- Home
- Astrology
- லட்சுமி நாராயண உட்பட 6 சக்தி வாய்ந்த யோகம், பிப்.23 முதல் பெரும் லாபம் பெறப்போகும் 4 ராசிகள்.!
லட்சுமி நாராயண உட்பட 6 சக்தி வாய்ந்த யோகம், பிப்.23 முதல் பெரும் லாபம் பெறப்போகும் 4 ராசிகள்.!
Panchgrahi Rajyog lucky zodiac signs : பிப்ரவரி 23 ஆம் தேதி மகத்தான பலன்களைத் தரும் ஒரு சுப யோகம் உருவாகிறது. இது நான்கு ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றும். அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம்.

Panchgrahi Rajyog lucky zodiac signs
பிப்ரவரி 23 அன்று, செவ்வாய் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால், ராகு, சூரியன், புதன், சுக்கிரன் ஆகியவற்றுடன் இணைந்து பஞ்சகிரக யோகம் உருவாகிறது. இது லட்சுமி நாராயண, சுக்ராதித்ய யோகங்களையும் உருவாக்கும். இதன் காரணமாக பிப்ரவரி 23 ஆம் தேதிக்குப் பின்னர் சில ராசிகளின் தலைவிதியே மாற இருக்கிறது. அந்த ராசிகள் பற்றி இங்கு காணலாம்.
பிப்ரவரி இறுதியில் உருவாகும் ராஜயோகங்கள்
- புதன் மற்றும் சுக்கிரனின் லட்சுமி நாராயண யோகம்
- சூரியன் மற்றும் சுக்கிரனின் சுக்ராதித்ய யோகம்
- சூரியன்-செவ்வாய் மங்களாதித்ய யோகம்
- சூரியன்-புதன் புதாதித்ய ராஜயோகம்
- சுக்கிரன் மற்றும் செவ்வாயின் செல்வ ராஜயோகம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 23 ஆம் தேதிக்குப் பின் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் பெருகும். வீட்டில் பணம் தங்கும். நிதி நிலைமை மேம்படும். தொழில் செய்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
ரிஷபம்
ஐந்து ராஜயோகங்கள் உருவாவதால் ரிஷப ராசிக்காரர்கள் செல்வந்தர்களாக மாறுவீர்கள். நிதி நிலைமை வலுப்பெறும். செல்வம் பெருகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தத் தொழில் தொடங்கலாம். குடும்ப வாழ்க்கை சிறப்பானதாக மாறும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஐந்து ராஜயோகங்கள் பெரும் நன்மைகளைத் தரும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். பழைய முதலீடுகள் லாபம் தரும். செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். வங்கி இருப்பு மேம்படும். வீட்டில் பொன், பொருள், நகை, ஆபரணங்களின் சேர்க்கை நடைபெறும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். முதலீடு மற்றும் செலவினங்களில் சாதகமான சூழல் நிலவும். பூர்வீக சொத்து தகராறு தீரும். தந்தையின் ஆசியுடன் முக்கிய வேலைகளில் வெற்றி கிடைக்கும்.

