- Home
- Astrology
- Astrology: வக்ர பயணத்தைத் தொடங்கிய குரு பகவான்.! அடுத்த 4 மாதங்களுக்கு ராஜ வாழ்க்கை வாழப்போகும் 5 ராசிகள்.!
Astrology: வக்ர பயணத்தைத் தொடங்கிய குரு பகவான்.! அடுத்த 4 மாதங்களுக்கு ராஜ வாழ்க்கை வாழப்போகும் 5 ராசிகள்.!
Guru Vakra peyarchi rasi palangal: நவம்பர் 11, 2025 குரு பகவான் தனது வக்ர பயணத்தை தொடங்குகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் சுப பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குரு வக்ர பெயர்ச்சி 2025
ஜோதிடத்தில் குரு பகவான் சுப பலன்களை அளிக்கும் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். அவர் அறிவு, ஞானம், அதிர்ஷ்டம், செல்வம், மங்களகரமான நிகழ்வுகள், குழந்தை பாக்கியம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். அவர் நவம்பர் 11, 2025 அன்று வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குகிறார்.
ஒரு கிரகம் வக்ரமடையும் பொழுது அதன் பலன்கள் தீவிரமடையும் என்று நம்பப்படுகிறது. இந்த வக்ர பெயர்ச்சி குருவின் உச்ச ராசியான கடகத்தில் நிகழ்கிறது. குரு உச்சம் பெறும் ராசியில் வக்ரமடைவது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.
குரு வக்ர பெயர்ச்சி காலம்
நவம்பர் 11, 2025 முதல் மார்ச் 11, 2026 வரை சுமார் 4 மாதங்கள் குரு பகவான் வக்ர நிலையில் இருப்பார். குரு பகவான் தனது உச்ச ராசியில் வக்ரமடைவதால் 5 ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மையைப் பெறுவீர்கள். சில மாதங்களாக தடைபட்டிருந்த காரியங்கள் அல்லது நின்று போன சுபகாரியங்கள் மீண்டும் வேகம் பெற வாய்ப்பு உள்ளது. குருவின் வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெற உள்ள ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
1.ரிஷபம்
ரிஷப ராசியின் மூன்றாவது வீடான பராக்கிரம ஸ்தானத்தில் குரு வக்கிர நிலையில் சஞ்சரிக்கிறார். எனவே ரிஷப ராசிக்காரர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தள்ளிப்போன காரியங்கள் மீண்டும் வேகமெடுக்கும். பணப்புழக்கம் சீராகும்.
எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புகள் உண்டு. நீங்கள் செய்த பழைய முதலீடுகள் மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். சகோதரர்கள் அல்லது உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உறவு மேம்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலக வேலை செய்பவர்களுக்கு சாதகமான காலமாகும். மாணவர்கள் தேர்வில் வெற்றியைப் பெறுவீர்கள்.
2.சிம்மம்
குருவின் வக்ர பெயர்ச்சியானது சிம்ம ராசியின் 11-வது வீட்டில் நடைபெற இருக்கிறது. 11-வது வீடு என்பது லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் உங்களின் நீண்ட நாட்கள் கனவுகள், ஆசைகள் நிறைவேறத் தொடங்கும். தொழில் அல்லது வேலையில் எதிர்பார்த்த லாபம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கலாம்.
திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். புதிய நண்பர்கள் மற்றும் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நீண்ட கால முதலீடுகள் குறித்து நீங்கள் எடுத்த முடிவுகள் நல்ல பலன்களைத் தரத் துவங்கும்.
3.துலாம்
துலாம் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாவது வீட்டில் குரு வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பது என்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் லாபம் தரும். தந்தை வழி உறவுகளுடன் உறவு மேம்படும். உயர்கல்வி பயில நினைப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக அமையும். மாணவர்கள் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள்.
4.தனுசு
தனுசு ராசியின் அதிபதியான குரு பகவான் தனுசு ராசியின் ஏழாம் வீட்டில் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் தீரும். தம்பதிகளுக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். நம்பகமான கூட்டாளிகள் கிடைப்பார்கள்.
உடல்நலக் கோளாறுகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். இத்தனை நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த பழைய நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். சமூகத்தில் உங்கள் பெயரும், புகழும் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும்.
5.மகரம்
மகர ராசியின் ஆறாம் வீட்டில் குரு வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். ஆறாம் வீடு என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. ஆறாம் இடத்தில் வக்ரமடையும் குருவால் உங்களுக்கு இருந்த கடன் சுமைகள் குறையும். தீராத நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு கிடைக்கும்.
வழக்குகள் மற்றும் சட்ட ரீதியான பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். பணியிடத்தில் உங்களின் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பீர்கள். நிதி நிலைமை சீரடையும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)