- Home
- Astrology
- Baba Vanga Predictions: பாபா வங்காவின் கணிப்பு - ஜூன் 2வது வாரம் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.! அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள் யார்?
Baba Vanga Predictions: பாபா வங்காவின் கணிப்பு - ஜூன் 2வது வாரம் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.! அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள் யார்?
Baba Vanga Predictions 2026: பாபா வங்கா கணிப்பின்படி, ஜூன் 8 முதல் 14, 2026 வரையிலான வாரம் சில ராசிக்காரர்களுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது. மிதுனம், கடகம் உள்ளிட்ட சில ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மிதுனம்
பாபா வங்கா கணிப்புப்படி, ஜூன் 8 முதல் 14 வரை மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான வாரமாக இருக்கப்போகிறது. பல நாட்களாக நின்று போன வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக முடியத் தொடங்கும். உங்கள் வாழ்க்கையையே மாற்றப்போகும் ஒரு வழிகாட்டி வருவார். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு சக ஊழியர்கள், மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வருபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்திற்கு வேலை மாறும் வாய்ப்புகளும் உருவாகும். தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் உண்டாகும். கொடுத்த கடன், திரும்ப கைக்கு வரும். நிதிநிலை வலுப்பெறுவதால், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
இதையும் படியுங்கள்: Weekly Horoscope: அடுத்த 7 நாட்கள்.! 3 ராஜயோகத்தால் இந்த 5 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது.!
கடகம்
பாபா வங்கா கூற்றுபடி, ஜூன் 8 முதல் 14 வரை கடக ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷத்தையும், திருப்தியையும் அனுபவிப்பார்கள். இந்த வாரம் பணவரவு அற்புதமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல வாய்ப்புகள் உண்டு. முதலீடுகள் மூலமாக திடீர் பண லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல நேரம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் ஒரு நல்ல செய்தியைப் பெறுவீர்கள். திருமணத்திற்காக வரன் தேடி வருபவர்களுக்கு சுப தகவல் காதுக்கு வரும்.
இதையும் படியுங்கள்: Today Rasi Palan: இன்று சுக்கிரன் பெயர்ச்சி.! கடக ராசியில் கஜலக்ஷ்மி ராஜயோகம்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
சிம்மம்
சிம்ம ராசிக்காரங்களுக்கு ஜூன் 8 முதல் 14 வரையிலான காலம் மிகவும் சாதகமாக இருக்கும் என பாபா வங்கா கணித்துள்ளார். உங்கள் கடின உழைப்புக்கான நாட்கள் முடிவுக்கு வருகிறது. அதிர்ஷ்டம் உங்களுக்கு முழு ஆதரவை வழங்கும். பணம் சம்பந்தமான வேலைகள் சரியான நேரத்தில் முடியும். நிதிப் பிரச்சினைகளில் இருந்து பெரிய நிவாரணம் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறமை அதிகரிக்கும். பல மாதமாக நீங்கள் காத்துக்கொண்டிருந்த இருந்த ஒரு வாய்ப்பு தேடி வரும். பெற்றோர், குழந்தைகளின் உடல்நலம் மேம்படும். ஒரு கௌரவமான பதவியும் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.
இதையும் படியுங்கள்: Mangal Gochar 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026.! இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து.! பணம், பதவிக்கு சிக்கல்.!
துலாம்
பாபா வங்கா கணிப்புப்படி, துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமும், செழிப்பும் நிறைந்ததாக இருக்கும். உறவுகள் மற்றும் தொழிலில் இனிமையான அனுபவங்கள் கிடைக்கும். துலாம் ராசியினர் தங்கள் செல்வத்தைக் பெருக்க புது வழிகளைக் கண்டுபிடிப்பீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். திருமண வாழ்க்கையில இனிமை கூடும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் இருக்கும். இந்த வாரம் முழுவதும் சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானத்தில் பெரிய உயர்வு இருக்கும். வேலையில் மாற்றம் வரலாம். புது வாய்ப்புகள் தேடி வரும். மன அமைதி கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: Kaal Sarp Yog: ராகு கேதுவுக்கு இடையில் சிக்கும் கிரகங்கள்.! உருவாகும் கால சர்ப்ப யோகம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூன் 8 முதல் 14 வரையிலான வாரம், பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும் என பாபா வங்கா கணித்துள்ளார். இந்த வாரம், தொழில் வாழ்க்கையில் புது முன்னேற்றங்கள் நடக்கும். புது வாய்ப்புகள் கிடைக்கும். நின்று போன வேலைகள் எல்லாம் வேகமாக முடியும். கவலைகள் அனைத்தும் தீரும். நிதி மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சட்டப் பிரச்சினைகளில் சிக்கியிருப்பவர்களுக்கு, நல்ல தீர்வு கிடைக்கும். நண்பர்களும், வாழ்க்கைத் துணையும் உங்களுக்கு உதவியாகவும், ஆதரவாகவும் இருப்பார்கள்.
இதையும் படியுங்கள்: Numerology: இந்த தேதியில பிறந்தவங்களுக்கு காசு பணம் நிறைய இருக்கும், ஆனா மன நிம்மதி சுத்தமா இருக்காது.!
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

