MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • astrology : 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையை கெடுக்கும் கெட்ட பழக்கங்கள்

astrology : 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையை கெடுக்கும் கெட்ட பழக்கங்கள்

கடினமாக உழைத்தும் வெற்றி கிடைக்காதபோது, நாம் கிரகங்களை குறை கூறுகிறோம். ஆனால், நம் ராசிக்குரிய பிரபஞ்ச ஆற்றலைத் தடுக்கும் எதிர்மறைப் பண்புகள் நம் ஆழ்மனதிலேயே மறைந்திருப்பதுதான் இதற்குக் காரணம் என்பதே உண்மை.

3 Min read
Author : Priya Velan
Published : Jun 30 2026, 06:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம் அவசர முடிவு :
Image Credit : Pixabay

மேஷம் - அவசர முடிவு :

நெருப்பு தத்துவத்தைக் கொண்ட மேஷ ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனம் 'பொறுமையின்மை'. எந்தவொரு விஷயத்திலும் இறுதிவரை காத்திருக்காமல், உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுப்பது இவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும். செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற இவர்கள், தினமும் காலையில் செம்பருத்தி மலர் செடிக்கு நீர் ஊற்றி வர அவசரக் குணம் குறையும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம் (Taurus) - பிடிவாதம் மற்றும் சோம்பல் :
Image Credit : Getty

ரிஷபம் (Taurus) - பிடிவாதம் மற்றும் சோம்பல் :

சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற ரிஷப ராசிக்காரர்கள் சொகுசு வாழ்க்கையை விரும்புவதால், சில நேரங்களில் அசுர சோம்பல் இவர்களைத் தொற்றிக் கொள்ளும். தவறான விஷயத்திலும் 'நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என பிடிவாதம் பிடிப்பது இவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாகும். வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை நிறப் பசுவுக்கு அகத்திகீரை வழங்குவது இவர்களின் பிடிவாத குணத்தை மாற்றும்.

Related Articles

Related image1
zodiac signs: மனைவி சொல்லே மந்திரம் என வாழும் 6 கணவன் ராசிகள்!
Related image2
கணவனை அடக்கி ஆளும் பெண் ராசிகள் எது தெரியுமா? இந்த ராசி பெண்களிடம் கணவர்கள் அடங்கிப்போவது ஏன்?
312
மிதுனம் (Gemini) - இரட்டை மனநிலை :
Image Credit : Getty

மிதுனம் (Gemini) - இரட்டை மனநிலை :

புதனின் ஆதிக்கத்தால் அதிபுத்திசாலிகளாக விளங்கும் மிதுன ராசிக்காரர்கள், ஒரே நேரத்தில் பல காரியங்களில் கையை வைப்பார்கள். எதிலும் நிலையான கவனம் இல்லாமல், அடிக்கடி மனதை மாற்றிக் கொண்டே இருப்பது இவர்களின் வெற்றியைத் தாமதப்படுத்தும். புதன்கிழமை தோறும் பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் அருந்துவது மனதை ஒருநிலைப்படுத்தும்.

412
கடகம் (Cancer) - கடந்தகால நினைவுகள் :
Image Credit : Getty

கடகம் (Cancer) - கடந்தகால நினைவுகள் :

சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் அதீத உணர்ச்சிவசப்படுபவர்கள். யாரோ எப்போதோ செய்த துரோகங்களையும், பழைய கசப்பான நினைவுகளையும் நெஞ்சில் சுமந்து கொண்டு, நிகழ்கால நல்வாய்ப்புகளைக் கோட்டை விடுவது இவர்களின் கெட்ட பழக்கமாகும். திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு அபிஷேக நீர் வழங்கி வழிபடுவது மனப்பாரத்தைக் குறைக்கும்.

512
சிம்மம் (Leo) - அதீத அகந்தை (Ego) :
Image Credit : Asianet News

சிம்மம் (Leo) - அதீத அகந்தை (Ego) :

சூரியனின் ஆதிக்கம் பெற்ற சிம்ம ராசிக்காரர்கள் இயல்பாகவே தலைமைப் பண்பு மிக்கவர்கள். ஆனால், 'தான்' என்ற அகந்தையும், மற்றவர்கள் தனக்குக் கீழ் தான் என்ற எண்ணமும் இவர்களின் உறவுகளைப் பிரித்து, தனிமைப் படுத்திவிடும். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து, கோதுமை தானம் செய்வது அகந்தையை அகற்றும்.

612
கன்னி (Virgo) - அதீத குறை காணுதல் :
Image Credit : Getty

கன்னி (Virgo) - அதீத குறை காணுதல் :

புதனின் மற்றொரு ராசியான கன்னி ராசிக்காரர்கள் எதிலும் துல்லியத்தை எதிர்பார்ப்பார்கள் (Perfectionist). மற்றவர்களிடம் இருக்கும் சிறு சிறு குறைகளையும் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து, விமர்சனம் செய்வதால் இவர்களுக்குப் பகைவர்கள் அதிகரிப்பார்கள். சனிக்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்வது நேர்மறை ஆற்றலைத் தரும்.

