- Home
- Astrology
- Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Numerology - People Born On These Dates Are More Likely to Face Betrayal: எண் கணிதத்தின் படி சிலர் தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பார்களாம். அதற்கான காரணங்கள், பின்னணி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Numerology - People Born On These Dates Are More Likely to Face Betrayal
எண் கணிதத்தின்படி சில தேதிகளில் பிறந்தவர்கள் மென்மையான குணம் கொண்டவர்களாகவும், அதிகப்படியான நம்பகத்தன்மை, இரக்க குணம் மற்றும் தவறான நபர்களை தேர்ந்தெடுக்கும் சுபாவம் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இதன் காரணமாக அவர்கள் மற்றவர்களால் எளிதில் ஏமாற்றப்படுகின்றனர். இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிகமாக நம்பிக்கை துரோகங்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்: Numerology: இந்த தேதியில பிறந்தவங்களுக்கு காசு பணம் நிறைய இருக்கும், ஆனா மன நிம்மதி சுத்தமா இருக்காது.!
மூல எண்ணை கண்டுபிடிப்பது எப்படி?
அதற்கு முன் நாம் ஒவ்வொருவரின் மூல என்னை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். ஒருவர் எந்த ஒரு மாதத்திலும் ஒன்று முதல் ஒன்பதாம் தேதியில் பிறந்திருந்தால் அவரது மூல எண் அந்த பிறந்த தேதியே ஆகும். உதாரணமாக ஒருவர் 7ஆம் தேதி பிறந்திருந்தால் அவரது மூல எண் 7 ஆகும். அதே சமயம் 11 முதல் 31 வரையிலான தேதியில் பிறந்தால் அந்த இரண்டு எண்களின் கூடுதலே அவர்களின் மூல எண்ணாகும். உதாரணமாக ஒருவர் 24 ஆம் தேதி பிறந்திருந்தால் அவரது மூல எண் 2+4=6 ஆகும்.
இதையும் படியுங்கள்:Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மேல காதல் உறவுகள் இருக்குமாம்.! இவங்ககிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.!
தேதிகள்: 2, 11, 20, 29 (கூட்டு எண் - 2)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மனதின் காரகரான சந்திர பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் இயல்பிலேயே மிகவும் மென்மையானவர்கள், உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் கற்பனைத்திறன் மிக்கவர்கள். இவர்கள் மற்றவர்களை மிக எளிதாக நம்பிவிடுவார்கள். யாராவது கஷ்டம் என்று சொன்னால், யோசிக்காமல் உதவி செய்வார்கள். இவர்களின் இந்த இளகிய மனதை மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்ற வாய்ப்புகள் அதிகம்.
இதையும் படியுங்கள்: Venus Transit 2026: இன்று சுக்கிர பெயர்ச்சி.! 5 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! வீடு, கார், பங்களாவுடன் வசதியாக வாழப்போறீங்க.!
தேதிகள்: 7, 16, 25 (கூட்டு எண் - 7)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கேது பகவானால் ஆளப்படுகிறார்கள். இந்த எண்களில் பிறந்தவர்கள் ஆன்மீக சிந்தனை, தனிமை மற்றும் ஆழமான சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் தங்களின் சொந்த உலகத்திலேயே இருப்பதால், சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை கணிக்கத் தவறிவிடுவார்கள். குறிப்பாக, கூட்டுத் தொழில் அல்லது மிக நெருங்கிய நண்பர்களால் இவர்களுக்கு ஏமாற்றங்கள் வரலாம்.
இதையும் படியுங்கள்:Weekly Horoscope: அடுத்த 7 நாட்கள்.! 3 ராஜயோகத்தால் இந்த 5 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது.!
தேதிகள்: 8, 17, 26 (கூட்டு எண் - 8)
இந்த தேதிகளை சனி பகவான் ஆட்சி செய்கிறார். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள். சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட இவர்களுக்கு வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடுவதில்லை. இவர்கள் பலமுறை போராடி முன்னேற வேண்டியிருக்கும். இவர்களது நேர்மையைப் புரிந்து கொள்ளாமல், இவர்களிடம் உதவி பெற்றவர்களே பின்னாளில் இவங்களுக்கு எதிராகத் திரும்பும் சூழல் உருவாகலாம்.
இதையும் படியுங்கள்: Baba Vanga Predictions: பாபா வங்காவின் கணிப்பு - ஜூன் 2வது வாரம் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.! அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள் யார்?
கவனிக்க வேண்டியவை:
ராசி மற்றும் லக்னம்: எண் கணிதம் மட்டுமின்றி, ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12-ஆம் இடங்களின் அதிபதிகள் அல்லது ராகு-கேது சேர்க்கை இருந்தாலும் துரோகங்கள் ஏற்படலாம்.
பெயர் எண்: பிறந்த தேதி நன்றாக இருந்தாலும், ஒருவருடைய பெயரின் கூட்டு எண் பலவீனமாக இருந்தால், அவர்கள் வாழ்வில் அடிக்கடி ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.
பரிகாரம்: இந்த எண்களில் பிறந்தவர்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பண விஷயங்களிலும், ரகசியங்களைப் பகிர்வதிலும் அனைவரிடத்திலும் ஒரு படி தள்ளியே இருப்பது இவர்களுக்கு நல்லது.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

