- Home
- Astrology
- ஒன்று சேரும் குரு மற்றும் சூரியன்.! உருவாகும் நவபஞ்சம யோகம்.! சொத்துக்களை வாங்கி குவிக்கப்போகும் ராசிகள்.!
ஒன்று சேரும் குரு மற்றும் சூரியன்.! உருவாகும் நவபஞ்சம யோகம்.! சொத்துக்களை வாங்கி குவிக்கப்போகும் ராசிகள்.!
Navpancham Rajyog 2026 Effects : குரு பகவான் அறிவு, அதிர்ஷ்டம், செல்வம், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்திற்கு அதிபதி. தற்போது, குரு மிதுன ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் இருப்பதால் நவபஞ்சம யோகம் உருவாகிறது.

நவபஞ்சம ராஜயோகம்
ஹோலிக்குப் பிறகு சக்திவாய்ந்த நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. சூரியன் மற்றும் குரு இருவரும் 120 டிகிரி கோணத்தில் அமைவதால் இந்த யோகம் ஏற்படும். மார்ச் 5, 2026 இரவு 10:41 மணிக்கு தொடங்கும் இந்த இந்த யோகத்தால் தொழில், செல்வம், மரியாதை உயரும். நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் பற்றி இந்த பதிவில் பார்க்காலம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு அல்லது பாராட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் புதிய கிளைகள் திறக்கலாம். முதலீடுகளில் வெற்றி பெறுவீர்கள். நிதிநிலை வலுப்பெறும்.
சிம்மம்
உங்கள் ஆளுமைத்திறன் மேம்படும், முக்கிய தொடர்புகள் உருவாகும். நீண்ட காத்திருப்புகள் முடிவுக்கு வரும். வெளிநாட்டு வேலை அல்லது பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் வலுப்பெறும். தொழில் கூட்டாண்மையில் லாபம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.
மீனம்
மூதாதையர் சொத்து மூலம் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். ஊழியர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் பெரிய ஒப்பந்தங்கள் வரலாம். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

