- Home
- Astrology
- இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் பாறை போன்ற மனம் கொண்டவர்கள்.! இவங்கள அசைத்து பார்க்கவே முடியாதாம்.!
இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் பாறை போன்ற மனம் கொண்டவர்கள்.! இவங்கள அசைத்து பார்க்கவே முடியாதாம்.!
zodiac signs who are not afraid of anything: குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் பாறை போன்ற மன வலிமையும், உடல் வலிமையும் கொண்டவர்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வலிமையான உள்ளம் படைத்த ராசிகள்
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான பண்புகளும், ஆளுமைத் திறன்களும் உண்டு. சில ராசியில் பிறந்தவர்களுக்கு உடல் வலிமையும், மன வலிமையும் அதிகமாக இருக்கும். கடினமான வேலைகளை செய்யும் ஆற்றல் உடல் வலிமை என்றால், சவால்களை எதிர்கொள்வது, அழுத்தங்களை சமாளிப்பது, இலக்குகளை அடைய விடாமுயற்சியுடன் இருப்பது ஆகியவை மனவலிமை எனப்படுகிறது. சில ராசிகள் உடல் வலிமையை மட்டுமல்லாமல் மன வலிமையும் பெற்றுள்ளார்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் இயற்கையாகவே ஆழமான உணர்ச்சித் திறனும், தீவிரமான பண்புகளையும் கொண்டவர்கள். இவர்கள் ஆழமான உளவியல் மற்றும் உணர்ச்சி வலிமையை கொண்டுள்ளனர். சவால்களை கண்டு இவர்கள் பயம் கொள்வதில்லை.
வலி, பயம், பலவீனங்கள் ஆகியவற்றை இவர்கள் நேருக்கு நேர் சந்திக்க தயாராக உள்ளனர். மற்றவர்கள் விலகிச் சென்றால் கடினமான உணர்ச்சிகளில் மூழ்கி விடமால், அதை கடந்து சென்று இன்னமும் வலிமையாகவும் அனுபவ அறிவோடும் வெளி வருவார்கள். இவர்களின் உறுதியான மனம், பழிவாங்கும் குணம் ஆகியவை இவர்களை அசைக்க முடியாதவர்களாக மாற்றுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சனி பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் கடின உழைப்பாளிகள். இலட்சியவாதிகள். இவர்கள் மேற்கொள்ளும் முயற்சியை அவ்வளவு எளிதில் கைவிடமாட்டார்கள். தங்கள் பொறுப்புகளை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதற்கேற்ப கடினமாக உழைப்பார்கள். இலக்குகளை நோக்கி பயணத்தில் எத்தனை கடினமான சூழ்நிலைகளையும் தாங்கிக் கொள்வார்கள்.
தங்கள் லட்சியங்களை நோக்கிய பயணம் மற்றும் நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்தும் ஆற்றல் காரணமாக இவர்கள் அதிகமான வலிமையைக் கொண்டுள்ளனர். இவர்கள் கட்டமைக்கப்பட்ட சூழலில் பொறுப்புடன் செயல்படுவார்கள். அழுத்தம் நிறைந்த, பொறுமையை சோதிக்கும் இடங்களில் கூட தங்கள் திறமையை நிரூபிப்பார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் ஆற்றல், துணிச்சல், உடனடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர்கள். இவர்களின் தைரியம் மற்றும் போர்குணம் ஆகியவை இவர்களின் வலிமையாக மாற்றும். இவர்கள் பிரச்சனைகளை முழு ஆர்வத்துடனும், அச்சமின்றியும் எதிர்கொள்வார்கள்.
ஒரு முறை கீழே விழுந்தால் இரட்டிப்பு பலத்துடன் மீண்டும் எழுவார்கள். இவர்களின் மன உறுதி மற்றவர்களை வியக்க வைக்கும். அழுத்தம் என்பது இவர்களை பயமுறுத்துவதற்குப் பதிலாக, உற்சாகப்படுத்தி விழிப்படையச் செய்யும். இவர்களின் உடல் ஆற்றல் அதிகமாக இருப்பதால் சவாலான பணிகளையும் செய்து முடிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் உறுதியானவர்கள், ஸ்திரத்தன்மை கொண்டவர்கள். பொறுமையாக சூழ்நிலையை கையாளுபவர்கள். எந்த ஒரு எதிர்பாராத அல்லது சிக்கலான சூழ்நிலையையும் அமைதியுடன் எதிர்கொள்வார்கள். அடிப்படை யதார்த்தங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள்.
ஒரு விஷயத்தின் மதிப்பை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப போராட தயாராக இருப்பார்கள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலுவாக இருப்பார்கள். உறுதியற்ற நிலையில் இருப்பவர்களுக்கு இவர்கள் உந்து சக்தியாக திகழ்வார்கள். தங்கள் இலக்குகளை அடைவதற்கு நேரம் எடுத்துக் கொண்டாலும் மன வலிமையுடன் பொறுமையாக இலக்கை நோக்கி பயணிப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரிய பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்களுக்கு இயல்பாகவே தலைமைப் பண்பு மற்றும் மீண்டு வரும் ஆற்றல் உண்டு. இவர்கள் தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர்கள். சவால்களை சந்திக்கும் பொழுது நேர்மறையான அணுகுமுறையுடனும், தடைகளை தாண்டிச் செல்வதற்கான ஆற்றலுடனும் செயல்படுகிறார்கள்.
தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு புதிய உற்சாகத்துடன் மீண்டு வரும் திறனைப் பெற்றிருப்பார்கள். ஒரு சிங்கத்தைப் போலவே இவர்களுக்கும் இயல்பாகவே வலிமையான உடல் மொழி உண்டு. இவர்களை அடக்க நினைப்பவர்கள் தோல்வியையே தழுவுவார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

