7 சீட்டர் வசதி.. ரூ.8.68 லட்சத்தில் விலை.. ரூ.1.35 லட்சம் தள்ளுபடி வேற இருக்கு
மஹிந்திரா பொலிரோ இந்த ஆண்டு 82,915 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. ஆண்டு இறுதியில் 1 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பொலிரோ கிளாசிக், நியோ மாடல்களுக்கு ரூ.1.35 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா கார் தள்ளுபடி
மஹிந்திராவின் விற்பனையில் எப்போதும் முன்னிலை வகிக்கும் மாடல்களில் ஒன்று பொலிரோ. ஸ்கார்பியோவுக்குப் பிறகு அதிகமாக விற்கப்படுவது இதுவே. இந்த ஆண்டில் இதுவரை 82,915 பொலிரோ யூனிட்டுகள் பதிவாகி உள்ளன. இன்று நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், பொலிரோ விற்பனை 1 லட்சத்தைத் தாண்டும் என்ற கணிப்பு வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, ஆண்டு இறுதியில் டீலர்கள் வழங்கும் தள்ளுபடி சலுகைகள், இந்த மாடல் மீது வாங்குபவர்களின் கவனம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
மஹிந்திரா பொலிரோ
இந்த ஆண்டு பொலிரோ கிளாசிக் மற்றும் பொலிரோ நியோ ஆகிய இரு மாதங்களும் சேர்ந்து 82,915 யூனிட்கள் விற்றுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் 86,805 யூனிட்கள் விற்றிருந்தன. இதன் மூலம் விற்பனையில் சுமார் 4.7% குறைவு உள்ளது. தற்போது பொலிரோ வாங்குவோருக்கு ரூ.1.35 லட்சம் வரை ஆஃபர் கிடைக்கிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரொக்கத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பொலிரோ கிளாசிக் விலை ரூ.8.68 லட்சத்தில் தொடங்குகிறது; பொலிரோ நியோ மாடல் ரூ.8.92 லட்சத்திலிருந்து கிடைக்கிறது.
பொலிரோ நியோ புதிய அம்சங்கள்
புதிய பொலிரோ நியோவில் பல தோற்ற மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரூஃப் ஸ்கை ரேக், புதிய ஃபாக் லைட்கள், DRL இணைந்த எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ஸ்பேர் வீல் கவரின் புதிய நிறம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. உள்ளமைப்பில், டூயல் டோன் லெதர் இருக்கைகள், உயரத்தை சரிசெய்யும் டிரைவர் சீட், இரு வரிசை ஆர்ம்ரெஸ்ட் மற்றும் சில்வர் ஃபினிஷ் சென்டர் கன்சோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 7-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டமும் உள்ளது.
7 சீட்டர் சப்-4 மீட்டர் எஸ்யூவி
ஆனால் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே ஆதரவு இல்லை. இது 7 சீட்டர் சப்-4 மீட்டர் எஸ்யூவியாகும். 1.5-லிட்டர் mHawk100 டீசல் இன்ஜின் 100bhp பவர் மற்றும் 260Nm டார்க்கை வழங்குகிறது. 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் இது சந்தையில் கிடைக்கும் ஒரே விருப்பம். பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக், கிராஷ் சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

