டாடாவுக்கு டஃப் கொடுக்கும் மாருதி: செப்டம்பரில் அதிகம் விற்பனையான டாப் 5 கார்கள்!
கடந்த செப்டம்பர் 2026-ல் இந்தியாவின் சப்-காம்பேக்ட் SUV பிரிவில் டாடா நெக்ஸான் 20,456 கார்கள் விற்பனையுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

டாப் SUV கார்கள் விற்பனை
இந்த விற்பனைப் பட்டியலில் டாடா நிறுவனத்தின் கார்கள் முதல் இரண்டு இடங்களைக் கைப்பற்றியுள்ள வேளையில், மாருதி பிரிஸா மாடல் மிக அதிக அளவிலான வருடாந்திர வளர்ச்சியைப் (YoY வளர்ச்சி) பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. செப்டம்பர் 2026 மாதத்தில் இந்தியாவின் சப்-காம்பேக்ட் SUV பிரிவில் மிகவும் சுவாரஸ்யமான விற்பனை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சில கார்கள் தங்களது பிடியை வலுப்படுத்திய நிலையில் சில மாடல்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
பன்ச் காரை சிறிய வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி டாடா நெக்ஸான் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் மாருதி ஃஃபிரான்க்ஸ் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. டாப் 10 கார்களின் பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யுவி 3XO மாடல் மிகப்பெரிய மாதாந்திர வளர்ச்சியைக் கண்டு அசத்தியுள்ளது. செப்டம்பர் 2026-ல் அதிகம் விற்பனையான டாப் சப்-காம்பேக்ட் SUV கார்களின் விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
டாடா நெக்ஸான் (Tata Nexon)
செப்டம்பர் 2026-ல் மொத்தம் 20,456 கார்கள் விற்பனையாகி டாடா நெக்ஸான் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது ஆகஸ்ட் 2026 விற்பனையுடன் ஒப்பிடுகையில் 11% உயர்வாகும். இருப்பினும் செப்டம்பர் 2025 உடன் ஒப்பிடும்போது இதன் வருடாந்திர விற்பனை 9.4% சரிவைச் சந்தித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் நெக்ஸான் EV விற்பனையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா பன்ச் (Tata Punch)
டாடா பன்ச் மாடலானது 20,333 கார்கள் விற்பனையாகி முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுள்ளது. நெக்ஸான் காரை விட இது வெறும் 123 கார்கள் மட்டுமே குறைவாக விற்பனையாகியுள்ளது. இந்த மைக்ரோ SUV மாடலின் மாதாந்திர விற்பனை 4.6% சரிந்திருந்தாலும் இதன் வருடாந்திர விற்பனை 28% சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த தரவுகளில் பெட்ரோல்/டீசல் பன்ச் மற்றும் பன்ச் EV ஆகிய இரண்டை விற்பனையும் சேர்ந்துள்ளது.
மாருதி சுஸூகி ஃபிரான்க்ஸ்
மாருதி சுஸூகி ஃபிரான்க்ஸ் மாடல் செப்டம்பர் 2026-ல் 19,282 கார்கள் விற்பனையாகி தனது வலுவான ஓட்டத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை 3% உயர்ந்துள்ளது, மேலும் வருடாந்திர வளர்ச்சி 40.1% அதிகரித்துள்ளது. பன்ச் காரை விட வெறும் 1,200 கார்கள் மட்டுமே குறைவாக விற்று டாடா கார்களுக்குக் கடும் போட்டியாக ஃபிரான்க்ஸ் நீடிக்கிறது.
மாருதி பிரெஸ்ஸா (Maruti Brezza)
மாருதி பிரெஸ்ஸா மாடல் 15,685 கார்கள் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது ஆகஸ்ட் 2026-ஐ விட 2.6% உயர்வாகும். இந்த காரின் வருடாந்திர விற்பனை 54.2% என்ற அபார வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள டாப் 4 மாடல்களில் இதுவே மிக உயர்ந்த வருடாந்திர வளர்ச்சியாகும்.
ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue)
ஹூண்டாய் வென்யூ மாடல் செப்டம்பர் 2026-ல் 11,466 கார்கள் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 0.9% சிறிய வளர்ச்சியாகும். செப்டம்பர் 2025 உடன் ஒப்பிடும்போது 0.2% மிகச் சிறிய சரிவுடன் இதன் வருடாந்திர விற்பனையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.








