MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Zodiac Signs : உறவுகளால் அதிகம் காயப்படும் 6 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Zodiac Signs : உறவுகளால் அதிகம் காயப்படும் 6 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

அளவுக்கு மிஞ்சிய பாசத்தால் ஏமாற்றப்பட்டு, மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகத் தங்களையே வருத்திக்கொள்ளும் குணம் கொண்டவர்கள் சிலர் இதனால் எப்போதும் புறக்கணிப்பையும் மனக்காயங்களையும் மட்டுமே பரிசாகப் பெறும் உறவுகளால் காயப்படும் 6 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

2 Min read
Author : Priya Velan
Published : Jun 30 2026, 06:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கடகம் (Cancer) :
Image Credit : Getty

கடகம் (Cancer) :

சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் 'நீர்' தத்துவத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களை விட மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக உழைப்பவர்கள். தாங்கள் காட்டும் அதே தூய்மையான அன்பை மற்றவர்களும் காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதால், மிக எளிதாக உறவுகளால் கவரப்பட்டு, பின்பு காயப்படுகிறார்கள். பௌர்ணமி நாட்களில் நெய் தீபம் ஏற்றி சந்திர தரிசனம் செய்வது, உறவுகளிடம் சரியான இடைவெளியைப் பேண உதவும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கன்னி (Virgo) :
Image Credit : Getty

கன்னி (Virgo) :

புதனின் ஆதிக்கம் பெற்ற கன்னி ராசியினர், ஒருமுறை ஒருவரைத் தங்களின் நெருங்கிய வட்டத்தில் சேர்த்துவிட்டால், அவர்களுக்காக எதையும் செய்யத் துணிவார்கள். ஆனால், இவர்களின் மென்மையான குணத்தை மற்றவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, காரியம் முடிந்ததும் விலகி விடுவார்கள். இவர்கள் புதன்கிழமைகளில் பறவைகளுக்குத் தானியங்கள் வழங்குவது இவர்களுக்கு நல்ல மனிதர்களை அடையாளம் காட்டும்.

Related Articles

Related image1
love astrology : காதலில் சொதப்பும் அம்மாஞ்சியான 4 ராசிக்காரர்கள் இவங்க தான்
Related image2
எந்த ராசிக்காரர்கள் என்ன வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும்?
36
விருச்சிகம் (Scorpio) :
Image Credit : Getty

விருச்சிகம் (Scorpio) :

விருச்சிக ராசிக்காரர்கள் வெளியில் கடினமாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மிக மென்மையானவர்கள். நம்பியவர்களுக்காகத் தங்கள் உயிரையும் கொடுப்பார்கள். ஆனால், இவர்களின் தீவிரமான பாசத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் இவர்களுக்குத் துரோகம் செய்யும் போது, இவர்களின் மனம் ஆழமாகக் காயமடைகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் பைரவர் வழிபாட்டை மேற்கொள்வது, மனக் காயங்களில் இருந்து விரைவில் மீள உதவும்.

46
மீனம் (Pisces) :
Image Credit : Getty

மீனம் (Pisces) :

குருவின் ஆதிக்கம் பெற்ற மீன ராசிக்காரர்கள், எல்லோரையும் நல்லவர்களாகவே பார்க்கும் குணம் கொண்டவர்கள். மற்றவர்கள் காட்டும் போலி அன்பை உண்மை என்று நம்பி, தங்களின் ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டு, பின்பு அவர்களாலேயே அவமானங்களையும் ஏமாற்றங்களையும் சந்திப்பார்கள். வியாழக்கிழமைகளில் ஏழை முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது இவர்களின் விவேகத்தை அதிகரிக்கும்.

56
துலாம் (Libra) :
Image Credit : our own

துலாம் (Libra) :

சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற துலாம் ராசியினர் எப்போதுமே உறவுகளுக்குள் சண்டை வரக்கூடாது என்று நினைப்பவர்கள். இதற்காகத் தங்களின் சுயமரியாதையைக் கூட விட்டுக் கொடுத்து சமாதானமாகப் போவார்கள். இந்தத் தியாக குணம் மற்றவர்களால் மதிக்கப்படாமல், இவர்களைத் ஏமாளிகளை போல் மாற்றும் போது காயப்படுகிறார்கள். வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற மலர்களால் லட்சுமி தேவியை வழிபட, சுயமரியாதை ஓங்கும்.

66
தனுசு (Sagittarius):
Image Credit : Getty

தனுசு (Sagittarius):

நெருப்பு தத்துவத்தைக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள், உள்ளொன்று வைத்துப் புறம்பேசத் தெரியாதவர்கள். தங்களைப் போலவே மற்றவர்களும் நேர்மையாக இருப்பதாக நினைத்து, சுயநலவாதிகளிடம் சிக்கிக் கொள்வார்கள். இவர்களின் வெளிப்படையான பேச்சை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு இவர்களைத் காயப்படுத்துவார்கள். தினமும் காலையில் சூரிய பகவானுக்கு அர்க்கியம் (நீர்) கொடுப்பது, இவர்களுக்குச் சரியான உறவுகளைத் தேடித்தரும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Guru Mangal Rajayoga : குரு-செவ்வாய் இணைந்து உருவாகும் குரு மங்கள ராஜயோகம்! 4 ராசிகளுக்கு சொத்து சேரும், லாபம் பெருகும்!
Recommended image2
Money Attracting Zodiac Signs பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் ஆற்றல் கொண்ட 5 ராசிக்காரர்கள்
Recommended image3
Shani Transit 2027: சனியின் பார்வை பட்டாச்சு! 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி தேடி வருமாம்
Related Stories
Recommended image1
love astrology : காதலில் சொதப்பும் அம்மாஞ்சியான 4 ராசிக்காரர்கள் இவங்க தான்
Recommended image2
எந்த ராசிக்காரர்கள் என்ன வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved