- Home
- Astrology
- Venus Transit 2026: இன்று சுக்கிர பெயர்ச்சி.! 5 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! வீடு, கார், பங்களாவுடன் வசதியாக வாழப்போறீங்க.!
Venus Transit 2026: இன்று சுக்கிர பெயர்ச்சி.! 5 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! வீடு, கார், பங்களாவுடன் வசதியாக வாழப்போறீங்க.!
Venus Transit 2026 in Cancer: ஜூன் 8, 2026 சுக்கிர பகவான் மிதுன ராசியில் இருந்து விலகி கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சுக்கிரப் பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெற உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

Venus Transit 2026
ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் சுப கிரகமாக கருதப்படுகிறார். செல்வம், ஆடம்பரம், காதல், அழகு, மற்றும் வாழ்க்கையின் எல்லா வசதிகளும் சுக்கிரனின் அருளால் தான் நமக்கு கிடைக்கிறது. வரும் ஜூன் 8, 2026 அன்று, சுக்கிரன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். எந்த 4 ராசிகளுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகிறது என்று இங்கு காணலாம்.
இதையும் படியுங்கள்: Numerology: இந்த தேதியில பிறந்தவங்களுக்கு காசு பணம் நிறைய இருக்கும், ஆனா மன நிம்மதி சுத்தமா இருக்காது.!
கடக ராசி - ஜென்ம ராசியில் சுக்கிரன்
சுக்கிரன் உங்கள் ராசிக்குள்ளேயே (முதல் வீட்டில்) நுழைவதால், இந்த காலகட்டம் உங்களுக்கு மிகப்பொன்னான காலமாக அமையும். உங்கள் தோற்றத்தில் பொலிவு கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களை ஈர்க்கும் காந்த சக்தி உங்களுக்குள் உருவாகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் உருவாகும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: Kaal Sarp Yog: ராகு கேதுவுக்கு இடையில் சிக்கும் கிரகங்கள்.! உருவாகும் கால சர்ப்ப யோகம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!
கன்னி - லாப ஸ்தானத்தில் சுக்கிரன்
உங்கள் ராசிக்கு 11-ம் வீடான லாப ஸ்தானத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சியாவதால், தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது. உபரி வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் இருந்த சுணக்கம் நீங்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரக்கூடும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் கைக்கு வந்து சேரும். நண்பர்கள் மற்றும் மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். சமுதாயத்தில் அந்தஸ்து உயரும்.
இதையும் படியுங்கள்: Mangal Gochar 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026.! இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து.! பணம், பதவிக்கு சிக்கல்.!
துலாம் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன்
உங்கள் ராசி நாதனான சுக்கிரன் 10-ம் வீடான கர்ம ஸ்தானத்திற்கு செல்வதால், உத்தியோகம் மற்றும் தொழிலில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உருவாகும்.ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து, தொழில் அடுத்த கட்டத்திற்கு நகரும்.
இதையும் படியுங்கள்: Weekly Horoscope: அடுத்த 7 நாட்கள்.! 3 ராஜயோகத்தால் இந்த 5 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது.!
மகர ராசி - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன்
உங்கள் ராசிக்கு 7-ம் வீடான சப்தம ஸ்தானத்திற்கு சுக்கிரன் வருகிறார். இது உறவுகளுக்கும் கூட்டாண்மைக்கும் மிகச் சிறந்த பலன்களைத் தரும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைந்து சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும். திருமணம், வளைகாப்பு, காதுகுத்து, கிரக பிரவேசம் ஆகியவற்றில் ஏற்பட்ட தடைகள் அகலும். கணவன்/மனைவி வழியில் ஆதாயமும், மகிழ்ச்சியும் உண்டாகும். இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் கூட்டாளிகள் அமைவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
இதையும் படியுங்கள்: Baba Vanga Predictions: பாபா வங்காவின் கணிப்பு - ஜூன் 2வது வாரம் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.! அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள் யார்?
மீனம் - பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5-ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால், மன மகிழ்ச்சியும் நிம்மதியும் தேடி வரும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருந்த தம்பதியினருக்கு நல்ல செய்தி தேடி வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் சிறப்பான தேர்ச்சி பெறுவார்கள். கலை, இலக்கியம், வடிவமைப்பு போன்ற துறைகளில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகளும், புகழும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் வரலாம். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
பொறுப்புத் துறப்பு (Disclaimer)
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் ஜோதிடர்களின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்தத் தகவல்களை வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம். பயனர்கள் இதை ஒரு தகவலாக மட்டுமே கருத வேண்டும்.

