எப்படி இருந்த கம்பெனி.. ஷோரூம் காத்து வாங்குது.. ஹோண்டாவுக்கு வந்த நிலை
ஹோண்டா தனது ஆக்டிவா இ மற்றும் QC1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தியை ஆகஸ்ட் முதல் நிறுத்தியுள்ளது. விலை குறைவான QC1 மாடல், ஆக்டிவா இ-யை விட அதிக விற்பனையைக் கொண்டுள்ளது.

ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஹோண்டா இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களான Honda Activa e: மற்றும் Honda QC1 மாடல்களை இந்த வருடத்தின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. ஜப்பானிய பிராண்டின் மாடல் என்பதால் அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் SIAM (Society of Indian Automobile Manufacturers) வெளியிட்ட தரவுகள் அதற்கு மாறான நிலையைக் காட்டுகிறது. கிடைத்த தகவலின்படி, 2025 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த இரு மாடல்களும் தயாரிக்கப்படவில்லை.
Activa e விற்பனை
பிப்ரவரி முதல் ஜூலை 2025 வரை ஹோண்டா மொத்தம் 11,168 யூனிட்ஸ் தயாரித்திருந்தாலும், அதில் 5,201 யூனிட்ஸ் (46.6%) மட்டுமே டீலர்கள் அனுப்பப்பட்டுள்ளன. மீதம் உள்ள சரக்கு விற்காமல் இருப்பதே தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்துவதற்கான காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த 5,201 வாகனங்களில் 4,461 யூனிட்ஸ் QC1 ஆகும்; இதன் விற்பனை Activa e: விட மிக அதிகம். QC1 மாடலுக்கு குறைந்த விலை மற்றும் portable charger வசதி இருப்பது முக்கியமான காரணங்கள். இதே நேரத்தில் ஆக்டிவா இ: முழுமையாக ஹோண்டா ஸ்வாப்பபிள் பேட்டரி நெட்வொர்க் மீது சார்ந்துள்ளது.
விலை ஒப்பீடு
ஹோண்டா ஆக்டிவா இ: ரூ.1.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), ரேஞ்ச்: 102 கிமீ. Honda QC1: ரூ.90,022 (எக்ஸ்-ஷோரூம்), ரேஞ்ச்: 80 கிமீ. விலை குறைவாக இருப்பது மற்றும் பயன்படுத்துவது எளிது எனும் காரணங்களால் QC1 அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இந்திய EV சந்தையில் TVS, Bajaj, Ola, Ather, Hero போன்ற பிராண்டுகளின் போட்டியும் விற்பனை குறைவு காரணமாக இருக்கலாம்.
உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்
விற்பனை நகரங்களும் முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன. QC1 தற்போது மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், புனே, சண்டிகர்க் ஆகிய 6 நகரங்களில் கிடைக்கிறது. ஆனால் Activa e: மிகக் குறைந்த நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. நாடு முழுவதும் கிடைக்காததால் விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை. வருங்காலத்தில் ஹோண்டா விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்தி உற்பத்தியை மீண்டும் தொடங்குமா என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

