- Home
- Astrology
- Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் சம சப்தக யோகம்.! 3 ராசிகளுக்கு பொன்னான நேரம் தொடங்கப் போகுது.!
Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் சம சப்தக யோகம்.! 3 ராசிகளுக்கு பொன்னான நேரம் தொடங்கப் போகுது.!
30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி மற்றும் செவ்வாய் கிரகங்கள் இணைந்து சம சப்தக யோகத்தை உருவாக்க உள்ளன. அதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Samsaptak Yog 2025
ஜோதிட சாஸ்திரங்களின் படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அவ்வாறு மாற்றும் பொழுது பிற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இந்த யோகங்களின் விளைவு மனித வாழ்க்கையில் எதிரொலிக்கிறது. செவ்வாய் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். அதே வேளையில் சனி பகவான் மீனத்தில் பயணம் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிர்கொள்ளும் நிலையில் சம சப்தக யோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக சில ராசிகளுக்கு நேர்மறையான மாற்றங்கள் வரவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்ப ராசி
சம சப்தக யோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அடைய உள்ளனர். இவர்களுக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படலாம். நிலுவையில் இருந்த கடன் பிரச்சனைகள் தீரும். கைக்கு வந்து சேராமல் இருந்த பணங்கள் கிடைக்கலாம். சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு தொழிலில் லாபம் அதிகரித்து, வருமானம் இரட்டிப்பாகும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து பணம் ஈட்டவும் வாய்ப்புகள் உள்ளன. வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் இருந்த மன அழுத்தங்கள் நீங்கி, மன அமைதி கிடைக்கும். வேலை, தொழில், தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்திலும் முன்னேற்றம் கிடைக்கும். கலைத்தறையில் இருப்பவர்களுக்கு திறமை அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளை வரலாம். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் உறவுகளில் பிணைப்பு அதிகரிக்கும். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
மகர ராசி
சம சப்தக யோகத்தால் மகர ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். இந்த நேரத்தில் உங்கள் பண வரவிற்கு புதிய வழிகள் திறக்கும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் திறக்கப்படும். உங்கள் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். உங்கள் படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவ திறன்கள் பாராட்டப்படும். மேலும் பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். திருமணமானவர்களுக்கு தங்களது துணையுடனான உறவு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உள்நாடு அல்லது வெளிநாடு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
ரிஷப ராசி
சம சப்தக யோகத்தால் பலன் பெறும் ராசிகளில் ரிஷப ராசிக்காரர்களும் ஒருவர். இந்த யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும். கலை, எழுத்து, இசை போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். வேலையில்லாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல ஊதியத்துடன், நல்ல பணியிடத்தில் வேலை கிடைக்கும். உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் ஒவ்வொரு தருணத்தை அனுபவிக்கவும் இது சரியான நேரம். சொந்த தொழில் செய்து வருபவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல லாபம் கிடைக்கலாம். ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வாகனம் அல்லது புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து அதிகரிக்கும்.
(குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்கள் கருத்துக்களில் அடிப்படையில் பெறப்பட்டவை மட்டுமே. இதன் விளைவுகள் மற்றும் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் ஜாதகம் வேறுபடும் என்பதால், அனுபவமிக்க ஜோதிடரை அணுகி ஆலோசிப்பது நல்லது)