தைப்பூசத்திற்கு வாழ்த்து சொன்ன விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?
தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். கட்சி தொடங்கி ஓராண்டு ஆகும் நிலையில், அண்மையில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது விஜய்யின் கட்சி. அதனை தமிழக வெற்றிக் கழகத்தின் தடபுடலாக கொண்டாடினர். கட்சி தொடங்கியதும் அதன் முதல் மாநில மாநாட்டை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக நடத்தி முடித்த விஜய், அதன்பின் கப்சிப் என ஆனார். அவர் கள அரசியலுக்கு வராமல் ஒர்க் பிரம் ஹோம் பார்க்கிறார் என்று விமர்சனம் எழுந்தது.
தளபதி விஜய்யின் அரசியல்
இதையடுத்து பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேரடியாக களத்தில் இறங்கினார் விஜய். பரந்தூரில் இருந்து தன் களா அரசியலை தொடங்கிய விஜய், அடுத்தடுத்து தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுப்பார் என மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால் விஜய் மீண்டும் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார். அண்மையில் திருப்பரங்குன்றம் விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார் விஜய்.
இதையும் படியுங்கள்... விஜயகாந்த், கமல், சிவாஜிக்கு நிகழ்ந்ததே அரசியலில் விஜய்க்கும் நிகழும்.! அடித்து கூறும் பாஜக
விஜய்யின் தைப்பூச வாழ்த்து
அதுமட்டுமின்றி இந்துக்களின் பண்டிகைகளுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிப்பதை தவிர்த்து வந்தார். அதுகுறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்து விஜய் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், “தனித்துயர்ந்த
குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.
ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
விஜய்யின் இந்த பதிவுக்கு லைக் போட்டு விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வந்தாலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தின் போது எங்கு சென்றிருந்தீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒரு சிலரோ விஜய்யை சங்கி என்றும் கலாய்த்து வருகின்றனர். இந்து பண்டிகைக்கு வாழ்த்தா அதுவும் விஜய் இடம் இருந்தா அடடா என்ன ஒரு ஆச்சரியம்? என்றும் விஜய்யை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள். விஜய்யின் இந்த வாழ்த்து பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருள் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... விஜய் கட்சியில் இணைகிறாரா ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி? யார் இவர் தெரியுமா?