் இந்த டிரெட் பள்ளங்கள்தான் சாலையில் பைக் சறுக்காமல் இருக்க பெரிதும் உதவுகின்றன.
மேலும், வாரத்திற்கு ஒரு முறையாவது டயர்களில் ஆணிகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் அல்லது கூர்மையான கற்கள் ஏதேனும் சிக்கியுள்ளனவா என கூர்ந்து கவனிக்க வேண்டும். சிறிய துளைகள் இருந்தாலும் அவை மெல்ல காற்றைக் குறைத்து பெரிய ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
சுத்தம் செய்யும்போது இதையும் கவனிக்கனும்
பைக் டயர்களைக் சுத்தம் செய்யும்போது அதிக ரசாயனங்கள் கலந்த ஷாம்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இது டயரின் ரப்பரை கடினமாக்கி விரிசல்களை உருவாக்கும். சாதாரண தண்ணீரைப் பயன்படுத்தியே டயர்களைச் சுத்தமாகப் பராமரிக்கலாம். இந்த எளிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் பைக்கின் டயர்கள் நீண்ட காலம் உழைப்பதோடு, உங்கள் பயணமும் பாதுகாப்பாக அமையும்.

