- Home
- Astrology
- Astrology: 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ராசியில் இணையும் 3 கிரகங்கள்.! இந்த 3 ராசிகளுக்கு புதையல் கிடைக்கப் போகுது.!
Astrology: 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ராசியில் இணையும் 3 கிரகங்கள்.! இந்த 3 ராசிகளுக்கு புதையல் கிடைக்கப் போகுது.!
அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் மூன்று கிரகங்களின் மகா சேர்க்கை நிகழவுள்ளது. இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் கோடீஸ்வர யோகத்தை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

100 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் திரிகிரக யோகம்
ஜோதிட சாஸ்திரங்களின்படி கிரகங்கள் அவ்வப்போது தங்களது ராசியை மாற்றுகின்றன. அப்போது பிற கிரகங்களுடன் இணைந்து அல்லது பிற கிரகங்களை எதிரில் சந்திக்கும் பொழுது சில யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 3 கிரகங்கள் இணைந்து துலாம் ராசியில் மகா சேர்க்கையை நடத்த உள்ளன. கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் பகவான் அக்டோபர் 3 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைந்து, அக்டோபர் 24 வரை அங்கேயே இருப்பார். சூரிய பகவான் அக்டோபர் 17 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைந்து நவம்பர் 19 வரை அங்கேயே இருப்பார். இந்த சமயத்தில் செவ்வாய் பகவானும் துலாம் ராசியில் பயணிக்கிறார்.
3 கிரகங்களின் மகா சேர்க்கை
சூரியன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் திரிகிரக யோகம் உருவாக உள்ளது. இந்த அரிய நிகழ்வு நூறாண்டுகளுக்கு பின் நிகழ இருப்பதாக கூறப்படுகிறது. மூன்று கிரகங்களும் சுப கிரகங்களாக கருதப்படுவதால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் அதிக பலன்களை பெற உள்ளனர். இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள், தொழிலில் முன்னேற்றம், வாழ்க்கையில் முன்னேற்றம், எதிர்பாராத சம்பள உயர்வுடன் கூடிய நல்ல வேலை என்று பல நன்மைகள் கிடைக்கும். அந்த ராசிகள் யார்? அவர்களுக்கான பலன்கள் என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
துலாம் ராசி
துலாம் ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். இந்த மகா சேர்க்கை நடைபெறும் காலகட்டத்தில் உங்களது நம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் நீங்கள் பிரபலமடைவீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் நடத்தை, பேச்சு, இனிமையான தன்மையால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். காதல் உறவுகளில் அதிக நெருக்கம் ஏற்படும். தனிமையை அனுபவிப்பவர்கள் புதிய காதல் உறவில் நுழையலாம். வேலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை துலாம் ராசிக்காரர்கள் அனுபவிக்கலாம்.
கடக ராசி
திரிகிரக யோகம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கலாம். கடக ராசியின் நான்காவது வீட்டில் இந்த யோகம் உருவாகிறது. எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் பொன், பொருள் போன்றவற்றை பெரும் வாய்ப்புகள் உண்டு. புதிய வீடு, வாகனம், மனை வாங்கும் யோகம் உண்டு. வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் சொந்த வீடு கட்டும் யோகம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம். நிலுவையில் இருந்த கடன்கள் தீரலாம். வெவ்வேறு வழிகளில் சிக்கி இருந்த பணம் கைக்கு வந்து சேரலாம். வணிகம், ரியல் எஸ்டேட், சொத்து, நிலம் ஆகியவற்றிலிருந்து நீங்கள் லாபத்தை பெறலாம். திருமணமான பெண்களுக்கு கணவர் குடும்பத்துடனான உறவு வலுவாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு திரிகிரக பல யோகம் நன்மைகளை தரும். ஏனெனில் இந்த யோகம் ரிஷப ராசியில் லாப ஸ்தானத்தில் உருவாகிறது. எனவே இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எதிர்பாராத திடீர் பண வரவுகள் ஏற்படலாம். உங்கள் நிதி நிலைமை திடீரென அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து லாபம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்கள் மன அமைதியை பெறுவார்கள். சக ஊழியர்களுடன் உறவுகள் மேம்படும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகி ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்த காலகட்டத்தில் உங்கள் ஆளுமையிலும் நீங்கள் கவர்ச்சிகரமான மாற்றங்களை காண்பீர்கள்.
(குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்கள் கருத்துக்களில் அடிப்படையில் பெறப்பட்டவை மட்டுமே. இதன் விளைவுகள் மற்றும் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் ஜாதகம் வேறுபடும் என்பதால், அனுபவமிக்க ஜோதிடரை அணுகி ஆலோசிப்பது நல்லது)