- Home
- Astrology
- Astrology: வக்ர பயணத்தை தொடங்கிய புதன் பகவான்.! 4 ராசிகளுக்கு பிரச்சனைகள் சுத்தி சுத்தி அடிக்கப் போகுதாம்.!
Astrology: வக்ர பயணத்தை தொடங்கிய புதன் பகவான்.! 4 ராசிகளுக்கு பிரச்சனைகள் சுத்தி சுத்தி அடிக்கப் போகுதாம்.!
Budhan Vakra Peyarchi unlucky zodiac signs: நவம்பர் 10, 2025 புதன் பகவான் வக்ர நிலையில் பயணிக்க இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் மோசமான பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

புதன் வக்ர பெயர்ச்சி 2025
ஜோதிடத்தின்படி புதன் பகவான் கிரகங்களின் இளவரசராக அறியப்படுகிறார். இவர் அறிவு, பேச்சு, படிப்பு, தகவல் தொடர்பு, வணிகம், ஒப்பந்தங்கள், பயணம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். புதன் பகவான் நவம்பர் 10 ஆம் தேதி மதியம் 12:31 மணிக்கு விருச்சிக ராசியில் தனது வக்ர இயக்கத்தை தொடங்குகிறார். இது நவம்பர் 30 வரை சுமார் 20 நாட்களுக்கு நீடிக்க இருக்கிறது.
வக்ர நிலை என்பது கிரகங்கள் பின்னோக்கி நகர்வது போன்ற ஒரு தோற்றமாகும். புதன் பகவானின் இந்த இயக்கமானது, சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளை அளித்தாலும், சில ராசிக்காரர்களுக்கு சவால்கள் அல்லது எதிர்மறை பலன்களை கொண்டு வரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்
- புதன் பகவானின் வக்ர பெயர்ச்சி மேஷ ராசியின் எட்டாவது வீட்டில் நடைபெற இருக்கிறது. எட்டாம் இடம் என்பது மறைமுகமான விஷயங்கள், ஆயுள், திடீர் நிகழ்வுகள், நிதி ஆகியவற்றை குறிக்கிறது.
- இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி சிக்கல்கள் அல்லது கடன்களில் சிக்க நேரிடலாம்.
- முதலீடுகள் அல்லது பங்குதாரர்களுடன் பண விஷயங்களில் குழப்பம் ஏற்படலாம்.
- ஆரோக்கியத்திலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். குறிப்பாக செரிமானம், தோல் அல்லது நரம்பு தொடர்பான பிரச்சனைகள் தலைதூக்கலாம்.
- உரையாடல்களின் போது தேவையில்லாத வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள், சண்டைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மாதத்தில் சில முக்கிய முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது.
ரிஷபம்
- ரிஷப ராசிக்கு புதனின் வக்ரமானது ஏழாம் வீட்டில் நடக்க வாய்ப்பு உள்ளது. ஏழாம் இடம் என்பது உறவுகள், திருமணம், கூட்டாண்மை மற்றும் பொது வாழ்க்கையை குறிக்கும் வீடாகும்.
- எனவே இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை அல்லது காதல் உறவுகளில் தேவையில்லாத மனக்குழப்பங்கள் ஏற்படலாம்.
- முடிந்து போன பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கலாம். எனவே உறவுகளில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டியது அவசியம்.
- தொழிலில் கூட்டாளிகளுடன் ஒப்பந்தங்கள் அல்லது பண பரிமாற்றங்களில் சந்தேகங்கள், தவறான புரிதல்கள் ஏற்படலாம். எனவே புதிய ஒப்பந்தங்களை தவிர்க்கவும்.
- உடல் ஆரோக்கியம் சற்று பின்னடைவை சந்திக்கலாம். வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் அல்லது உடல் சோர்வு ஏற்படலாம்.
சிம்மம்
- புதனின் வக்ரமானது சிம்ம ராசியின் நான்காம் வீட்டில் நிகழ வாய்ப்பு உள்ளது. நான்காம் இடம் என்பது வீடு, வாகனம், தாய் மற்றும் மன அமைதியை குறிக்கிறது.
- புதனின் வக்ர பெயர்ச்சியால் குடும்பம் அல்லது தாயின் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் மற்றும் கவலைகள் ஏற்படலாம். இதன் காரணமாக மன அமைதி குறைய வாய்ப்பு உள்ளது.
- வீடு, மனை அல்லது வாகனம் வாங்குதல்/ விற்றல் தொடர்பான முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது.
- ஆவணங்களில் குழப்பங்கள் ஏற்படலாம். பழுது பார்க்கும் செலவுகள் அதிகரிக்கலாம். குறுகிய பயணங்கள் மற்றும் தகவல் தொடர்புகளில் தாமதம், குழப்பங்கள், தடைகள், சிரமங்கள் உண்டாகலாம்.
துலாம்
- புதனின் வக்ரப் பெயர்ச்சியானது துலாம் ராசியின் இரண்டாம் வீட்டில் நடக்க இருக்கிறது. இரண்டாம் வீடு செல்வம், குடும்பம் மற்றும் பேச்சுத்திறனை குறிக்கிறது.
- எனவே இந்த காலக்கட்டத்தில் உங்கள் பேச்சில் கடுமையும், தவறான புரிதலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையற்ற வார்த்தைகளால் குடும்பத்திலும் வெளியிலும் பிரச்சனைகள் வரலாம்.
- வருமானம் திருப்தி அளிக்காமல் போகலாம். சேமிப்பு குறையலாம் அல்லது எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
- குடும்ப உறுப்பினர்கள் அல்லது தம்பதிகளுக்கிடையே சிறு சண்டைகள், மனவருத்தங்கள் உண்டாகலாம். எனவே பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)