- Home
- Astrology
- Sun Transit 2026: தை திருநாள் தரும் ஜாக்பாட்.! மகர ராசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சியால் தலைகீழாக மாறப்போகும் 5 ராசிகளின் ஜாதகம்.!
Sun Transit 2026: தை திருநாள் தரும் ஜாக்பாட்.! மகர ராசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சியால் தலைகீழாக மாறப்போகும் 5 ராசிகளின் ஜாதகம்.!
Sun Transit 2026: ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதுவே மகர சங்கராந்தி எனப்படுகிறது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து பார்க்கலாம்.

Sun Transit in Capricorn 2026
ஜோதிடத்தில் சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். சூரியன் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் தனது ராசியை மாற்றுகிறார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும் போதெல்லாம் தமிழ் மாதங்கள் பிறக்கிறது. அந்த வகையில் ஜனவரி 14 ஆம் தேதி, சூரியன் தனுசு ராசியிலிருந்து விலகி மகர ராசிக்குள் நுழைவார். சூரியனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்கள் வாழ்விலும் எதிரொலிக்கும். ஆனால் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
மேஷம்
சூரியனின் பெயர்ச்சி உங்கள் பத்தாவது வீட்டான தொழில் ஸ்தானத்தில் நிகழ இருக்கிறது. சூரியனின் ராசி மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பண லாபம் உண்டாகும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் வேலை மாற நினைத்தாலோ அல்லது பதவி உயர்வுக்காக காத்திருந்தாலோ, இந்த நேரம் சிறந்ததாக இருக்கும். மேலும் தந்தை மற்றும் பூர்வீக சொத்துக்களால் பெரிய லாபம் கிடைக்கலாம்.
ரிஷபம்
சூரியன் உங்கள் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் பிரவேசிக்க உள்ளார். இதனால், இத்தனை நாட்களாக தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் விழித்தெழும். நீண்ட தூர பயணங்கள் வெற்றிகரமாக அமையும், ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
சூரியன் உங்கள் ராசியின் அதிபதி மற்றும் ஆறாவது வீடான எதிரி மற்றும் நோய் வீட்டில் சஞ்சரிப்பார். இதனால் உங்கள் நேர்முக அல்லது மறைமுக எதிரிகளை வெல்வீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். நீதிமன்ற வழக்கு தொடுத்திருந்தால், தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வர வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் மேம்படும், போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
சூரியன் உங்கள் மூன்றாவது வீடான தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். எனவே இந்த ராசிக்காரர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் அபரிமிதமாக அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மார்க்கெட்டிங், மீடியா அல்லது எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் ஒரு பொற்காலமாக அமையும்.
மீனம்
சூரியன் உங்கள் பதினொன்றாவது வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். இந்த நேரம் உங்கள் நிதி நிலைமை மிகவும் வலுப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் இருந்து பணம் வரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பழைய முதலீடுகளிலிருந்து திடீர் பெரிய லாபம் கிடைக்கலாம். மற்றும் சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

