MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Today Rasi Palan: இன்று குருவை நேருக்கு நேர் சந்திக்கும் சுக்கிரன்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

Today Rasi Palan: இன்று குருவை நேருக்கு நேர் சந்திக்கும் சுக்கிரன்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

Rasi Palan Today: ஜூன் 9, 2026, செவ்வாய்க்கிழமை அன்று, சந்திரன் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் கடக ராசியில் குரு சுக்கிரன் சேர்க்கை நடந்துள்ளது. இதனால் 12 ராசிகளுக்குமான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : Jun 09 2026, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, இன்று சந்திரன் பெயர்ச்சி காரணமாக குடும்ப விஷயங்கள் உங்கள் மனதைக் குழப்பும். தேவையில்லாத செலவுகள் பட்ஜெட்டைப் பாதிக்கும். முதுகுவலி அல்லது உடல் சோர்வு ஏற்படலாம். எந்த முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். பிறர் முன் பெருமை காட்ட நினைத்து நஷ்டம் அடைய வாய்ப்புள்ளது.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர் சாற்றி வழிபடுவது நன்மைகளைத் தரும்.

இதையும் படியுங்கள்:  Venus Transit 2026: இன்று சுக்கிர பெயர்ச்சி.! 5 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! வீடு, கார், பங்களாவுடன் வசதியாக வாழப்போறீங்க.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் இன்று நல்ல மாற்றங்கள் தெரியும். பாதியில் நின்ற வேலைகள் மீண்டும் வேகம் பிடிக்கும், மனதிலும் உற்சாகம் இருக்கும். உங்களின் உதவும் குணம் மற்றவர்களின் மனதை வெல்லும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் வர வாய்ப்புள்ளது. உடல் நலத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: மகாலட்சுமிக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்ய பொருளாதார நிலை மேலும் உயரும்.

இதையும் படியுங்கள்:  Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

312
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

இன்று வீட்டை அழகுபடுத்துவது அல்லது பழுதுபார்ப்பது குறித்து புதிய திட்டம் போடுவீர்கள். எதிரிகளின் நடவடிக்கைகளை கவனித்துக் கொள்ளுங்கள். பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பெரிய முடிவுகள் எடுக்கும் முன் குடும்பத்தினரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம்.

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி அர்ச்சனை செய்யவும்.

இதையும் படியுங்கள்:  Baba Vanga Predictions: பாபா வங்காவின் கணிப்பு - ஜூன் 2வது வாரம் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.! அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள் யார்?

412
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெரியவர்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை விஷயமாக பயணம் செய்ய நேரிடலாம். தொழிலில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை வரும். குடும்பத்துடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

பரிகாரம்: சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.

இதையும் படியுங்கள்:  Weekly Horoscope: அடுத்த 7 நாட்கள்.! 3 ராஜயோகத்தால் இந்த 5 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது.!

512
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

குரு மற்றும் சுக்கிரன் சுப நிலையால் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரலாம். உடல்நிலையில் முன்னேற்றம் தெரியும், ஆனாலும் மதியத்திற்குப் பிறகு தலைவலி போன்ற பிரச்சனை வரலாம். அலுவலகத்தில் உங்கள் திறமையும் வேலையும் பாராட்டப்படும். திருமண வாழ்வில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.

பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவது தடைகளை நீக்கும்.

இதையும் படியுங்கள்:  Numerology: இந்த தேதியில பிறந்தவங்களுக்கு காசு பணம் நிறைய இருக்கும், ஆனா மன நிம்மதி சுத்தமா இருக்காது.!

612
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

இன்று உங்கள் பணிவான குணத்தையும் நடத்தையையும் மற்றவர்கள் பாராட்டுவார்கள். எல்லா வேலைக்கும் மற்றவர்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இனிமை நீடிக்கும். சொத்து சம்பந்தமான முக்கிய ஒப்பந்தம் ஏற்படலாம். வெளிநாட்டு வர்த்தகம் விரிவடையும் வாய்ப்புகள் உள்ளன.

பரிகாரம்: பசுவிற்கு அகத்திக் கீரை வழங்குவது நற்பலன்களைத் தரும்.

