MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோடை விடுமுறை 45 நாட்கள் இல்லை! பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?

கோடை விடுமுறை 45 நாட்கள் இல்லை! பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?

School Student: கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 28 2026, 07:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக சட்டப்பேரவை தேர்தல்
Image Credit : our own

தமிழக சட்டப்பேரவை தேர்தல்

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாக உள்ளது. ஆகையால் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு முழு ஆண்டு தேர்வு அட்டவணையில் அதிரடி மாற்றம் செய்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முழு ஆண்டு தேர்வு
Image Credit : our own

முழு ஆண்டு தேர்வு

அதாவது அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 16ம் தேதி நடைபெறுகிறது. இதில் 1ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 2ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 3ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12 மணி வரையிலும், 4ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 5ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது.

35
முழு ஆண்டு தேர்வு அட்டவணை
Image Credit : Google

முழு ஆண்டு தேர்வு அட்டவணை

அதேபோல் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 தேதி 16 வரை தேர்வு நடைபெறுகிறது. இதில் 6ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

45
 ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு
Image Credit : our own

ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 1ம் தேதி வெள்ளிக்கிழமை திறக்கப்படுமா அல்லது தேதி மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களின் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ம் தேதி திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

55
பள்ளி திறப்பு தள்ளிபோக வாய்ப்பு
Image Credit : Google

பள்ளி திறப்பு தள்ளிபோக வாய்ப்பு

எனினும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
விடுமுறை
பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
இந்தியா கூட்டணி கூட்டம் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை ! - சென்னையில் மாணிக்கம் தாகூர் பேட்டி!
Recommended image2
Crop Loan: விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! பயிர்க் கடன் வசூல் முற்றிலும் நிறுத்தம் – தமிழ்நாடு அரசு அதிரடி!
Recommended image3
Now Playing
தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!
Related Stories
Recommended image1
ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு.. தமிழக அரசு கொடுத்த முக்கிய அப்டேட்!
Recommended image2
நாளை உஷாரா இருங்க மக்களே! எச்சரித்த கையோடு ட்விஸ்ட் வைத்த வானிலை மையம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved