ரேடியான் vs ஸ்பிளெண்டர்: தினசரி பயணத்திற்கு எந்த பைக் பெஸ்ட்? எது லாபம்?
இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் நடுத்தர மற்றும் எளிய மக்களின் தேர்வாக விளங்கும் டிவிஎஸ் ரேடியான் மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்குகளின் வித்தியாசங்களை பற்றி பார்போம்.

அதிக மைலேஜ் தரும் பைக் எது?
இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் நடுத்தர மற்றும் எளிய மக்களுக்கு மிகக் குறைந்த விலையில், அதிக மைலேஜ் தரும் கம்ப்யூட்டர் பைக்குகளாக டிவிஎஸ் ரேடியான் மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் இரண்டும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த இரு பிரபல பைக்குகளின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் மைலேஜ் நிலவரம் குறித்து பார்போம்.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்
இந்தியாவில் பல தலைமுறைகளாக எளிய மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்ற, அதிக மைலேஜ் மற்றும் எளிய பராமரிப்பிற்குப் பெயர்பெற்ற லெஜண்ட் மாடலாக ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் திகழ்கிறது. இதில் 97.2 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் கொடுக்கப்பட்டு, சுமார் 8.02 பிஎஸ் பவரையும், 8.05 என்எம் டார்க்கையும் தருகிறது. இந்த பைக்கின் எடை வெறும் 112 கிலோ மட்டுமே என்பதால், நகர்ப்புற நெரிசலான சாலைகளில் எவரும் மிக எளிதாகக் கையாள முடியும்.
இதில் 9.8 லிட்டர் பெட்ரோல் டேங்க், டியூப்லெஸ் டயர்கள், அலாய் வீல்கள் மற்றும் டிராஃபிக்கில் தேவையின்றி வண்டி இயங்குவதைத் தடுத்து பெட்ரோலை மிச்சப்படுத்தும் பிரத்யேக ஐ3எஸ் (i3S) ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் உள்ளது. இதன் சான்றளிக்கப்பட்ட மைலேஜ் லிட்டருக்குச் சுமார் 70 கி.மீ வரை கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை தோராயமாக ரூ. 78,688 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் ரேடியான் (TVS Radeon)
குறைந்த ஆரம்ப விலையில் சற்றே பெரிய என்ஜின் மற்றும் கூடுதல் சொகுசு வசதிகளை விரும்பும் எளிய மக்களுக்கான சிறந்த தேர்வாக டிவிஎஸ் ரேடியான் விளங்குகிறது. இதில் 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு, சுமார் 8.19 பிஎஸ் பவரையும், 8.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வசதியுடன் வருகிறது.
இதன் பெரிய 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை கரடுமுரடான கிராமத்துச் சாலைகளிலும் மேடு பள்ளங்களிலும் வண்டியின் அடிப்பகுதி தட்டாமல் பயணிக்க உதவுகின்றன. புதிய மாடலில் எல்.இ.டி முகப்பு விளக்குகள், நீளமான சொகுசு இருக்கை, டிஜிட்டல் மீட்டர், செல்போன் சார்ஜ் செய்ய யூஎஸ்பி போர்ட் மற்றும் முன்பக்க டிஸ்க் பிரேக் ஆப்ஷன்கள் உள்ளன. இதன் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை டெல்லியில் தோராயமாக ரூ. 67,100 முதல் தொடங்குகிறது.
விலை & பட்ஜெட் ஒப்பீடு
ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையை ஒப்பிடும்போது, டிவிஎஸ் ரேடியான் ரூ. 67,100 என்ற மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த வாய்ப்பாக அமைகிறது. ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விலை சுமார் ரூ. 78,688 எனச் சற்று அதிகமாக இருந்தாலும், அதன் அதிகப்படியான மறுவிற்பனை மதிப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக மக்கள் தொடர்ந்து தேர்வு செய்கின்றனர். சாலை வரி மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்கள் சேர்க்கப்படும் போது இறுதி ஆன்-ரோடு விலை நகரத்திற்கு நகரம் மாறுபடும்.
மைலேஜ் & செயல்திறன்
என்ஜின் பவர் மற்றும் பிக்-அப் விஷயத்தில் ரேடியான் மாடலின் 109.7 சிசி என்ஜின், ஸ்பிளெண்டர் மாடலை விட சற்றே கூடுதலான இழுவைத் திறனை வழங்குகிறது. இதனால் ஏறுபாதைகளிலும், இருவர் செல்லும் போதும் ரேடியான் சற்று சுலபமாகச் செல்லும். ஆனால், பெட்ரோல் சிக்கனம் மற்றும் மைலேஜை முதன்மையாகக் கவனிக்கும் போது, ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் அதிகாரப்பூர்வமாக லிட்டருக்குச் சுமார் 70 கி.மீ வரை தந்து முதலிடத்தைப் பிடிக்கிறது. ரேடியான் மாடலும் சிறந்த மைலேஜ் தரும் என்றாலும், அதிக மைலேஜ் விரும்பிகளுக்கு ஸ்பிளெண்டர் அதிக திருப்தியைத் தரும்.
2 பைக்குகளுமே தினசரி பயன்பாட்டிற்கான கம்ப்யூட்டர் பைக்குகள் என்பதால் டிரம் பிரேக் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் அமைப்பையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. வாங்குவதற்கு முன் உங்கள் ஊர் ஷோரூமில் உள்ளூர் ஆஃபர்கள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் துல்லியமான ஆன்-ரோடு விலை விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

