Labh Drishti Rajyog 2026: குரு - செவ்வாய் இணைவு.! 4 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.!
Labh Drishti Rajyog 2026: ஜூன் 28 அன்று 'லாப திருஷ்டி ராஜயோகம்' உருவாகிறது. ஜோதிடத்தின்படி, இந்த ராஜயோகம் 4 ராசிகளின் தலைவிதியையே மாற்றப்போகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Labh Drishti Rajyog 2026
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சிகளும், அவற்றின் பார்வைகளும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. அந்த வகையில் ஜூன் மாத இறுதியில் சக்தி வாய்ந்த ‘லாப திருஷ்டி யோகம்’ உருவாக இருக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவானும், செவ்வாய் பகவானும் இணைந்து இந்த யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகம் அறிவு, ஞானம், வீரம், மற்றும் செல்வத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த யோகத்தால் நான்கு ராசிக்காரர்கள் அதிக அதிர்ஷ்டத்தை பெற இருக்கின்றனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்: Solar Eclipse 2026: இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல் அதிகரிக்கப் போகுது.!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் நல்ல பலன்களைத் தரும். மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான் இல்ல ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வார். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் வேலையில் மகிழ்ச்சி அடைவார்கள். புதிய வேலை வாய்ப்பும் வரலாம்.
இதையும் படியுங்கள்: Astrology: மேஷ ராசியில் இணையும் சக்தி வாய்ந்த கிரகங்கள்.! ஜூன் 11 முதல் 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.! பணம் மூட்டை மூட்டையா சேரப்போகுது.!
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அற்புதமாக இருக்கும். ராஜயோகத்தைப் போல மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். இந்த ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மரியாதை கௌரவத்தையும் கொண்டுவரும். திடீரென பணம் வர வாய்ப்புள்ளது. பார்ட்னர்ஷிப் தொழிலில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். பழைய நோயில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம். வேலையிலும் தொழிலிலும் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்ககிட்ட ரகசியம் சொன்னா அவ்வளவுதான்.! ஊரு பூரா தம்பட்டம் அடிச்சிடுவாங்க.!
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த யோகம் சாதகமான பலன்களைத் தரும். தனுசு ராசியில் அதிபதியான குரு பகவான் தனுசு ராசிக்காரர்களின் பண வரவை அதிகரிப்பார். இந்த காலக்கட்டத்தில் உங்கள் நிதிநிலையும் வலுவாக இருக்கும். நீங்கள் தொடங்கும் எந்த வேலையிலும் வெற்றி காண்பீர்கள். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உபரி வருமானம் வர வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயர்வதற்கான காலம் நெருங்கியுள்ளது.
இதையும் படியுங்கள்: Numerology: இந்த தேதியில பிறந்தவங்களுக்கு காசு பணம் நிறைய இருக்கும், ஆனா மன நிம்மதி சுத்தமா இருக்காது.!
மகரம்
லாப திருஷ்டி யோகத்தல் மகர ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். வருமான வழிகள் அதிகரிக்கும். ஜூன் 28-க்கு பிறகு நல்ல வேலை வாய்ப்பு வரலாம். சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலிலும் நல்ல பணம் சம்பாதிப்பதில் வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கும் பொற்காலமாக அமையும். நேர்காணல் அல்லது போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