இதையும் படியுங்கள்:  Numerology: உங்களுக்கு Love Marriage-ஆ? Arranged Marriage-ஆ? உங்கள் பெயரின் முதல் எழுத்தை வச்சே கண்டுபிடிக்கலாம்.!

712
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

நண்பர்களின் ஆலோசனை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். திடீர் பண வரவுக்கு வாய்ப்புள்ளது. பணியிடத்தில் அலட்சியமாக இருப்பது பெரிய சிக்கலை உண்டாக்கும். ஒவ்வொரு வேலையையும் கவனமாகச் செய்யுங்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் படிப்பு குறித்து கவலை இருக்கலாம்.

பரிகாரம்: சுக்கிர பகவானுக்கு வெள்ளை மொச்சை பயறு நைவேத்தியம் செய்து வழிபடவும்.

இதையும் படியுங்கள்:  Mangal Gochar 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026.! இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து.! பணம், பதவிக்கு சிக்கல்.!

812
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

பூர்வீகச் சொத்து தொடர்பான பழைய பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் உள்ள இளைய உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். காதல் உறவுகளில் பெரிய வாக்குறுதி கொடுக்கலாம். மாணவர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை மாலை துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றி வழிபடவும்.

இதையும் படியுங்கள்:  Kaal Sarp Yog: ராகு கேதுவுக்கு இடையில் சிக்கும் கிரகங்கள்.! உருவாகும் கால சர்ப்ப யோகம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!

912
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசியினருக்கு குருவின் அருளால் பணம் சம்பாதிக்க பெரிய வாய்ப்புகள் வரலாம். இன்று ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேலும் வலுப்பெறும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் செல்வாக்கும் உயரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் சாற்றி, சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபடவும்.

1012
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுக்கிரன் அருள் கிடைக்கும். இறக்குமதி-ஏற்றுமதி தொழிலில் லாபம் உண்டாகும். வேலைகளில் உங்கள் உற்சாகம் உச்சத்தில் இருக்கும். பயணம் இனிமையாகவும் லாபகரமாகவும் இருக்கலாம். ஆரோக்கியத்தை சிறப்பாக இருக்கும். உங்கள் தலைமைப் பண்பு பாராட்டப்படும்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடுவது மன அமைதியைத் தரும்.

1112
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதிய லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கலாம். நிர்ணயித்த இலக்குகளை சரியான நேரத்தில் முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: ஏழை எளியோருக்கு உங்களால் இயன்ற அன்னதானம் அல்லது உதவிகளைச் செய்யவும்.

1212
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

கலை சார்ந்த வேலைகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். பழைய அனுபவங்கள் இப்போது கைகொடுக்கும். குடும்பத்துடன் செலவிடும் நேரம் மகிழ்ச்சியைத் தரும். பொருளாதார நிலையை வலுப்படுத்த புதிய திட்டங்களைப் பற்றி யோசிப்பீர்கள். மாமியார் வீட்டில் இருந்து நல்ல செய்தி வர வாய்ப்புள்ளது.

பரிகாரம்: சித்தர்கள் அல்லது குருமார்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று தரிசித்து வாருங்கள்.

பொறுப்புத் துறப்பு (Disclaimer)

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் ஜோதிடர்களின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. நாங்கள் இந்தத் தகவல்களை உங்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு ஊடகம் மட்டுமே. வாசகர்கள் இதை ஒரு தகவலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mars Transit : பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, ராஜயோகம் தேடி வரும்!
Recommended image2
Venus Retrograde : வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்... தீபாவளிக்குப் பிறகு பணக்கார யோகத்தைப் பெறும் 7 ராசிகள்!
Recommended image3
11:11 ஏஞ்சல் நம்பர் தரும் ஆச்சரிய பலன்கள்: இது வெறும் தற்செயல் இல்லையாம்... நிஜக் காரணம் இதோ!
Related Stories
Recommended image1
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Recommended image2
Venus Transit 2026: இன்று சுக்கிர பெயர்ச்சி.! 5 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! வீடு, கார், பங்களாவுடன் வசதியாக வாழப்போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved