MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா...யார் பேச்சையும் கேட்காத 5 ராசிக்காரர்கள்

ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா...யார் பேச்சையும் கேட்காத 5 ராசிக்காரர்கள்

சிலர் பிறர் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்; ஆனால், ஒரு சில ராசிக்காரர்கள் தவறோ சரியோ, தங்கள் சொந்த முடிவுகளின்படி வாழவே விரும்புவார்கள். எதற்காகவும் தன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்காத, மன தைரியம் கொண்ட அந்த ராசிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

2 Min read
Author : Priya Velan
Published : Jul 06 2026, 06:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
யார் பேச்சையும் கேட்காத 5 ராசிக்காரர்கள் :
Image Credit : Getty

யார் பேச்சையும் கேட்காத 5 ராசிக்காரர்கள் :

ஒவ்வொரு மனிதரின் தனித்துவத்திற்கும், அவர்களின் முடிவெடுக்கும் திறனுக்கும் பின்னால் பிரபஞ்சக் கிரகங்களின் ஆதிக்கம் ஒளிந்திருக்கிறது. சிலர் மற்றவர்களின் ஆலோசனைகளை ஏற்று, அதற்கேற்ப தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள். ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு சில ராசிக்காரர்கள் தங்களின் சுயசிந்தனைக்கு மட்டுமே மதிப்பளிப்பார்கள். பிறர் கூறும் அறிவுரைகள் எவ்வளவுதான் சரியாக இருந்தாலும், தங்களின் சொந்த அனுபவமும், உள்ளுணர்வும் சொல்வதையே அவர்கள் இறுதி முடிவாக ஏற்பார்கள்.

இவர்களின் இந்த குணம் சில நேரங்களில் பிடிவாதமாகத் தோன்றினாலும், தங்களின் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற இவர்களின் லட்சிய வெறியே இதற்குக் காரணம். இவர்களின் சுதந்தந்திரமான எண்ணமும், சுய கெளரவத்துடன் வாழ வேண்டும், தனி அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் இவர்களை மற்றவர்களின் பேச்சுக்களை கண்மூடித்தனமாக கேட்க விடாது. அப்படி மற்றவர்களின் பேச்சைக் கேட்காமல், தன் வழியில் மட்டுமே பயணிக்கும் அந்த 5 முக்கிய ராசிக்காரர்களைப் பற்றி இங்கு காண்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மேஷ ராசி (Aries) – தன்னிச்சையாகச் செயல்படும் தளபதிகள் :
Image Credit : Getty

மேஷ ராசி (Aries) – தன்னிச்சையாகச் செயல்படும் தளபதிகள் :

செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற மேஷ ராசியினர் எப்போதுமே தங்களை ஒரு தலைவனாகவே கருதுவார்கள். இவர்களுக்குப் பிறர் கட்டளையிடுவதோ அல்லது புத்திமதி சொல்வதோ சற்றும் பிடிக்காது. ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால், அதில் வரும் லாப நஷ்டங்களைத் தாங்களே எதிர்கொள்ளத் துணிவார்கள். இவர்களின் அகராதியில் 'அனுமதி கேட்பது' என்ற வார்த்தையே கிடையாது.

Related Articles

Related image1
Zodiac Signs : உறவுகளால் அதிகம் காயப்படும் 6 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
Related image2
astrology : 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையை கெடுக்கும் கெட்ட பழக்கங்கள்
36
விருச்சிக ராசி (Scorpio) – ரகசியப் பாதையில் பயணிப்பவர்கள் :
Image Credit : Getty

விருச்சிக ராசி (Scorpio) – ரகசியப் பாதையில் பயணிப்பவர்கள் :

விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் ஆழமான சிந்தனை உடையவர்கள். இவர்கள் தங்களின் திட்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இவர்களின் மனதில் என்ன நடக்கிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. பிறரின் ஆலோசனைகளை அமைதியாகக் கேட்பது போல் நடித்தாலும், இறுதியாகத் தங்கள் உள்ளுணர்வு (Intuition) காட்டும் பாதையிலேயே உறுதியாக நடப்பார்கள்.

46
கும்ப ராசி (Aquarius) – விதியை மாற்ற நினைக்கும் புரட்சியாளர்கள் :
Image Credit : Getty

கும்ப ராசி (Aquarius) – விதியை மாற்ற நினைக்கும் புரட்சியாளர்கள் :

சனி பகவானின் ஆதிக்கம் இருந்தாலும், கும்ப ராசியினர் தனித்துவமான சிந்தனை கொண்டவர்கள். சமுதாயம் வகுத்து வைத்துள்ள வழக்கமான பாதைகளில் செல்ல இவர்களுக்குப் பிடிக்காது. யாராவது இவர்களுக்கு அறிவுரை கூற வந்தால், தங்களின் பகுத்தறிவால் அவர்களைக் கேள்வி கேட்பார்கள். பிறர் பேச்சைக் கேட்டு நடப்பது தங்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாக இவர்கள் உணர்வார்கள்.

56
தனுசு ராசி (Sagittarius) – சுதந்திரத்தை நேசிக்கும் பறவைகள் :
Image Credit : Getty

தனுசு ராசி (Sagittarius) – சுதந்திரத்தை நேசிக்கும் பறவைகள் :

குருவின் ஆதிக்கம் பெற்ற தனுசு ராசியினர் எப்போதுமே தங்களின் அனுபவப் பாடங்களையே சிறந்த ஆசானாகக் கருதுவார்கள். அடுத்தவர்கள் காட்டும் பாதையில் செல்வதை விட, தாங்களாகவே புதிய பாதையை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவர். இவர்களை எவ்வித கட்டுப்பாட்டுக்குள்ளும் வைக்க முடியாது என்பதால், பிறரின் அறிவுரைகளை இவர்கள் காது கொடுத்துக் கூடக் கேட்க மாட்டார்கள்.

66
மிதுன ராசி (Gemini) – இரட்டை மனநிலை கொண்ட புத்திசாலிகள் :
Image Credit : Getty

மிதுன ராசி (Gemini) – இரட்டை மனநிலை கொண்ட புத்திசாலிகள் :

புதன் கிரகத்தின் ஆதிக்கத்தால் மிதுன ராசியினர் சிறந்த அறிவாளிகளாகத் திகழ்வார்கள். ஆனால், இவர்களிடம் இருக்கும் இரட்டை மனநிலை காரணமாக, ஒரு முடிவை எடுப்பதற்குள் பல கோணங்களில் சிந்திப்பார்கள். பிறர் ஒரு நல்ல ஆலோசனையைக் கூறினாலும், இவர்களின் மனம் அதைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கும். இறுதியில், தங்கள் சொந்த புத்திசாலித்தனத்தை மட்டுமே நம்பிச் செயல்படுவார்கள்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Auspicious Day: செவ்வாய் இருவாய்.. சனி பிணி.. இந்த கிழமையில் புதிய வேலை தொடங்கினா வெற்றி நிச்சயமாம்!
Recommended image2
சோம்பேறித்தனம் மிகுந்த 4 ராசிக்காரர்கள் இவங்க தான்: இவர்களில் நீங்களும் ஒருவரா?
Recommended image3
Saturn Retrograde 2026: சனி வக்ரகதியில்.. பணவரவும், பதவி உயர்வும் பெறும் 3 ராசிகள்! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Zodiac Signs : உறவுகளால் அதிகம் காயப்படும் 6 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
Recommended image2
astrology : 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையை கெடுக்கும் கெட்ட பழக்கங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved