MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 2026-ன் டாப் 10 இளம் பில்லியனர்கள்: ஏ.ஐ. புரட்சியால் உயர்ந்த இளம் கோடீஸ்வரர்கள்; முதலிடத்தில் ஸ்டீவன் ஹாவ்!

2026-ன் டாப் 10 இளம் பில்லியனர்கள்: ஏ.ஐ. புரட்சியால் உயர்ந்த இளம் கோடீஸ்வரர்கள்; முதலிடத்தில் ஸ்டீவன் ஹாவ்!

அமெரிக்காவின் முன்னணி வணிக இதழான ஃபோர்ப்ஸ் (Forbes), நடப்பு 2026-ம் ஆண்டிற்கான 'ஃபோர்ப்ஸ் 400' பட்டியலின் அடிப்படையில் உலகின் மிக இளம் 10 பில்லியனர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 20 2026, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஏ.ஐ அசுர அலை... 30 வயதில் கோடீஸ்வரரான இளைஞர்!
Image Credit : Chatgpt

ஏ.ஐ அசுர அலை... 30 வயதில் கோடீஸ்வரரான இளைஞர்!

உலகப் பணக்காரர்களின் வரிசையைத் தீர்மானிக்கும் 'ஃபோர்ப்ஸ் 400' (Forbes 400) பட்டியலில் இந்த முறை ஒரு மாபெரும் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது. காரணம், உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்.

கடந்த ஆண்டு வரை 40 வயதுக்குட்பட்ட இளம் பில்லியனர்கள் 4 பேர் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், இந்த 2026-ல் அந்த எண்ணிக்கை 7-ஆக எகிறியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய சுவாரசியம் என்னவென்றால், புதிதாக இணைந்த அந்த 7 பேருமே தங்களது அபார சொத்து மதிப்பிற்கு AI புரட்சிக்கே முழு நன்றியையும் கடன் பட்டுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஒரே நிறுவனத்தில் இருந்து 4 பில்லியனர்கள்: 'ஆந்த்ரோபிக்' செய்த மேஜிக்!
Image Credit : chatgpt

ஒரே நிறுவனத்தில் இருந்து 4 பில்லியனர்கள்: 'ஆந்த்ரோபிக்' செய்த மேஜிக்!

புதிய 7 இளம் பில்லியனர்களில் நால்வர், 2021-ல் தொடங்கப்பட்ட 'ஆந்த்ரோபிக்' (Anthropic) என்ற ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது டெக் உலகையே புருவம் உயர்த்த வைத்துள்ளது.

இந்நிறுவனத்தின் இணை நிறுவனர்களான டாம் பிரவுன் (39), டேனிலா அமோடி (39), ஜாக் கிளார்க் (37) மற்றும் சாம் மெக்காண்ட்லிஷ் (36) ஆகிய நால்வரும் தலா 15.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.3 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் வரிசைகட்டி நிற்கின்றனர். மேலும், 65 பில்லியன் டாலர் முதலீட்டுடன் 965 பில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டியுள்ள இந்நிறுவனத்தின் 7 இணை நிறுவனர்களும், தங்களது சொத்தில் 80% எதிர்காலத்தில் தொண்டு பணிகளுக்காக அளிக்க உறுதி பூண்டுள்ளனர் என்பது கூடுதல் ஆச்சரியம்.

34
கோடிங் எழுதி சாதனை படைத்த 30 வயது இளைஞர்!
Image Credit : Chatgpt

கோடிங் எழுதி சாதனை படைத்த 30 வயது இளைஞர்!

இந்த ஆண்டின் ஃபோர்ப்ஸ் பட்டியலின் உச்சக்கட்ட ஈர்ப்பு யார் தெரியுமா? உலகின் மிக இளம் பில்லியனர் என்ற மகுடத்தைச் சூடியுள்ள 30 வயது இளைஞர் ஸ்டீவன் ஹாவ் (Steven Hao). இவரது நிகர சொத்து மதிப்பு 5.8 பில்லியன் டாலர். சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திறமையாளரான ஹாவ், 'ஸ்கேல் ஏஐ' நிறுவனத்தை விட்டு வெளியேறி 2023-ல் 'காக்னிஷன்' (Cognition) என்ற மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் உருவாக்கிய முதன்மை ஆயுதம் தான் 'டெவின்' (Devin) என்ற தன்னாட்சி AI ஏஜென்ட்.

மனித உதவியின்றி தானாகவே கோடிங் எழுதுவது, அதில் உள்ள பிழைகளைத் திருத்துவது என ஐடி உலகையே மிரட்டும் இந்த மென்பொருளை சிட்டிபேங்க் மற்றும் பின்டெக் நிறுவனமான ராம்ப் போன்றவை பயன்படுத்துகின்றன. அண்மையில் 48 பில்லியன் டாலர் சந்தை மதிப்பில் 2 பில்லியன் டாலர் நிதி திரட்டிய இந்நிறுவனத்தில், தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் (CTO) பெரும் பங்குதாரராகவும் இருக்கும் ஸ்டீவன் ஹாவ் மட்டுமே, இந்த ஆண்டின் ஃபோர்ப்ஸ் 400 பட்டியலில் நுழையும் தனிப் பெரும் தகுதியைப் பெற்றுள்ளார்.

44
பட்டியலில் கலக்கும் பிற இளம் கோடீஸ்வரர்கள்
Image Credit : Chatgpt

பட்டியலில் கலக்கும் பிற இளம் கோடீஸ்வரர்கள்

ஆன்டுரில் நிறுவனத்தின் பால்மர் லக்கி (33) 5.9 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்திலும், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சாம் மெக்காண்ட்லிஷ் (36) மற்றும் ஜாக் கிளார்க் (37) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். ஓபன் ஏஐ இணை நிறுவனர் கிரெக் ப்ராக்மேன் (37) 25.5 பில்லியன் டாலருடன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சர்ஜ் ஏஐ எட்வின் சென் (38) 6-வது இடத்திலும், இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே பெண் பில்லியனரான ஆந்த்ரோபிக்கின் டேனிலா அமோடி (39) 7-வது இடத்திலும் உள்ளனர். டாம் பிரவுன் (39) 8-வது இடத்தையும், ராபின்ஹூட் விளாட் டெனெவ் (39) 9-வது இடத்தையும் பிடிக்க, வால்மார்ட் வாரிசான லூகாஸ் வால்டன் (39) 44.4 பில்லியன் டாலருடன் இந்த டாப் 10 வரிசையை நிறைவு செய்கிறார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
18 Months DA Arrears: 18 மாத நிலுவை DA தொகை கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
Recommended image2
8th Pay Commission: ரூ.25,000 பென்ஷன் ரூ.87,500 ஆக உயருமா? ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image3
Diwali Bonus 2026: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்? யாருக்கெல்லாம் கிடைத்தது?
Related Stories
Recommended image1
LPG Aadhaar Link: அக்டோபர் 1-க்குள் இதை செய்யலைனா கேஸ் மானியம் கட்!
Recommended image2
பெட்ரோல் பங்க், மளிகைக் கடைகளில் UPI பேமெண்ட் செய்தால் எக்ஸ்ட்ரா கட்டணமா? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved