- Home
- Astrology
- Pongal 2026: கடன் தொல்லை அகன்று, லட்சுமி கடாட்சம் பெருக, மகர சங்கராந்தியில் இந்த 5 பொருட்களை தானமாக கொடுங்க.!
Pongal 2026: கடன் தொல்லை அகன்று, லட்சுமி கடாட்சம் பெருக, மகர சங்கராந்தியில் இந்த 5 பொருட்களை தானமாக கொடுங்க.!
Makar Sankranti 2026: சங்கராந்தி அன்று செய்யும் தானத்திற்கு அதிக பலன் உண்டு. இந்த நாளில் சில பொருட்களை தானம் செய்வதன் மூலம் பணக்கஷ்டத்தில் இருந்து விடுபடலாம். என்னென்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

மகர சங்கராந்தி 2026
தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா ‘மகர சங்கராந்தி’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. சூரியன் மகர ராசிக்குள் நுழையும் இந்நாளில் தானம் செய்வதால் பல புண்ணிய பலன்கள் கிடைக்கும். மகர சங்கராந்தி தினத்தில் என்னென்ன பொருட்களை தானம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எள் மற்றும் வெல்லம்
மகர சங்கராந்தி அன்று எள், வெல்லம் கலந்து தானம் செய்வது மங்களகரமானது. இது சனி, சூரிய கிரகங்களுக்கு சாந்தி தரும். உங்கள் சக்திக்கு ஏற்ப ஏழைகளுக்கு பணம் அல்லது தானியங்கள் தானம் செய்வது வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
தானியங்கள்
மகர சங்கராந்தி அன்று அரிசி, பருப்பு தானம் செய்வது மங்களகரமானது. 5 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்களை வாங்கி தானம் அளிக்கலாம். தேவைப்படுபவர்களுக்கு போர்வைகள், காலணிகள் தானம் செய்தால் ராகு, சனி பகவனானின் தீய விளைவுகள் குறையும்.
நெய் மற்றும் எண்ணெய்
மகர சங்கராந்தி அன்று நெய் தானம் செய்தால் தொழிலில் வெற்றியும், மரியாதையும் கிடைக்கும். கோதுமை, அரிசி, பழங்கள், காய்கறிகளை தானம் செய்வதும் மங்களகரமானது. கடுகு எண்ணெய் தானம் சனி பகவானின் தீய விளைவுகளை குறைக்கும்.
மஞ்சள் மற்றும் தேன்
மகர சங்கராந்தி அன்று மஞ்சள் தானம் செய்வது மங்களகரமானது. இது பல நல்ல பலன்களைத் தரும். தேனை தானம் செய்வது வாழ்க்கையில் இனிமையை அதிகரித்து, தோஷங்களை நீக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

