தைப்பூசம் 2025 : கடன் தொல்லை நீங்கி செல்வம் பெருக விரதம் எப்படி இருக்கனும்?
Thaipusam 2025 : இன்று தைப்பூசம். இந்நாளில் எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
- FB
- TW
- Linkdin
- GNFollow Us

தைப்பூசம் 2025 : கடன் தொல்லை நீங்கி செல்வம் பெருக விரதம் எப்படி இருக்கனும்?
தைப்பூசம் என்பது முருகப்பெருமானுக்கு உரிய சக்தி வாய்ந்த விரதங்களில் ஒன்றாகும். தை மாதத்தில் வரும் பௌர்ணமியும், பூசம் நட்சத்திரமும் இணைந்து வரக்கூடிய நாளை தான் தைப்பூசமாக கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இந்த 2025 ஆண்டு தைப்பூசம் இன்று (பிப்.11)
செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. பூச நட்சத்திரமானது நேற்று மாலை 6.1 மணிக்கு தொடங்கிவிட்டது. மேலும் அது முடியும் நேரம் இன்று மாலை 6.34 மணியாகும். எனவே பூச நட்சத்திரம் முடிவதற்குள் தைப்பூச வழிபாடுகளை செய்து முடித்து விடுங்கள். இப்போது இந்த பதிவில் தைப்பூச நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் முருகனை எப்படி வழிபட வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தைப்பூசம் வழிப்படும் நேரம்:
இன்று தைப்பூசம் என்பதால் அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு முருகப் பெருமானே வழிபாடு செய்ய வேண்டும். அதுபோல உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் முருகன் கோவிலில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள். தைப்பூச நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வது ரொம்பவே முக்கியமானது என்பதால் குளித்துவிட்டு பூஜைகளை செய்யுங்கள் மாலை ஆறு மணிக்குள் முருகனுக்கு நெய்வேத்தியம் படைத்து வழிபாட்டை முடிக்கவும்.
தைப்பூசம் வழிபடும் முறை:
அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு முருகன் படத்திற்கு மாலை அணிவித்து வழிபடவும். முடிந்த அளவு முருகனுக்கு சிவப்பு நிறத்தில் மாலை அணிவிக்கவும் இல்லை என்றால் வேறு எந்த நேரத்தில் அணிவிக்கலாம். உங்களது வீட்டில் முருகனின் சிலை இருந்தால் பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். இல்லையென்றால் முருகன் படத்திற்கு முன் ஒரு கிளாஸ் வைத்து வழிபடுங்கள்.
இதையும் படிங்க: பழனி தைப்பூச விழா! விண்ணை முட்டிய அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம்!
தைப்பூசம் விரதம் இருக்கும் முறை:
பொதுவாக தைப்பூச விரதம் இருப்பவர்கள், முருகப்பெருமானை நினைத்து மாலை போட்டு 48 நாட்கள் விரதம் இருந்து நடை பயணமாக முருகன் கோயிலுக்கு செல்வார்கள். ஆனால் பலரும் தைப்பூசம் என்று மட்டுமே விரதம் இருப்பார்கள். அப்படி அந்நாளில் மட்டும் விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் விரதத்தை கடைபிடிக்க வேண்டும் ஒருவேளை உங்களால் அப்படி கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் பால் பழம் ஆகியவற்றை மற்றும் சாப்பிட்டு விரதத்தை நீங்கள் தொடங்கலாம். தைப்பூசம் விரதம் இருப்பவர்கள் ஆனால் முழுவதும் முருகனுக்கு உகந்த பாடல்களை பாட வேண்டும். அதிகாலையிலே விரதத்தை தொடங்கி பிறகு மாலை வேலையில்தான் முருகனுக்கு நெய்வேத்தியம் படைத்து விரதத்தை முடிக்க வேண்டும். நெய் வைத்தியமாக முருகனுக்கு பிடித்த ஏதாவது ஒரு இனிப்பை படைத்து வழிபடுங்கள்.
தைப்பூசம் விரதத்தின் பலன்கள்:
தைப்பூச நாளில் முருகனை நினைத்து முழு மனதுடன் விரதம் இருந்து வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும், கல்யாண தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: தைப்பூசத்திற்கு வாழ்த்து சொன்ன விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?