செப்டம்பரில் அதிகம் ஸ்விப்ட் கார்தான் வாங்கி இருக்காங்க; இதுதாங்க காரணம்!!
செப்டம்பர் 2024 இல் இந்தியாவில் ஹேட்ச்பேக் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய மாடல்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வேகன் ஆர்.ஐ பின்னுக்கு தள்ளி ஸ்விப்ட் முதல் இடம் பிடித்துள்ளது.
Maruti Suzuki Swift
கடந்த மாதம் அதாவது செப்டம்பர் 2024ல் நாட்டில் ஹேட்ச்பேக் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய மாடல்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான அறிக்கையின்படி, கடந்த மாதம் இந்திய மக்களின் ரசனையில் மீண்டும் ஒருமுறை மாற்றம் ஏற்பட்டுள்ளது. உண்மையில், ஆகஸ்ட் மாதத்தில் ஹேட்ச்பேக் பிரிவில் நம்பர்-1 ஆக இருந்த மாருதி சுஸுகி வேகன்ஆர், செப்டம்பரில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில், இரண்டாவது இடத்தில் இருந்த மாருதி ஸ்விஃப்ட் செப்டம்பர் மாதம் முதல் இடத்தை எட்டியது. வெளிவந்துள்ள டாப்-7 மாடல்கள் பட்டியலில் மாருதியின் 4 மாடல்களும், டாடாவின் ஒரு மாடலும், ஹூண்டாய் நிறுவனத்தின் 2 மாடல்களும் இடம் பெற்றுள்ளன.
Maruti Suzuki Swift
அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்கள் செப்டம்பர் 2024
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் | 16,854 |
மாருதி சுஸுகி வேகன்ஆர் | 16,191 |
மாருதி சுஸுகி பலேனோ | 9309 |
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 | 7353 |
டாடா டியாகோ | 5665 |
ஹூண்டாய் ஐ20 | 4937 |
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் | 4922 |
புதிய ஜென் ஸ்விஃப்ட்டின் வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் விவரங்கள்
முற்றிலும் அட்ராக்டிவ் இன்டீரியர் டிசைனுடன் ஆடம்பரமான கேபின் வசதியுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பின்புற ஏசி வென்ட்கள் உள்ளன. இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர் மற்றும் டூயல் சார்ஜிங் போர்ட்கள் கிடைக்கும். இதில் ரியர் வியூ கேமரா வசதியும் உள்ளது, இதனால் டிரைவர் காரை எளிதாக பார்க்கிங் செய்ய முடியும். இது 9 இன்ச் ஃப்ரீ-ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் திரையைக் கொண்டுள்ளது.
Maruti Suzuki Swift
புதிதாக வடிவமைக்கப்பட்ட டேஷ்போர்டு இதில் உள்ளது. வயர்லெஸ் இணைப்புடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை இந்த திரை ஒத்து இருக்கிறது. பலேனோ மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற அதே ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல் பேனலுடன் சென்டர் கன்சோல் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, புதிய LED ஃபாக் லேம்ப் கிடைக்கிறது.
நிறுவனம் LXi, VXi, VXi (O), ZXi, ZXi+ மற்றும் ZXi+ Dual Tone ஆகிய 6 வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலையைப் பார்க்கையில், 2024 மாருதி ஸ்விஃப்ட் பேசிக் வேரியண்ட் எல்எக்ஸ்ஐயின் விலை ரூ.6.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. டாப் மாடல் ZXi டூயல் டோனுக்கு ரூ.9.64 லட்சம் வரை செல்கிறது.
Maruti Wagon R Waltz Edition
அதன் இன்ஜின் பவர்டிரெய்னை பார்க்கும் போது, ஒரு புத்தம் புதிய Z சீரிஸ் எஞ்சின் இதில் காணப்படும். இது பழைய ஸ்விஃப்ட் உடன் ஒப்பிடும்போது மைலேஜை கணிசமாக அதிகரிக்கிறது. இதில் காணப்படும் புத்தம் புதிய 1.2L Z12E 3-சிலிண்டர் NA பெட்ரோல் இன்ஜின் 80bhp ஆற்றலையும் 112nm டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது.
முந்தைய வடிவத்தின் சாயல் லேசாக இதில் காணப்படுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் விருப்பங்களைக் கொண்டுள்ளது. அதன் மைலேஜ், மேனுவல் எஃப்இ வேரியண்ட்டுக்கு 24.80 கிமீ மைலேஜும், ஆட்டோமேட்டிக் எஃப்இ வேரியண்ட்டுக்கு 25.75 கிமீ மைலேஜும் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதி அளிக்கிறது.
Swift
புதிய ஸ்விஃப்ட்டின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், இஎஸ்பி, புதிய சஸ்பென்ஷன் மற்றும் அனைத்து வகைகளுக்கும் 6 ஏர்பேக்குகள் கிடைக்கும். க்ரூஸ் கன்ட்ரோல், அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் விநியோகம் (இபிடி), பிரேக் அசிஸ்ட் (பிஏ) போன்ற அற்புதமான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.