MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • டிவிஎஸ் ஜூபிடர் டூ ஏத்தர் ரிஸ்தா வரை: 70 லிட்டர் வரை ஸ்டோரேஜ் தரும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!

டிவிஎஸ் ஜூபிடர் டூ ஏத்தர் ரிஸ்தா வரை: 70 லிட்டர் வரை ஸ்டோரேஜ் தரும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!

தேவைகளான மளிகைப் பொருட்கள், பைகள் மற்றும் 2 ஹெல்மெட்டுகளைச் சீட்டின் அடியில் பாதுகாப்பாக வைக்க உதவும் அதிக இடவசதி கொண்ட 5 சிறந்த ஸ்கூட்டர்களின் விவரங்களை பற்றி பார்போம்.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 21 2026, 06:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட ஸ்கூட்டர்கள்
Image Credit : Gemini

அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட ஸ்கூட்டர்கள்

தினசரி காய்கறி வாங்குவது, மளிகைப் பொருட்கள் மற்றும் அலுவலகப் பைகளை வைப்பது முதல் ஹெல்மெட்டுகளைச் சீட்டின் அடியில் பாதுகாப்பாகப் பூட்டி வைப்பது வரை, அதிக இடவசதி கொண்ட ஸ்கூட்டர்கள் நடுத்தரக் குடும்பங்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் என இரண்டு பிரிவுகளையும் சேர்த்து, இந்தியாவிலேயே ஆகச்சிறந்த பூட் ஸ்பேஸ் வழங்கும் 5 ஸ்கூட்டர்களின் விவரங்களை பற்றி பார்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
சிம்பிள் வேவ் (Simple Wave)
Image Credit : X

சிம்பிள் வேவ் (Simple Wave)

இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஸ்டோரேஜ் விஷயத்தில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ள குடும்ப மின்சார வாகனம் இதுவாகும். இதில் சீட்டின் அடியில் மட்டுமே இரண்டு ஹெல்மெட்டுகளை வைக்கும் அளவிற்குப் பிரம்மாண்டமான 63 லிட்டர் இடவசதி கொடுக்கப்பட்டுள்ளதுடன், முன்பக்க பாக்ஸ் மற்றும் இதர இடங்களையும் சேர்த்தால் மொத்தம் 70 லிட்டர் கொள்ளளவு கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 1,09,999 முதல் தொடங்குகிறது.

36
ரிவர் இண்டி (River Indie)
Image Credit : X

ரிவர் இண்டி (River Indie)

ஆட்டோமொபைல் உலகில் ஸ்கூட்டர்களின் எஸ்யூவி என்று அழைக்கப்படும் இந்த மின்சார வாகனம் ரிவர் இண்டி, அதிக சுமைகளையும் பெரிய பைகளையும் ஏற்றிச் செல்வதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சீட்டின் அடியில் மட்டும் 43 லிட்டர் இடவசதியும், முன்பக்க கிளவுவ் பாக்ஸ் 12 லிட்டரையும் சேர்த்து மொத்தம் 55 லிட்டர் பூட்டக்கூடிய இடவசதி உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 1.45 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

46
ஓலா எஸ்1 புரோ (Ola S1 Pro Gen 2)
Image Credit : X

ஓலா எஸ்1 புரோ (Ola S1 Pro Gen 2)

இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் அதிக விற்பனையாகும் பிரீமியம் மாடலான ஓலா எஸ்1 புரோ, தனது பேட்டரி அமைப்பை நேர்த்தியாக வடிவமைத்து சீட்டின் அடியில் 34 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய பூட் ஸ்பேஸ் வசதியை வழங்குகிறது. நீண்ட தூரப் பயணங்களுக்குத் தேவையான பொருட்களை இதில் எளிதாக வைத்துக்கொள்ளலாம். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 1.35 லட்சம் முதல் ரூ. 1.47 லட்சம் வரை விற்பனையாகிறது.

56
ஏத்தர் ரிஸ்தா (Ather Rizta)
Image Credit : X

ஏத்தர் ரிஸ்தா (Ather Rizta)

குடும்பப் பயன்பாட்டிற்காகவே ஏத்தர் நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கியுள்ள இந்த மாடலில் ஏத்தர் ரிஸ்தா, அதன் மிக நீளமான இருக்கைக்குக் கீழே ஆழமான மற்றும் அகலமான 34 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர முன்பக்கத்தில் கூடுதலாக 22 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேக் மாட்டும் வசதியும் இதில் உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 1.10 லட்சம் முதல் ரூ. 1.45 லட்சம் வரை கிடைக்கிறது.

66
டிவிஎஸ் ஜூபிடர் 125 (TVS Jupiter 125)
Image Credit : X

டிவிஎஸ் ஜூபிடர் 125 (TVS Jupiter 125)

இந்தியாவில் பெட்ரோல் இன்ஜின் கொண்ட சாதாரண ஸ்கூட்டர்களில் தற்போதைய தேதியில் மிக அதிகமான ஸ்டோரேஜ் கொண்ட ஒரே வண்டி டிவிஎஸ் ஜூபிடர் 125 மட்டுமே ஆகும். இதன் பெட்ரோல் டேங்க் கீழே கால் வைக்கும் ஃபூட்போர்டில் மாற்றப்பட்டுள்ளதால், சீட்டின் அடியில் இரண்டு முழு ஹெல்மெட்டுகளை வைக்கும் வகையில் 33 லிட்டர் பிரமாண்டமான காலி இடம் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 74,125 முதல் ரூ. 87,250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

About the Author

KD
Kiruthickraj D
ஆட்டோ
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
250 கி.மீ. மைலேஜ்.. ரூ.1.20 லட்சத்தில் களமிறங்கிய புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இத்தனை வசதிகளா?
Recommended image2
ரேடியான் vs ஸ்பிளெண்டர்: தினசரி பயணத்திற்கு எந்த பைக் பெஸ்ட்? எது லாபம்?
Recommended image3
Second Hand Cars : 3 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் டாப் 5 செகண்ட் ஹேண்ட் கார்கள்!
Related Stories
Recommended image1
Family-Friendly Petrol Scooters: 60 கி.மீ மைலேஜ், 125cc பவர், மெட்டல் பாடி... பட்ஜெட் விலையில் பட்டையைக் கிளப்பும் 6 குடும்ப ஸ்கூட்டர்கள்!
Recommended image2
ரேடியான் vs ஸ்பிளெண்டர்: தினசரி பயணத்திற்கு எந்த பைக் பெஸ்ட்? எது லாபம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved