- Home
- Astrology
- Astrology: நவம்பரில் பின்னோக்கி நகரத் தொடங்கிய 3 கிரகங்கள்.! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.! 2 ராசிகளுக்கு எச்சரிக்கை.!
Astrology: நவம்பரில் பின்னோக்கி நகரத் தொடங்கிய 3 கிரகங்கள்.! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.! 2 ராசிகளுக்கு எச்சரிக்கை.!
3 planets retrograde in november lucky zodiac signs: நவம்பர் 2025 ஆம் ஆண்டு நடக்க உள்ள கிரகங்களின் வக்ர பெயர்ச்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் இங்கு விரிவாக பார்க்கலாம்.

நவம்பரில் 3 கிரகங்களின் வக்ர பெயர்ச்சி
ஜோதிடத்தில் வக்ர பெயர்ச்சி என்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. ஒரு கிரகம் பின்னோக்கி செல்வது போன்ற ஒரு தோற்றம் வக்ர பெயர்ச்சி எனப்படுகிறது. 2025 நவம்பரில் மூன்று கிரகங்கள் வக்ர நிலையில் சஞ்சரிக்க உள்ளன.
குரு பகவான்
நவம்பர் 11, 2025 குரு பகவான் தனது உச்ச வீடான கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் சுப பலன்களை அளிப்பவராக கருதப்படுகிறார். அவர் உச்ச வீட்டில் வக்ரமாவது பல ராசிகளுக்கு கூடுதல் நன்மைகளை தரக்கூடும் என்றாலும், சிலருக்கு குடும்பம் மற்றும் நிதிநிலை சார்ந்த விஷயங்களில் மறுபரிசீலனை செய்ய நேரிடலாம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த வக்ர நிலை மார்ச் 2026 வரை நீடிக்க உள்ளது.
புதன் பகவான்
புதன் பகவான் விருச்சிக ராசியில் நவம்பர் 10, 2025 அன்று வக்ரமாகிறார். தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம், வணிகம் ஆகியவற்றின் காரகராக விளங்கும் இவர் வக்ரமாவது கலவையான பலன்களை வழங்க உள்ளது. தகவல் தொடர்பில் குழப்பங்கள், பயணங்களில் தாமதம், ஒப்பந்தங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். ரகசிய விஷயங்கள், கூட்டு நிதி தொடர்பான விஷயங்களில் மறு ஆய்வு செய்ய நேரிடலாம்.
சனி பகவான்
சனி பகவான் நவம்பர் 28, 2025 மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். நீதி, கடமை, பொறுமை ஆகியவற்றின் காரகராக இருக்கும் இவர், கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இவர் நவம்பர் இறுதியில் வக்ர நிவர்த்தி அடைந்து நேரடியாக பயணிக்க இருக்கிறார். இதன் காரணமாக காரியங்களில் முன்னேற்றம், வேலைகளில் இருந்த தடைகள் நீங்குதல், தெளிவான முடிவுகளை எடுத்தல் ஆகியவை நடைபெறும்.
பலன்பெறும் ராசிகள்:
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கிரக பெயர்ச்சிகள் காரணமாக குடும்ப பிரச்சினைகள் தீரும். திருமணம் அல்லது தனிப்பட்ட உறவுகளிலிருந்து கருத்து வேறுபாடுகள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். திருமணத்தில் இருந்த தடைகள் விலகி சுப காரியங்கள் கைகூடும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைவேறும். எதிர்பார்த்த அரசு வேலை அல்லது போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் மண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் ராஜபோக வாழ்க்கை கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத அளவிற்கு வளர்ச்சி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதாரம் மற்றும் நிதிநிலை மேம்படும். பழைய முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:
மேஷம்: குருவின் வக்ரம் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீடு, குடும்பம் தொடர்பான விஷயங்களில் மறு ஆய்வு செய்ய நேரிடலாம். சொத்துக்களில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். தாய் வழி உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்: புதன் பகவானின் வக்ரம் காரணமாக கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியான போட்டிகள் ஏற்படலாம். தொழிலில் எதிரிகள் அதிகரிக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)