- Home
- Astrology
- Astrology: ஒரே வீட்டில் குடியேறும் சுப கிரகங்கள்.! இழந்த அனைத்தையும் திருப்பி பெறப்போகும் 4 ராசிகள்.!
Astrology: ஒரே வீட்டில் குடியேறும் சுப கிரகங்கள்.! இழந்த அனைத்தையும் திருப்பி பெறப்போகும் 4 ராசிகள்.!
Sun Mars Yuti 2025 in scorpio: நவம்பர் மாதத்தில் விருச்சிக ராசியில் சூரியன் மற்றும் செவ்வாய் பகவானின் இணைவு நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் திடீர் யோகத்தை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதித்ய மங்கள யோகம் 2025
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக சூரிய பகவானும், கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவானின் விளங்கி வருகின்றனர். ஜோதிட சாஸ்திரத்தில் முக்கிய கிரகங்களாக அறியப்படும் இவர்கள் விரைவில் விருச்சிக ராசியில் ஒன்றாக இணைய இருக்கின்றனர். துலாம் ராசியில் பயணித்து வரும் சூரிய பகவான் நவம்பர் 16 அன்று விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் டிசம்பர் 7ஆம் தேதி வரை விருச்சிக ராசியில் பயணிக்கிறார்.
விருச்சிகத்தின் அதிபதியான ஏற்கனவே செவ்வாய் விருச்சிக ராசியில் இருக்கிறார். இந்த நிலையில் நவம்பர் 16 சூரியன் - செவ்வாய் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இந்த சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
செவ்வாய் பகவான் விருச்சிக ராசியின் முதல் வீட்டில் பயணித்து வரும் நிலையில் சூரிய பகவானும் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இணைய இருக்கிறார். இதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மையைப் பெறுவீர்கள். ஆற்றல், தைரியம், வீரம் ஆகியவற்றின் காரகரான செவ்வாய் பகவானும், தலைமைப் பண்பு, தன்னம்பிக்கை, செயல்திறன் ஆகியவற்றின் காரகரான சூரிய பகவானும் இணைவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் எதிர்பாராத வெற்றிகளை குவிப்பீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். துணிச்சலாக முடிவுகளை எடுத்து சாதித்துக் காட்டுவீர்கள். மனதில் ஒருவித அமைதி நிலவும். உடல் நலக்கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். பழைய உடல் நலப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
சிம்மம்
சூரியன் மற்றும் செவ்வாய் இணைவது சிம்ம ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களைக் கொடுக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் ஒன்றாக நடைபெறத் தொடங்கும். நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கலாம்.
நீங்கள் ஏற்கனவே செய்த பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமையானவர்களாக மாறுவீர்கள். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். உடல் நலக்கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் ஆறாவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இந்த இணைவு வருமானத்திற்கான புதிய வழிகளை திறக்கும். பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்ப வாழ்க்கையில் அன்னோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.
கடின உழைப்புக்கான முழு பலன்களையும் பெறுவீர்கள். முதலீடுகளில் இருந்து லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு சாதகமான காலமாகும். நீங்கள் எதிர்பார்த்ததை விட ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் ஏழாம் வீட்டில் செவ்வாய் மற்றும் சூரியனின் இணைவு நடைபெற இருக்கிறது. எனவே ரிஷப ராசிக்காரர்களுக்கு குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் விரைவான மற்றும் நிலையான வளர்ச்சியைப. பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை அதிகரிக்கும்.
இத்தனை நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த மனக்கஷ்டங்கள் மற்றும் மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனும் தரமான நேரத்தை செலவழிப்பீர்கள். வேலையிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)