MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 11 தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட டிடிவி.தினகரன்.. மூன்று திமுக அமைச்சர் தொகுதிகளில் மோதும் அமமுக

11 தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட டிடிவி.தினகரன்.. மூன்று திமுக அமைச்சர் தொகுதிகளில் மோதும் அமமுக

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள டிடிவி தினகரனின் அமமுக, 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சைதாப்பேட்டை, மன்னார்குடி, திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில் திமுகவின் முக்கிய அமைச்சர்களை எதிர்த்து அமமுக போட்டியிடுகிறது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 28 2026, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிமுக அமமுக கூட்டணி
Image Credit : Asianet News

அதிமுக அமமுக கூட்டணி

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் திமுக அரசு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ததை அடுத்து வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள டிடிவி.தினகரனின் அமமுகவுக்கு மன்னார்குடி, காரைக்குடி, சைதாப்பேட்டை, திருச்சி மேற்கு, நாங்குநேரி உள்ளிட்ட 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
டிடிவி.தினகரன்
Image Credit : our own

டிடிவி.தினகரன்

இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் பட்டியலை டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Related image1
கோடை விடுமுறை 45 நாட்கள் இல்லை! பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
Related image2
மதுப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!
34
அமமுக வேட்பாளர் பட்டியல்
Image Credit : Asianet News

அமமுக வேட்பாளர் பட்டியல்

அதில், பெரியகுளம்- டாக்டர் கே.கதிர்காமு, மன்னார்குடி- எஸ்.காமராஜ், திருவையாறு- வி.கார்த்திகேயன், காரைக்குடி- தெர்போகி பண்டியன், திருப்பத்தூர்- ஞானசேகர், நாங்குநேரி- இசக்கி முத்து, ஒட்டப்பிடாரம்-ஆர்.சுந்தர்ராஜ், திருச்சி மேற்கு - ராஜசேகரன், சைதாப்பேட்டை-செந்தமிழன், பூந்தமல்லி-டி.ஏ.ஏழுமலை, மடத்துக்குளம்- சி.சண்முகவேலு உள்ளிட்டோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அமமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் டிடிவி.தினகரன் அறிவித்தார்.

அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரும்பும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை, தமிழகம் முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிகிச்சை,மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.

44
மூன்று திமுக அமைச்சர்களுடன் மோதும் அமமுக
Image Credit : F/KN Nehru

மூன்று திமுக அமைச்சர்களுடன் மோதும் அமமுக

மூன்று திமுக அமைச்சர் தொகுதிகளில் அமமுக மோதுகிறது. சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன், மன்னார்குடி டிஆர்பி ராஜா, திருச்சி மேற்கு கே்.என்.நேரு ஆகியோர் தொகுதிகளில் அமமுக களமிறங்க உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள் சண்முகவேல், செந்தமிழன் ஆகிய இரண்டு பேருக்கு டிடிவி தினகரன் வய்ப்பு அளித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமி
திமுக
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahindra BE 6 எலக்ட்ரிக் காருக்கு 2 லட்சம் தள்ளுபடி! வாரி வழங்கும் மஹிந்திரா
Recommended image2
Tata Motors SUV : 5 மாதத்தில் 30,000 கார்கள் விற்று மாஸ் காட்டும் டாடா மோட்டார்ஸ்.. எந்த கார் தெரியுமா?
Recommended image3
Honda NX500: பைக் ஓட்டுவதில் மாபெரும் புரட்சி! கிளட்ச் இல்லாமலேயே கியர் மாற்றலாம்.. ஹோண்டா NX500 அதிரடி அறிமுகம்!
Related Stories
Recommended image1
கோடை விடுமுறை 45 நாட்கள் இல்லை! பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
Recommended image2
மதுப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved