- Home
- Astrology
- Today Rasi Palan: இன்று சர்வ அமாவாசை.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார்? 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Today Rasi Palan: இன்று சர்வ அமாவாசை.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார்? 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Today Rasi Palan: 14 ஜூன் 2026, ஞாயிற்றுக்கிழமை அன்று வைகாசி மாதத்தின் சர்வ அமாவாசை திதி வருகிறது. இந்த சர்வ அமாவாசை புண்ணிய தினத்தில் 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள் மற்றும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் பற்றி இங்கு காணலாம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்று பொருளாதார ரீதியாக ஓரளவு சுமாரான பலன்களே கிடைக்கும். தேவையற்ற செலவுகள் வரலாம். குடும்பத்தில் சிறு சச்சரவுகள் வந்து நீங்கும். வார்த்தைகளில் நிதானம் தேவை. புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்காமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம்: பசு மாட்டிற்கு அகத்திக் கீரை அல்லது பழங்கள் வழங்குவது நற்பலன் தரும்.
Top Stories: Name Numerology: உங்க பெயர் 'M'ல தொடங்குதா? எப்போ சொந்த வீடு வாங்குவீங்கன்னு தெரிஞ்சுக்கோங்க.!
ரிஷபம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்குழப்பங்களும், ஒருவித பதற்றமும் தொற்றிக்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதை ஓரிரு நாட்கள் தள்ளிப்போடுவது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்கு இன்று சுபச் செலவுகள் அதிகரிக்கும். தூக்கமின்மை அல்லது அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். வெளியூர் பயணங்களின் போது விழிப்புணர்வு தேவை. எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான ஆவணங்களை பத்திரமாக வையுங்கள்.
பரிகாரம்: ஆதரவற்ற முதியவர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானம் அல்லது வஸ்திர தானம் செய்யுங்கள்.
Top Stories: Somvati Amavasya 2026: சோமவதி அமாவாசை 2026 - 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.! பணம் மூட்டை மூட்டையை கொட்டப்போகுது.!
கடகம்
கடக ராசியினருக்கு இன்றைய தினம் நல்ல நாளாக இருக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். சமூகத்தில் மரியாதையும் புகழும் கிடைக்கலாம். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பு உண்டு.
பரிகாரம்: அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது அதிர்ஷ்டத்தை இரட்டிப்பாக்கும்.
Top Stories: Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முரட்டு சிங்கிளாக இருப்பார்களாம்.! திருமணம் என்றாலே அலர்ஜியாம்.!
கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த அமாவாசை பித்ருக்களின் ஆசி முழுமையாகக் கிடைக்கும் நாளாக இருக்கும். தந்தை அல்லது தந்தை வழி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். அதிர்ஷ்டம் கூடிவரும்.
பரிகாரம்: மறைந்த முன்னோர்களை நினைத்து எள், தண்ணீர் இறைத்து (தர்ப்பணம்) வழிபடுவது மிகச் சிறந்தது.
Top Stories: Labh Drishti Rajyog 2026: குரு - செவ்வாய் இணைவு.! 4 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.!
துலாம்
துலாம் ராசியினர் சற்றே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். வாகனங்களில் செல்லும் போது வேகம் வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நிம்மதி தரும். சில திட்டங்கள் எதிர்பார்த்த நேரத்தில் முடியாமல் போகலாம்.
பரிகாரம்: கால பைரவருக்கு செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
விருச்சிகம்
இன்று கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும் என்பதால் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளிடம் வெளிப்படைத்தன்மை தேவை. சட்டரீதியான வழக்குகளில் நிம்மதி கிடைக்க வாய்ப்புள்ளது.
பரிகாரம்: மகாவிஷ்ணு வழிபாடும், துளசி அர்ச்சனையும் உங்களுக்கு மன அமைதியைத் தரும்.
தனுசு
தனுசு ராசிக்கு இன்று எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். கடன் தொல்லைகள் குறைய வழி பிறக்கும். நீண்ட நாள் உடல் உபாதைகள் சீராகும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.
பரிகாரம்: அனுமன் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
மகரம்
மகர ராசியினர் பிள்ளைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பூர்வீக சொத்து விவகாரங்களில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். மனக்குழப்பம் தவிர்க்க குலதெய்வ நினைவு அவசியம்.
பரிகாரம்: ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உங்களால் இயன்ற பண உதவி அல்லது நோட்டு, புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்.
கும்பம்
கும்ப ராசியினர் இன்று தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் வரலாம். மனதில் இனம் புரியாத பயம் அல்லது சோர்வு வந்து நீங்கும். சுப காரிய பேச்சுகளை தள்ளிப்போடலாம்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய பால் வாங்கிக் கொடுக்கலாம்.
மீனம்
மீன ராசிக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். இளைய சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். குறுகிய தூரப் பயணங்கள் லாபம் தரும்.
பரிகாரம்: ஏழை எளியவர்களுக்கு தயிர் சாதம் அல்லது உணவை தானமாக வழங்குவது நலம் பயக்கும்.

