MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 4 ரைடிங் மோட்ஸ், 40 கி.மீ மைலேஜ்: கூகுள் மேப்ஸ் வசதியுடன் புதிய 2026 பஜாஜ் பல்சர் NS200 & N250; தீபாவளிக்கு மாஸ் என்ட்ரி!

4 ரைடிங் மோட்ஸ், 40 கி.மீ மைலேஜ்: கூகுள் மேப்ஸ் வசதியுடன் புதிய 2026 பஜாஜ் பல்சர் NS200 & N250; தீபாவளிக்கு மாஸ் என்ட்ரி!

கூகுள் மேப்ஸ் வசதியுடன் 5-இன்ச் TFT திரை, 4 ரைடிங் மோடுகள் மற்றும் WP Apex USD சஸ்பென்ஷனுடன் களமிறங்கும் புதிய 2026 பஜாஜ் பல்சர் NS200 & N250 பைக்குகளின் முழு அம்சங்கள் பற்றி பார்ப்போம்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 20 2026, 06:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
புதிய 2026 பஜாஜ் பல்சர் NS200, N250 பைக்குகளின் முழு அம்சங்கள்
Image Credit : Bajaj Pulsar

புதிய 2026 பஜாஜ் பல்சர் NS200, N250 பைக்குகளின் முழு அம்சங்கள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் சுமீத் நாரங் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தபடி, தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ள புதிய '2026 பஜாஜ் பல்சர் NS200' மற்றும் 'பல்சர் N250' பைக்குகளின் முழுமையான சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பல்சர் N160 S, N160 SS மற்றும் அடுத்த தலைமுறை பல்சர் 125, 150 பைக்குகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த 2 பவர்ஃபுல் பைக்குகளையும் புதிய ரேசிங் பாகங்களுடன் பஜாஜ் களமிறக்கவுள்ளது. பழைய மாடல்களின் அதே கம்பீரமான தோற்றம் மற்றும் பெட்ரோல் டேங்க் டிசைனைத் தக்கவைத்துக் கொண்டு, கார் மற்றும் கேடிஎம் (KTM) பைக்குகளுக்கு இணையான அட்வான்ஸ்டு வசதிகளுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கூகுள் மேப்ஸ் வசதியுடன் 5-இன்ச் TFT டிஸ்பிளே
Image Credit : x

கூகுள் மேப்ஸ் வசதியுடன் 5-இன்ச் TFT டிஸ்பிளே

இந்த 2 மாடல் பைக்குகளிலும் செய்யப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம், புத்தம் புதிய 5-இன்ச் டிஎஃப்டி (TFT) வண்ண டிஜிட்டல் டிஸ்ப்ளே திரை ஆகும். ப்ளூடூத் மற்றும் வைஃபை (WiFi) மூலம் ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொள்ளலாம். பிரீமியம் கார்களில் இருப்பதைப் போன்று கூகுள் மேப்ஸ் மிரரிங் (Google Maps Mirroring) நேவிகேஷன் வசதியை இந்தத் திரை முழுமையாக ஆதரிக்கிறது.

பைக் ஓட்டுபவர்கள் தங்களது அசல் ஆர்சி புக் (RC), இன்சூரன்ஸ் பேப்பர் மற்றும் ஓட்டுநர் உரிமம் (DL) போன்ற ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கும் பிரத்யேக வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்களைக் கட்டுப்படுத்தும் மியூசிக் கன்ட்ரோல் வசதி, ஸ்கிரீனை கைகளால் எளிதாகக் கட்டுப்படுத்த ஹேண்டில்பாரில் உயர்தர சுவிட்ச் கியர் பாகங்கள் (Upscale Switchgear) அமைக்கப்பட்டுள்ளன.

35
WP Apex USD சஸ்பென்ஷன் & அட்ஜஸ்டபிள் லிவர்கள்
Image Credit : 2026 Bajaj Pulsar

WP Apex USD சஸ்பென்ஷன் & அட்ஜஸ்டபிள் லிவர்கள்

புதிய 2026 பல்சர் NS200 பைக்கின் ஓட்டுதல் தரம் மற்றும் கார்னரிங் ஸ்டெபிலிட்டியை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய உள்கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது: கேடிஎம் மற்றும் ஹஸ்குவர்னா போன்ற சர்வதேச ரேசிங் பைக்குகளுக்குச் சஸ்பென்ஷன் தயாரிக்கும் உலகப் புகழ்பெற்ற 'டபிள்யூபி பெர்ஃபார்மன்ஸ் சிஸ்டம்ஸ்' நிறுவனத்தின் WP Apex USD சஸ்பென்ஷன் போர்க்குகள் இந்த பைக்கின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

பல்சர் பைக் வரலாற்றிலும், ஒட்டுமொத்த பஜாஜ் நிறுவனத் தயாரிப்புகளிலும் இந்த பிரீமியம் WP சஸ்பென்ஷனைப் பெறும் முதல் பைக் புதிய பல்சர் NS200 ஆகும். இது இந்திய சாலைகளின் பள்ள மேடு மென்மையாக உள்வாங்கிக்கொள்ளும். மேலும், ரைடரின் கை விரல்களின் நீளத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளும் 'அட்ஜஸ்டபிள் லிவர்கள்' (Adjustable Levers) வசதியும் NS200 மாடலில் பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது.

45
4 புதிய ரைடிங் மோடுகள் & லேப் டைமர்
Image Credit : New Pulsar

4 புதிய ரைடிங் மோடுகள் & லேப் டைமர்

சந்தையில் உள்ள பிற பிரீமியம் பைக்குகளுக்குப் போட்டியாக, இரண்டு பைக்குகளிலுமே வெவ்வேறு சாலைகளுக்கு ஏற்ப வண்டியின் செயல்திறனை மாற்றியமைக்க 4 புதிய ரைடிங் மோடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ரெயின் (Rain)

ஸ்போர்ட் (Sport)

ரோடு (Road)

ஆஃப்-ரோடு (Off-road)

பந்தய களங்களில் வேகத்தைக் கணக்கிட விரும்பும் இளைஞர்களுக்காக பிரத்யேகமாக 'லேப் டைமர்' (Lap Timer) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கான 'ஹஸார்ட் விளக்கு சுவிட்ச்' மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் சுவிட்சுகள் ஹேண்டில்பாரின் வலது பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

55
இன்ஜின் விவரங்கள் & மைலேஜ், விற்பனை & முன்பதிவு
Image Credit : New Pulsar

இன்ஜின் விவரங்கள் & மைலேஜ், விற்பனை & முன்பதிவு

புதிய வசதிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும், இன்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் பழைய நம்பகமான இன்ஜின்களே தொடர்கின்றன.

பல்சர் NS200: 199.5cc சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின்.

பல்சர் N250: 249cc சிங்கிள் சிலிண்டர், ஏர்/ஆயில்-கூல்டு இன்ஜின் (24.2 bhp பவர், 21.5 Nm டார்க் திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ்).

மைலேஜ் திறன்:பல்சர் NS200: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக 35 முதல் 40 கி.மீ.

பல்சர் N250: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக 32 முதல் 36 கி.மீ.

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இன்னும் சில நாட்களில் ஷோரூம்களுக்கு வரவிருக்கும் இந்த பைக்குகளின் அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் லான்ச்சின் போது வெளியிடப்படும். தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஷோரூம்களில் இந்த புதிய பைக்குகளுக்கான முன்பதிவுகள் மிக விரைவில் தொடங்கவுள்ளன.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆட்டோ செய்திகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Toyota Fortuner Alternatives: டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு பதிலா 2026-ல வாங்கக்கூடிய 5 சூப்பர் SUVகள்!
Recommended image2
Hero VIDA V2 Pro: 165 கி.மீ பயணம், கழற்றி சார்ஜ் செய்யலாம்! விடா வி2 ப்ரோ ஸ்கூட்டரின் விலை இவ்வவளவு தானா
Recommended image3
நடுத்தர மக்களுக்கு பம்பர் ஆஃபர்.. ரூ.6 லட்சம் கூட இல்ல.. நிஸானின் மிரட்டலான 7 சீட்டர் கார் அறிமுகம்!
Related Stories
Recommended image1
பெட்ரோல் பங்க், மளிகைக் கடைகளில் UPI பேமெண்ட் செய்தால் எக்ஸ்ட்ரா கட்டணமா? முழு விவரம்!
Recommended image2
2026-ன் டாப் 10 இளம் பில்லியனர்கள்: ஏ.ஐ. புரட்சியால் உயர்ந்த இளம் கோடீஸ்வரர்கள்; முதலிடத்தில் ஸ்டீவன் ஹாவ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved