MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Maruti Suzuki eVitara: பாதுகாப்பில் பக்கா மாஸ்! ஜப்பான் NCAP சோதனையில் சாதனை படைத்த மாருதி இ-விட்டாரா!

Maruti Suzuki eVitara: பாதுகாப்பில் பக்கா மாஸ்! ஜப்பான் NCAP சோதனையில் சாதனை படைத்த மாருதி இ-விட்டாரா!

Maruti Suzuki eVitara: இந்தியாவில் தயாரித்த மாருதி சுஸுகி இ-விட்டாரா கார், ஜப்பான் NCAP கிராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 22 2026, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜப்பானில் கெத்து காட்டிய இந்தியாவின் மாருதி இ விட்டாரா
Image Credit : Maruti

ஜப்பானில் கெத்து காட்டிய இந்தியாவின் மாருதி இ-விட்டாரா

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாருதி சுஸுகி இ-விட்டாரா கார், ஜப்பானில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. ஜப்பானின் புதிய கார் பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்டில்தான் இந்த எலக்ட்ரிக் SUV இந்த சாதனையைப் படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ANCAP கிராஷ் டெஸ்டிலும் இ-விட்டாராவுக்கு 4 ஸ்டார் தான் கிடைத்தது. எனினும், இந்தியாவில் நடைபெற்ற பாரத் NCAP சோதனையில் இம்காருக்கு 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 543 கிலோமீட்டர் வரை பயணிக்கக் கூடிய இந்த இ-விட்டாராவின் இந்திய விலை ரூ.16.19 லட்சத்தில் தொடங்கி ரூ.20.21 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
NCAP கிராஷ் டெஸ்டில் சூப்பர் பெர்ஃபார்மன்ஸ்
Image Credit : Google

NCAP கிராஷ் டெஸ்டில் சூப்பர் பெர்ஃபார்மன்ஸ்

காரின் கட்டமைப்பு பாதுகாப்பு மட்டுமல்லாமல், விபத்துகளைத் தவிர்க்க உதவும் தொழில்நுட்பங்கள் மற்றும் விபத்து எச்சரிக்கை சிஸ்டம் போன்றவையும் ஜப்பான் NCAP சோதனையில் பரிசோதிக்கப்படுகின்றன. இந்தத் சோதனையில், விபத்துகளைத் தடுக்கும் சிஸ்டத்திற்கு இ-விட்டாரா 'A' கிரேடும், மோதல் ஏற்படும்போது வழங்கும் பாதுகாப்பிற்கு 'B' கிரேடும் பெற்றுள்ளது.

மேலும், விபத்து நடந்தால் தானாகவே தகவல் அனுப்பும் சிஸ்டம் அட்வான்ஸ்டு டைப் II பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கிடைத்த 4 ஸ்டார் ரேட்டிங்கையும், இந்தியாவில் கிடைத்த 5 ஸ்டார் ரேட்டிங்கையும் நேரடியாக ஒப்பிட முடியாது; ஏனெனில், இரண்டு நாடுகளின் சோதனை முறைகளும் மதிப்பீட்டு அளவுகோல்களும் வெவ்வேறானவை.

34
கிராஷ் டெஸ்டில் பயணிகளின் பாதுகாப்பு எப்படி?
Image Credit : Google

கிராஷ் டெஸ்டில் பயணிகளின் பாதுகாப்பு எப்படி?

நேருக்கு நேர் மோதும் சோதனை: டிரைவர் பாதுகாப்புக்கு இ-விட்டாரா 5-க்கு 5 ரேட்டிங் பெற்றுள்ளது.

பின் சீட் பயணிகள் மற்றும் முன்பக்க மோதல் சோதனை: லெவல் 4 ரேட்டிங் கிடைத்துள்ளது.

பக்கவாட்டு மோதல் சோதனை: இந்த எலக்ட்ரிக் SUV லெவல் 5 ரேட்டிங்கைத் தட்டியுள்ளது.

பின்புற மோதல் பாதுகாப்பு: பின்னால் இருந்து மோதும் போது டிரைவர் மற்றும் முன் சீட் பயணிகளின் கழுத்து பாதுகாப்புக்கு லெவல் 5 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துள்ளது.

பாதசாரிகள் பாதுகாப்பு சோதனை: முடிவுகள் சற்று மாறுபட்டுள்ளன. தலை பாதுகாப்புக்கு லெவல் 3 ரேட்டிங்கும், கால் பாதுகாப்புக்கு லெவல் 5 ரேட்டிங்கும் கிடைத்துள்ளது.

சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம்

விபத்து அபாயத்தைக் குறைக்கும் பல தொழில்நுட்பங்களிலும் இ-விட்டாரா சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. பகல் மற்றும் இரவு வேளைகளில் இயங்கும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், பாதசாரிகளைக் கண்டறியும் தொழில்நுட்பம், சைக்கிள் ஓட்டுபவர்களை அடையாளம் காணும் சிஸ்டம் ஆகியவற்றுக்கு லெவல் 5 ரேட்டிங் கிடைத்துள்ளது. மேலும், லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் மாறுவதைத் தடுத்து நிறுத்தூம் தொழில்நுட்பம், பிரகாசமான ஹெட்லைட்டுகள் மற்றும் எதிர்பாராமல் ஆக்சிலரேட்டரை மிதித்தால் வேகத்தைக் கட்டுப்படுத்தும் சிஸ்டம் ஆகியவற்றுக்கும் லெவல் 5 ரேட்டிங் கிடைத்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

44
மாருதி இ-விட்டாராவின் விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Image Credit : Google

மாருதி இ-விட்டாராவின் விலை மற்றும் சிறப்பம்சங்கள்

இந்தியாவில் டெல்டா, ஜீட்டா, ஆல்ஃபா ஆகிய மூன்று வேரியண்ட்களில் மாருதி சுஸுகி இ-விட்டாரா விற்பனைக்குக் கிடைக்கிறது. பேட்டரி செலவையும் சேர்த்து இதன் விலை ரூ.16.19 லட்சத்தில் தொடங்கி ரூ.20.21 லட்சம் வரை உள்ளது. இதில் 49 kWh மற்றும் 61 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் தரவுகளின்படி, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 543 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். எனினும், நிஜ பயன்பாட்டில் ஓட்டுநர் இயக்கும் விதம், சாலையின் தட்பவெப்பநிலை, வானிலை மற்றும் ஏசி பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்து மைலேஜ் மாறுபட வாய்ப்புள்ளது.

இந்தியாவில் தயாரித்து உலக சந்தைக்கு

இந்தியாவில் தயாரிக்கப்படும் இ-விட்டாராவை சுஸுகி நிறுவனம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. ஜப்பான் பாதுகாப்பு சோதனையில் கிடைத்துள்ள இந்த வெற்றி, உலகளாவிய சந்தையில் காருக்கு மேலும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தர உதவியாக இருக்கும். 543 கி.மீ ரேஞ்ச், பல்வேறு பேட்டரி ஆப்ஷன்கள் மற்றும் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவை இ-விட்டாராவின் முக்கிய சிறப்பம்சங்களாகும். இந்தியாவில் 5 ஸ்டார், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் 4 ஸ்டார் என இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ செய்திகள்
ஆட்டோ
 
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 5 - Session 3
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(12.0 ov)122/2
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ertiga Price Hike: 7 சீட்டர் மாருதி எர்டிகா வாங்கப் போறீங்களா? இந்த 2 வகைகளுக்கு ரூ.10,000 அதிகம்
Recommended image2
மழையில் நனைந்த கார், பைக் ஸ்டார்ட் பண்றீங்களா? லட்சக்கணக்கில் நஷ்டம் வரலாம். இதை மட்டும் செய்யாதீங்க
Recommended image3
டிவிஎஸ் ஜூபிடர் டூ ஏத்தர் ரிஸ்தா வரை: 70 லிட்டர் வரை ஸ்டோரேஜ் தரும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!
Related Stories
Recommended image1
Maruti Suzuki Cars: நச்சுனு 4 புதிய மாடல் கார்களை களத்தில் இறக்கும் மாருதி சுஸுகி..!
Recommended image2
Maruti : ஸ்விஃப்ட் முதல் எர்டிகா வரை.... அனைத்து கார்களின் விலையை கிடுகிடுவென உயர்த்தும் மாருதி சுஸுகி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved