- Home
- Astrology
- Astrology: 10 ஆண்டுகளுக்குப் பிறகு குரு சுக்கிரன் உருவாக்கும் ஷாடங்க யோகம்.! நவ.11-க்குப் பிறகு 3 ராசிகளின் தலையெழுத்து மாறும்.!
Astrology: 10 ஆண்டுகளுக்குப் பிறகு குரு சுக்கிரன் உருவாக்கும் ஷாடங்க யோகம்.! நவ.11-க்குப் பிறகு 3 ராசிகளின் தலையெழுத்து மாறும்.!
Shatank Yog 2025: குரு சுக்கிரன் ஒருவருக்கொருவர் 100 டிகிரி கோண நிலையில் அமைவதால் மங்களகரமான ஷடாங்க யோகம் உருவாகிறது. இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஷடாங்க யோகம் 2025
வேத நாட்காட்டியின் படி கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைகின்றன. இதனால் சுப மற்றும் ராஜ யோகங்கள் உருவாகி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் சுப கிரகங்களான குரு பகவானும், சுக்கிரனும் நவம்பர் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 100 டிகிரி கோணத்தில் சஞ்சரித்து ஷடாங்க யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகம் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. இவர்கள் வாழ்வில் அதிக வருமானத்தையும், தொழில் முன்னேற்றத்தையும் அனுபவிக்க உள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
ஷடாங்க யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். ஆடம்பரத்தின் காரகரான சுக்கிர பகவான் உங்களுக்கு புதிய வருமானத்திற்கான ஆதாரங்களை திறக்க இருக்கிறார். தொழிலதிபர்கள் புதிய ஆர்டர்கள் மூலம் லாபம் பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுகளையும், புதிய பொறுப்புகளையும் பெற வாய்ப்பு உள்ளது. நீங்கள் முன்னர் சேமித்த சேமிப்புகள் அல்லது முதலீடுகள் மூலம் லாபம் பெறுவீர்கள். இந்த நேரத்தில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கலாம். உங்கள் நீண்ட நாள் ஆசைகள், கனவுகள், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஷடாங்க யோகம் காரணமாக நல்ல நாட்கள் தொடங்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவீர்கள். உங்கள் தொழில் மற்றும் வணிகத்தில் நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள். நிலுவையில் இருந்த கடன் பிரச்சனைகள் முடிவடையும். கைக்கு வராமல் இருந்த பணம் வந்து சேரும். நிதி நிலைமை மற்றும் பொருளாதாரம் வலுவடையும். முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி பெருகும். வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கலாம். கடன்களை அடைத்து மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஷடாங்க யோகம் சுப பலன்களை அளிக்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழிலில் புதிய உச்சங்களை அடைவீர்கள். வேலையில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பழைய திட்டங்களில் வெற்றி கிடைக்கும். தனிப்பட்ட உறவுகளில் புரிதல் மேலோங்கும். புதிய வேலை, புதிய வாகனம், புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும் வாழ்க்கையில் நிலைத்தன்மையும், மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)