712
துலாம் (Libra) - தற்பெருமை மற்றும் பகட்டு :
Image Credit : Getty

துலாம் (Libra) - தற்பெருமை மற்றும் பகட்டு :

சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த துலாம் ராசிக்காரர்கள், தங்களின் அந்தஸ்தை உயர்த்திப் காட்டுவதற்காகக் கடன் வாங்கியாவது பகட்டாக வாழ நினைப்பார்கள். வீண் ஆடம்பரமும், மற்றவர்களின் பாராட்டுக்காக ஏங்குவதும் இவர்களைப் பொருளாதாரச் சிக்கலில் வீழ்த்தும். வீட்டில் மகாலட்சுமி வழிபாட்டைத் தொடர்ந்து செய்து, நெய் தீபம் ஏற்றி வர வீண் செலவுகள் குறையும்.

812
விருச்சிகம் (Scorpio) - பழிவாங்கும் எண்ணம் :
Image Credit : Getty

விருச்சிகம் (Scorpio) - பழிவாங்கும் எண்ணம் :

செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள், தங்களுக்குக் கெடுதல் நினைப்பவர்களைக் காலம் கடந்தாவது பழிவாங்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இந்த எதிர்மறைச் சிந்தனை இவர்களின் நிம்மதியைக் கெடுத்து, உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வர, மனதில் உள்ள குரோத எண்ணங்கள் நீங்கும்.

912
தனுசு (Sagittarius) - அதீத வெளிப்படைத்தன்மை :
Image Credit : Getty

தனுசு (Sagittarius) - அதீத வெளிப்படைத்தன்மை :

குருவின் ஆதிக்கம் பெற்ற தனுசு ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள். ஆனால், 'உண்மை பேசுகிறேன்' என்ற பெயரில் அடுத்தவர் மனம் புண்படும்படி முகத்திற்கு நேராகப் பேசுவது இவர்களின் பலவீனம். இவர்களின் ரகசியங்களை இவர்களே வெளியில் சொல்லி மாட்டிக் கொள்வார்கள். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்வது பேச்சில் முதிர்ச்சியைத் தரும்.

1012
மகரம் (Capricorn) - அதீத சந்தேகம் :
Image Credit : Getty

மகரம் (Capricorn) - அதீத சந்தேகம் :

சனியின் ஆதிக்கம் பெற்ற மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். ஆனால், தங்களைச் சுற்றியிருப்பவர்களை எளிதில் நம்ப மாட்டார்கள். எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதால், நல்ல நண்பர்களையும், சிறந்த வாய்ப்புகளையும் இழக்க நேரிடும். சனிக்கிழமைகளில் காக்கைக்கு எள் கலந்த சாதம் வைப்பது இவர்களின் எதிர்மறை எண்ணங்களை மாற்றும்.

1112
கும்பம் (Aquarius) - உலகத்தொடர்பில்லா தனிமை :
Image Credit : Getty

கும்பம் (Aquarius) - உலகத்தொடர்பில்லா தனிமை :

கும்ப ராசியினரும் சனியின் ஆதிக்கம் பெற்றவர்களே. இவர்கள் தங்களின் சிந்தனைகளில் மூழ்கி, சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். யாரிடமும் பழகாமல் விலகியிருப்பது இவர்களின் தொழில்முறை மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கும். வாரந்தோறும் சனிக்கிழமை விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சமூகத் தொடர்பை மேம்படுத்தும்.

1212
மீனம் (Pisces) - கற்பனை உலகில் வாழுதல் :
Image Credit : Getty

மீனம் (Pisces) - கற்பனை உலகில் வாழுதல் :

குருவின் ஆதிக்கம் பெற்ற மீன ராசிக்காரர்கள் இரக்க குணம் கொண்டவர்கள். ஆனால், எந்நேரமும் நிஜ உலகை எதிர்கொள்ளாமல், கற்பனை உலகிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தங்களின் கடமைகளைத் தள்ளிப்போடும் சோம்பேறித்தனம் இவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும். வியாழக்கிழமைகளில் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது அல்லது பேனா, புத்தகங்கள் தானம் செய்வது இவர்களை எதார்த்த உலகிற்கு அழைத்து வரும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dream Astrology: கனவில் அழுதால் நல்லதா? சிரித்தால் கெட்டதா? ஸ்வப்ன சாஸ்திரம் சொல்லும் ரகசியம்!
Recommended image2
zodiac signs: மனைவி சொல்லே மந்திரம் என வாழும் 6 கணவன் ராசிகள்!
Recommended image3
Hand Wash: சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவுறீங்களா? வறுமையை விலை கொடுத்து வாங்குறீங்க! முழு விவரம்!
Related Stories
Recommended image1
zodiac signs: மனைவி சொல்லே மந்திரம் என வாழும் 6 கணவன் ராசிகள்!
Recommended image2
கணவனை அடக்கி ஆளும் பெண் ராசிகள் எது தெரியுமா? இந்த ராசி பெண்களிடம் கணவர்கள் அடங்கிப்போவது ஏன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved