MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பெட்ரோல் பங்க், மளிகைக் கடைகளில் UPI பேமெண்ட் செய்தால் எக்ஸ்ட்ரா கட்டணமா? முழு விவரம்!

பெட்ரோல் பங்க், மளிகைக் கடைகளில் UPI பேமெண்ட் செய்தால் எக்ஸ்ட்ரா கட்டணமா? முழு விவரம்!

UPI Payment: UPI பேமெண்ட்களுக்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் பங்க், மளிகைக் கடைகளில் UPI பேமெண்ட் செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 20 2026, 02:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
UPI பேமெண்ட்களுக்கு கட்டணம்
Image Credit : X

UPI பேமெண்ட்களுக்கு கட்டணம்

டிஜிட்டல் இந்தியாவில் UPI பயன்படுத்தும் மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. அக்டோபர் 15, 2026 முதல் UPI-க்கான புதிய மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் (MDR) நடைமுறைக்கு வரவுள்ளது. நிதி அமைச்சகம் 'X' தளத்தில் அளித்த தகவல்படி, 2,000 ரூபாய்க்கு மேல் நடக்கும் குறிப்பிட்ட வியாபார (P2M) பரிவர்த்தனைகளுக்கு மட்டும்தான் இந்த புதிய விதிமுறை பொருந்தும். இதில் பெரிய நிம்மதி என்னவென்றால், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு UPI பேமெண்ட் எப்போதும் போல முற்றிலும் இலவசம் ஆகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
எந்த 10 வகையான பேமெண்ட்களுக்கு MDR கட்டணம் வசூலிக்கப்படும்?
Image Credit : Gemini | AI Generated

எந்த 10 வகையான பேமெண்ட்களுக்கு MDR கட்டணம் வசூலிக்கப்படும்?

நிதி அமைச்சகத்தின் அறிக்கைப்படி, 2000 ரூபாய்க்கு மேல் நடக்கும் பல மெர்ச்சன்ட் மற்றும் துறை சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு MDR பொருந்தும்:

எந்தெந்த பேமெண்ட்களுக்கு கூடுதல் கட்டணம்?

2000 ரூபாய்க்கு மேல் செய்யப்படும் சாதாரண மெர்ச்சன்ட் (கடைக்காரர்கள்) பேமெண்ட்கள்

2000 ரூபாய்க்கு மேல் ரயில்வே டிக்கெட் பேமெண்ட்கள்

2000 ரூபாய்க்கு மேல் டெலிகாம் / மொபைல் ரீசார்ஜ் பேமெண்ட்கள்

2000 ரூபாய்க்கு மேல் இன்சூரன்ஸ் பிரீமியம் பேமெண்ட்கள்

2000 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் / டீசல் பேமெண்ட்கள்

2000 ரூபாய்க்கு மேல் விவசாய பொருட்கள் (விதை / உரம்) பேமெண்ட்கள்

மியூச்சுவல் ஃபண்ட் பேமெண்ட்கள்

பத்திரங்கள் (Securities) தொடர்பான பேமெண்ட்கள்

ஸ்டாக் புரோக்கர் பேமெண்ட்கள்

பங்குச்சந்தை டீலர்களுக்கான பேமெண்ட்கள்

34
கட்டணம் மற்றும் உச்சவரம்பு (Capping) முழு விவரம்
Image Credit : Gemini AI

கட்டணம் மற்றும் உச்சவரம்பு (Capping) முழு விவரம்

வெவ்வேறு துறைகளுக்கு தனித்தனி MDR விகிதங்கள்

சாதாரண மெர்ச்சன்ட் பேமெண்ட்: 2000 ரூபாய்க்கு மேலான பேமெண்ட்களுக்கு 0.4% கட்டணம் இருக்கும். 75 ஆயிரம் அல்லது அதற்கும் மேலான பேமெண்ட்களுக்கு அதிகபட்சமாக 300 ரூபாய் (கேப்பிங்) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய துறைகள் (ரயில்வே, பெட்ரோல், இன்சூரன்ஸ், டெலிகாம்): லாபம் குறைவான இந்த துறைகளுக்கு சதவீத அடிப்படையில் இல்லாமல், வெறும் 5 ரூபாய் மட்டும் ஃப்ளாட் கட்டணமாக வசூலிக்கப்படும்.

பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்: கேப்பிட்டல் மார்க்கெட் பேமெண்ட்களுக்கு 0.2% சாதாரண MDR கட்டணம் இருக்கும். இது அதிகபட்சம் 300 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்படும்.

44
சிறு கடைக்காரர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது
Image Credit : Asianet News

சிறு கடைக்காரர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது

சிறு வியாபாரிகளுக்கு இந்த விதிமுறையில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. QR கோடு மூலமாக மாதம் 1 லட்சம் வரைக்கும் வருமானம் ஈட்டும் சிறு வியாபாரிகளிடம் (P2PM பிரிவு) எந்த பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

உங்கள் செலவில் என்ன பாதிப்பு வரும்?

இந்த MDR கட்டண சுமை வியாபாரிகளுக்கானதுதான், வாடிக்கையாளர்களுக்கு கிடையாது என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. வங்கிகள் மற்றும் ஆப்கள் (Google Pay, PhonePe போன்றவை) வாடிக்கையாளர்களிடம் இருந்து பிளாட்ஃபார்ம் கட்டணமோ அல்லது மறைமுக கட்டணமோ வசூலிக்க முடியாது.

வியாபாரிகள் இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டக்கூடாது என்று அமைச்சகம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. நபர்களுக்கு இடையிலான (P2P) பேமெண்ட்கள் மற்றும் 2000 ரூபாய் வரையிலான சிறு வியாபாரி பேமெண்ட்களுக்கு 0% MDR தான் தொடரும். அதாவது, நாட்டில் நடக்கும் சுமார் 96% வியாபாரி பரிவர்த்தனைகளில் இந்த புதிய விதிமுறையால் எந்த பாதிப்பும் வராது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
UPI கொடுப்பனவு
ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற இடைமுகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Subsidy: LPG சிலிண்டர் வாங்க அக்டோபர் 1 முதல் ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்.. மானியம் கிடைக்குமா..?
Recommended image2
OYO Rooms Rules: லோக்கல் ஐடி இருந்தா ரூம் கிடைக்காதா? சட்டம் என்ன சொல்கிறது?
Recommended image3
UPI for 30 Days: 30 நாள் யுபிஐ பயன்படுத்தாமல் இருந்தால் என்ன ஆகும்? உண்மையில் எவ்வளவு பணம் மிச்சமாகும்?
Related Stories
Recommended image1
Google Pay, PhonePe-க்கு செக் வைக்கும் ChatGPT! AI மூலம் இனி UPI பேமெண்ட்!
Recommended image2
UPI பேமெண்ட் இனி படிக்காதவங்க கூட ஈசியா பணம் அனுப்பலாம்..! Face, ஃபிங்கர்பிரிண்ட் மூலம் பணம் அனுப்பும் வசதி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved