- Home
- Astrology
- Astrology: விருச்சிகத்தில் அஸ்தமனமாகும் புதன்.! நவ.12 முதல் தொழிலில் வெற்றியை குவிக்கப்போகும் 3 ராசிகள்.!
Astrology: விருச்சிகத்தில் அஸ்தமனமாகும் புதன்.! நவ.12 முதல் தொழிலில் வெற்றியை குவிக்கப்போகும் 3 ராசிகள்.!
Budhan Peyarchi Rasi Palangal: நவம்பர் 12, 2025 அன்று புதன் பகவான் விருச்சிக ராசியில் அஸ்தமனம் ஆகிறார். அதன் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

விருச்சிக ராசியில் அஸ்தமனமாகும் புதன்
ஜோதிடத்தில் புதன் பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். புதன் பகவான் புத்திசாலித்தனம், பேச்சுத் திறன், கல்வி, தகவல் தொடர்பு, வணிகம் ஆகவற்றின் காரகராக விளங்குகிறார். அஸ்தமனம் என்பது ஒரு கிரகம் சூரியனுக்கு மிக அருகில் வரும் பொழுது, அதன் ஒளி மங்கிப்போவதை குறிக்கும் ஒரு ஜோதிட நிலையாகும்.
புதன் பகவான் விருச்சிக ராசியில் அஸ்தமனம் ஆவதால் அவரின் காரகத்துவங்கள் சற்று பலவீனம் அடையலாம் அல்லது மறைமுகமாக செயல்படலாம். இருப்பினும் புதன் பகவானின் அஸ்தமனம் சில ராசிகளுக்கு அதிக நற்பலன்களை கொடுக்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியின் 11-வது வீட்டில் புதன் அஸ்தமனமாக இருக்கிறார். இது லாபம், ஆசைகள் நிறைவேறும் இடம் மற்றும் நண்பர்கள் வீட்டை குறிக்கிறது. இந்த காலகட்டத்தில் மகர ராசிக்காரர்களின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். பணத்தை வீணாக செலவு செய்து வருபவர்கள், இனி பணத்தை சேமிக்க முடியும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
பல துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பணிபுரிபர்களுக்கு இந்த காலம் பயனுள்ளதாக இருக்கும். உங்களின் திறமைகள் மற்றும் செயல்பாடு பாராட்டுகளை பெறும். புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் ஒன்பதாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகிறார். இது தந்தை, உயர் கல்வி, நீண்ட தூர பயணம் ஆகியவற்றை குறிக்கும் வீடாகும். இது பாக்கிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முடிக்கப்படாத வேலைகள் சிறப்பாக முடியும்.
மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் இருந்த தவறான புரிதல்கள் மற்றும் பிரச்சனைகள் தீரும். மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் வசம் இருக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் முன்னேற்றம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் மூன்றாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகிறார். இது தைரியம், இளைய சகோதரர்கள் மற்றும் தகவல் தொடர்பு வீட்டை குறிக்கிறது. இதன் காரணமாக பணியிடத்தில் நீங்கள் சந்தித்து வந்த வேலைப்பளு குறையும். இதன் காரணமாக மன அழுத்தம் நீங்கி ஒவ்வொரு வேலையையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
வணிகர்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் அதிக லாபம் தரும் புதிய ஒப்பந்தங்களை பெறுவீர்கள். மாணவர்களுக்கு போட்டிகள் மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)