- Home
- Astrology
- மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்.! இந்த ராசிகளின் தலையெழுத்தே மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்.! இந்த ராசிகளின் தலையெழுத்தே மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Sani Peyarchi 2026 Palangal : நீதி தேவனான சனி பகவான், அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைக் கொடுப்பவர். ஏப்ரல் 17, 2026-ல் சனி உதயமாகும்போது, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப் போகிறது. அந்த ராசிகள் பற்றி தற்போது காணலாம்.

மீன ராசியில் சனி உதயம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி பகவானின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் எல்லா ராசிகளையும் பாதிக்கும். சனி பகவான் அவ்வப்போது உதயமாகுவதும், அஸ்தமனம் ஆவதும் வழக்கம். 2026 ஏப்ரல் 17 அன்று மீன ராசியில் சனி உதயமாகும்போது, அதன் சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் 3 ராசிகளின் வாழக்கையில் புதிய ஒளி வீச இருக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 17 ஆம் தேதிக்குப் பின்னர் நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் உதயமாகிறார். இதனால், புதிய வருமான வழிகள் உருவாகும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே சமயம், முதலீடு செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சியைத் தரும். சனி பகவான் உங்கள் கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால், வேலை மாற்றம் அல்லது புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். பார்ட்னர்ஷிப் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சனி பகவானின் அருளால், முடிவெடுக்கும் திறன் வலுப்பெறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் முயற்சிகளை மட்டும் கைவிடாதீர்கள். தடைபட்ட திட்டங்கள் மீண்டும் வேகம் பிடிக்கும்.
மகரம்
மகர ராசியின் அதிபதியே சனி பகவான்தான். அதனால், சனி உதயத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். வேலையில் ஸ்திரத்தன்மை உண்டாகும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். புதிய வேலை அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனால், வேலையில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

