- Home
- Astrology
- Astrology: சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சி.! செப்டம்பர் 3 முதல் இந்த ராசிக்காரர்களின் தலையெழுத்தே மாறப் போகுது.!
Astrology: சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சி.! செப்டம்பர் 3 முதல் இந்த ராசிக்காரர்களின் தலையெழுத்தே மாறப் போகுது.!
சுக்கிர பகவான் செப்டம்பர் 3 ஆம் தேதி தனது நட்சத்திரத்தை மாற்ற இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆயில்ய நட்சத்திரத்துக்கு செல்லும் சுக்கிரன்
ஜோதிட சாஸ்திரங்களில் படி ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிர பகவான் தனது நட்சத்திரத்தை மாற்ற இருக்கிறார். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவரது ராசி அல்லது நட்சத்திர மாற்றம் சில ராசிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, நிதி நிலைமை, உறவுகளில் மாற்றத்தை கொண்டு வரும். சுக்கிரன் தற்போது கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். செப்டம்பர் 3 ஆம் தேதி இவர் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளார். இதனால் நான்கு ராசிகளின் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
சுக்கிரனின் ஆயில்ய நட்சத்திர பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தர உள்ளது. மனதில் இதுவரை இருந்து வந்த விஷயங்கள் மற்றும் உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். இதன் காரணமாக குடும்ப உறவுகள், நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணை உடனான உறவு மேம்படும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் வேலை செய்து வருபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். புதிய முதலீடுகளில் முதலீடு செய்யும் வாய்ப்புகளும், ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபமும் கிடைக்கும். சுக்கிரனின் அருள் காரணமாக மேஷ ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை, காதல் வாழ்க்கை, நிதி நிலைமை என அனைத்தும் மேம்பட உள்ளது.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி குடும்ப ரீதியான பலன்களை வழங்க உள்ளது. இதுவரை மனதில் ஒளித்து வைத்திருந்த காதலை துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகளும் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாமல் வரன் தேடி வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். புதிய வீடு, வாகனம், சொத்துக்கள், நிலம், மனை வாங்கும் யோகமும் உண்டு. இந்த காலத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். சொந்த வீடு கனவில் இருப்பவர்கள் அந்த கனவை நிறைவேற்றும் காலம் நெருங்கி உள்ளது.
மகர ராசி
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் எதிர்பாராத நன்மைகளை பெறுவீர்கள். உங்களுக்கு எதிர்பாராத நிதி வரவுகள் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். மேலும் தொழிலை விரிவு செய்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். வாழ்க்கையில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மன மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே உறவு மேம்படும். அன்பு அதிகரிக்கும். சொந்தமாக தொழில் செய்ய நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கு உங்களுடைய வாழ்க்கை துணையும் உறுதியாக இருப்பார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய இடத்தில் வேலை கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
மீன ராசி
மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளது. ஒரு தலையாக காதலித்து வருபவர்களுக்கு காதல் கைகூடும். மன அழுத்தம் குறைந்து மன அமைதி அதிகரிக்கும். உங்களுடைய பேச்சுத்திறன் காரணமாக உங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பேச்சின் மூலம் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலவையில் இருந்த பணிகள் முடிக்கப்படும். உங்களுடைய பணம் எங்கேனும் சிக்கி இருந்தால் அந்த பணம் மீண்டும் உங்கள் கைக்கு தேடி வரும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கலாம். சிலர் பணி காரணமாக வெளிநாடு செல்லவும் நேரிடலாம்.
(குறிப்பு: இந்த தகவல்கள் ஜோதிட கருத்துக்களின் அடிப்படையிலானது மட்டுமே. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகமும் வேறுபடும் என்பதால் அனுபவமிக்க ஜோதிடரை கலந்தாலோசிப்பது நல்லது)