- Home
- Astrology
- Astrology: சிம்ம ராசியில் இணையும் 4 கிரகங்கள்.! இந்த 5 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்கப் போகுது.!
Astrology: சிம்ம ராசியில் இணையும் 4 கிரகங்கள்.! இந்த 5 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்கப் போகுது.!
50 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசியில் நான்கு கிரகங்களின் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சதுர்கிரக யோகம்
வேத ஜோதிடத்தில் படி கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து சில யோகங்களை உருவாக்குகின்றன. இது மனித வாழ்க்கையில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் சிம்ம ராசியில் சுக்கிரன், சூரியன், புதன் மற்றும் கேதுவின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. செல்வத்தை அளிக்கும் சுக்கிரன் செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்ம ராசியில் சஞ்சரித்து அக்டோபர் 9 ஆம் தேதி வரை அங்கு இருக்கிறார். அதே நேரத்தில் சிம்ம ராசியில் சூரியன், புதன், கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. இந்த மூன்று கிரகங்களுடன் இணைந்து அவர் சதுர்கிரக யோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக சில ராசிகளின் வருமானம் அதிகரிப்பதற்கும், வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சதுர்கிரக யோகத்தால் முதலில் நன்மைகளைப் பெற இருப்பவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். இவர்களின் முதல் வீட்டில் இந்த யோகம் உருவாக இருக்கிறது. சிம்ம ராசிக்காரர்கள் சூரிய கிரகத்தால் ஆளப்படுவதால், அவர்கள் தன்னம்பிக்கை தைரியம் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். தற்போது இந்த நான்கு கிரகங்களின் சேர்க்கை காரணமாக அவர்களின் தன்னம்பிக்கை மேலும் அதிகரிக்கும். அவர்கள் திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும். புதிய சொத்துக்கள், நிலம் வாங்கும் யோகமும் உள்ளது. தொழில் ரீதியாகவும் இந்த காலத்தில் சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர். பணப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து வாழ்க்கையில் ஜொலிக்கும் நேரம் வருகிறது. நிதி நிலைமையிலும் முன்னேற்றம் காரணமாக அவர்கள் மிகப்பெரும் உயரத்தை அடைய உள்ளனர்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் பத்தாவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக அவர்கள் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றத்தை அடைய உள்ளனர். வணிகத்தில் வெற்றி மற்றும் அங்கீகாரத்திற்கான பொன்னான வாய்ப்பை இந்த காலம் உங்களுக்கு கொடுக்கும். உங்கள் படைப்பாற்றல், தலைமைத்துவ திறன்கள் மேம்பட்டு பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு ஒரு குழுவை தாங்குவதற்கான புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் வரலாம். சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பாராத பண வரவு, தொழிலில் நல்ல லாபம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். தொழிலை விரிவுபடுத்துவதற்கான சாதகமான நேரமாகும்.
தனுசு
தனுசு ராசியின் ஒன்பதாவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீச இருக்கிறது. இந்த யோகம் காரணமாக இதுவரை இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். தொழிலதிபர்கள், வணிகர்கள் நல்ல நிதி லாபத்தை பெறுவார்கள். கூட்டு தொழில் செய்ய நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் அதிக லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மன அமைதி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலையை தொடங்க நினைப்பவர்கள், இந்த காலத்தில் தொடங்கினால் நல்ல லாபத்தை பெற முடியும்.
கடகம் மற்றும் மேஷம்
கடக ராசிக்காரர்களுக்கு சதுர் கிரக யோகம் செல்வ வீட்டில் உருவாகிறது. இதன் காரணமாக திடீர் லாபம், எதிர்பாராத பண வரவு, முதலீடுகளில் லாபம், பூர்வீக சொத்துக்கள் மூலம் பண வரவு, பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகி பணம் கைக்கு வந்து சேருதல் போன்ற வாய்ப்புகள் கிடைக்கலாம். அதேபோல் மேஷ ராசியின் ஐந்தாவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலும், குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளையும் பெற முடியும். உறவுகளில் நல்லிணக்கம் ஏற்படும். பிரிந்து சென்ற கணவன் - மனைவி மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.