- Home
- Astrology
- Rahu Peyarchi 2026: ராகுவின் ஆட்டம் ஆரம்பம்.! 2026-ல் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை.!
Rahu Peyarchi 2026: ராகுவின் ஆட்டம் ஆரம்பம்.! 2026-ல் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை.!
Rahu Peyarchi 2026: இந்தாண்டின் இறுதியில் ராகு பகவான் ராசியை மாற்ற இருக்கிறார். அவர் சனி பகவானின் சொந்த வீடான மகரத்திற்குப் பெயர்ச்சியாகிறார். ராகு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

Rahu Peyarchi 2026
ஜோதிடத்தில் ராகு நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இவர் பிற கிரகங்களைப் போல் அல்லாமல் எப்போதும் பின்னோக்கியே (வக்ர நிலை) நகர்வார். ராகு பகவான் திடீர் மாற்றங்கள் மற்றும் மர்மத்திற்கு காரகராக அறியப்படுகிறார். இவர் டிசம்பர் 5 ஆம் தேதி கும்பத்தை விட்டு வெளியேறி மகர ராசிக்குள் நுழைகிறார். இது ஐந்து ராசிகளின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்த உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
மேஷம்
2026-ல் ராகு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெற இருக்கின்றனர். அவர்கள் தொடங்கும் எந்த வேலையிலும் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கும் இது சாதகமான நேரமாகும். குடும்ப உறவுகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ராகுவால் அதிக பண ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. பல வழிகளில் முடங்கியிருந்த பணம் இந்த ஆண்டு கைக்கு வரும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் 2026-ல் ராகுவின் சுப பலன்களால் புதிய தொழில் தொடங்கலாம். பங்குச் சந்தை மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மாமியார் வீட்டில் இருந்து பண ஆதாயம் உண்டாகும். திடீர் பண வரவால் பொன், பொருள், ஆபரணம், நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை நீண்ட காலமாக வாட்டி வதைத்து வந்த உடல்நலப் பிரச்சனைகள் நீங்கும். அவர்கள் விரும்பிய அனைத்தும் நடக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
மகரம்
ஆண்டு முழுவதும் ராகு இந்த ராசியில் இருப்பதால், மகர ராசிக்கார்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவி கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

