- Home
- Astrology
- Astrology: சூரிய பகவானை சந்திக்கும் எமன்.! உருவாகும் சக்தி வாய்ந்த பஞ்சாங்க யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.!
Astrology: சூரிய பகவானை சந்திக்கும் எமன்.! உருவாகும் சக்தி வாய்ந்த பஞ்சாங்க யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.!
Panchanga Rajyog Lucky zodiac signs: நவம்பர் 11, 2025 அன்று சூரியனும் எமனும் இணைந்து பஞ்சாங்க யோகத்தை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் நிதி நன்மைகளை அடைய இருக்கின்றனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பஞ்சாங்க யோகம் 2025
ஜோதிடத்தின்படி கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றன. அதன் விளைவுகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. அந்த வகையில் கிரகங்களின் ராஜாவான சூரியன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பிறகிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்கி வருகிறார்.
அந்த வகையில் மகர ராசியில் அமைந்துள்ள எமனுடன் இணைந்து பஞ்சாங்க யோகத்தை உருவாக்க இருக்கிறார். நவம்பர் 11 மதியம் 1:47 மணிக்கு சூரியனும் எமனும் ஒருவருக்கொருவர் 72 டிகிரியில் அமைவதால் பஞ்சாங்க யோகம் உருவாகிறது. இதன் காரணமாக பலன் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
- சிம்ம ராசியின் மூன்றாவது வீட்டில் சூரியனும், ஆறாவது வீட்டில் எமனும் இருக்கின்றனர். இதன் விளைவாக உருவாகும் பஞ்சாங்க யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க இருக்கிறது.
- சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் புதிய வழிகள் பிறக்கும். நேர்மறையான மாற்றங்கள் காணப்படும்.
- மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிக சுறுசுறுப்பாக உணரப்படுவீர்கள். நின்று போன காரியங்கள் மீண்டும் வேகம் பெறும். குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
- குடும்பத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கும். உறவுகள் வலுவடையும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு வேலைகளும் வெற்றியை மட்டுமே காண்பீர்கள்.
தனுசு
- தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன் எமன் இணைந்து உருவாக்கும் பஞ்சாங்க யோகம் மிகவும் நன்மை பயக்கும். சூரியன் 11-வது வீடான லாப ஸ்தானத்திலும், எமன் நான்காவது வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர்.
- இதன் விளைவாக தனுசு ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் ஒவ்வொன்றாக முடிவடையும்.
- இத்தனை நாட்களாக நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரத் தொடங்கும். இதன் காரணமாக வாழ்வில் அதிகளவில் மகிழ்ச்சி கிடைக்கும்.
- உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்டும்.
- வாழ்க்கையில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கும்.
கும்பம்
- கும்ப ராசியின் 12-வது வீட்டில் சூரியனும், அதிர்ஷ்ட வீட்டில் எமனும் இருப்பார்கள். இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிக்கப்படும். உங்களின் செல்வம் கணிசமாக அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கத் தொடங்கும். வாழ்வில் சந்தித்து வந்த அனைத்து தடைகளும் நீங்கும்.
- புதிய சவால்களை சமாளிப்பதற்கான மன தைரியத்தைப் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவு மேம்படும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும்.
- வேலை செய்பவர்கள் பணியிடத்தில் குறிப்பிடத்தக்க பலன்களை அனுபவிப்பீர்கள்.
- வணிகத்தில் விரிவாக்கம் மற்றும் லாபத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ரீதியான பல நன்மைகள் கிடைக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)