காரில் ஏசி பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா? மறக்காம இதை செஞ்சுட்டு ஏசியை ON பண்ணுங்க!
வெயில் காலத்தில் பயணம் செய்யும் போது, காரில் ஏறிய உடனேயே ஏசியை ஆன் செய்யாதீர்கள். ஏனெனில் கார் டேஷ்போர்டுகள், இருக்கைகள் மற்றும் ஏர் ஃப்ரெஷ்னர்களில் இருந்து வெளியாகும் பென்சைம் என்ற விஷ வாயு, அபாயகரமான புற்றுநோயை உண்டாக்கும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். கோடை காலத்தில் ஏசி பயன்படுத்தும் முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
Air Conditioner in Cars
கார்களில் உள்ள ஏசி வசதி கோடை வெயிலில் இருந்து இளைப்பாற மிகவும் பயன்படுகிறது. ஆனால், வெயில் காலங்களில் வாகனங்களில் ஏசியை இயக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவும். ஏசியை அலட்சியமாகப் பயன்படுத்தக் கூடாது என சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
கார் டேஷ்போர்டுகள், இருக்கைகள் மற்றும் ஏர் ஃப்ரெஷ்னர்களில் இருந்து வெளியாகும் பென்சைம் என்ற விஷ வாயு, அபாயகரமான புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறுகின்றனர். கோடை காலத்தில் ஏசி பயன்படுத்தும் முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
Car AC and cancer
வெயிலில் நிறுத்தப்பட்ட காரில் நுழைந்த உடனேயே ஏசியை ஆன் செய்தால், நச்சு வாயுவை அதிக அளவில் சுவாசிக்க நேரிடும். வெப்பமான பகுதியில் நிறுத்தப்படும் காரில் பின்சைம் அளவு உயர்கிறது. பென்சைம் என்பது மூடிய அறை அல்லது காரில் பென்சைம் அளவு சதுர அடிக்கு 50 மி.கி. என்ற அளவில் இருப்பதுதான் பாதுகாப்பானது. ஆனால், வெயிலில் நிறுத்தப்பட்ட காரில் இது 2000 முதல் 4000 மி.கி வரை உயரும். இது கிட்டத்தட்ட 40 மடங்கு அதிகம்.
பென்சைம் வாயுவை உள்ளிழுப்பது எலும்புகளைப் பாதிக்கிறது. வெள்ளை இரத்த அணுக்கள் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். பென்சைம் வாயு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கும் நச்சுத்தன்மை உடையது. மருத்துவ சிகிச்சையின் மூலம் இந்த நச்சு வாயுவை அகற்றுவது மிகவும் கடினம்.
Using Car AC
அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி, ஏசியை ஆன் செய்யும் முன் அனல் காற்றை வெளியேற்றுவது நல்லது என்றும், பென்சைம் மட்டும் இதற்குக் காரணம் இல்லை என்றும் கூறுகிறது. அதாவது, நீண்ட நேரம் வெயிலில் காரை நிறுத்தியிருந்தால் அனைத்து ஜன்னல்களையும் கீழே இறக்கி, சூடான காற்று வெளியேற அனுமதிக்க வேண்டும். பிறகு கண்ணாடியை மூடிவிட்டு ஏசியை ஆன் செய்யலாம்.
தூய காற்று உள்ளே இருக்கும்போது ஏசியை ஆன் செய்தால், காருக்குள் இருக்கும் காற்றை ஏசி விரைவாகக் குளிர்விக்கிறது. இருந்தும் ஏசியின் குளிர்ச்சி குறைவது போல் தெரிந்தால், ஏசியை மெக்கானிக் மூலம் சரிபார்க்கலாம்.