- Home
- Astrology
- Numerology: இந்த தேதிகளில் பிறந்த பெண்களை கல்யாணம் பண்றவங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம்.!
Numerology: இந்த தேதிகளில் பிறந்த பெண்களை கல்யாணம் பண்றவங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம்.!
எண் கணிதத்தின் படி குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் கணவர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் கொண்டு வருவார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த ஐந்து தேதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Birth Date
எண் கணித ஜோதிடத்தின் படி ஒரு குறிப்பிட்ட தேதியில் பிறந்தவர்களுக்கு தனித்துவமான குணாதிசயங்களும், அதிர்ஷ்டங்களும் அமையும் என்று நம்பப்படுகிறது. இது ஒரு பொதுவான நம்பிக்கை மட்டுமே. அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் இந்த நம்பிக்கையின் படி சில தேதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் கணவர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த தேதிகள் என்ன? அதற்கு பின்னால் கூறப்படும் காரணங்கள் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
5 ஆம் தேதி
5 ஐந்தாம் தேதியில் பிறந்த பெண்கள் புதனின் ஆதிக்கம் கொண்டவர்களாக விளங்குவார்கள் இவர்கள் மிகவும் புத்திசாலித்தனம், விரைவான முடிவெடுக்கும் திறன் மற்றும் சுறுசுறுப்பு மிக்கவர்கள். ஐந்தாம் தேதியில் பிறந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத வாய்ப்புகள் மற்றும் புதிய வியாபார யோசனைகள் மூலம் இந்த பெண்கள் கணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இவர்கள் உறவுகளை மிகவும் மதிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பதால் குடும்ப உறவிலும் சுமூகமான சூழல் நிலவும்.
14 ஆம் தேதி
1+4=5 இவர்களும் புதனின் ஆதிக்கம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். ஐந்தாம் தேதியில் பிறந்தவர்களுக்கான அதே குணமும் அதிர்ஷ்டங்களும் இவர்களிடமும் இருக்கும். கணவர்களின் சமூக அந்தஸ்து, செல்வாக்கு ஆகியவை உயர இவர்கள் காரணமாக இருப்பார்கள். குடும்பத்தில் நேர்மறை ஆற்றல்களை நிரப்பும் சக்தி இவர்களுக்கு உண்டு. எந்த சிக்கலான சூழ்நிலைகளையும் திறமையாக கையாளும் திறன் கொண்டவர்கள். இந்த பெண்கள் கணவருக்கு தொழில் ரீதியாகவும் பல யோசனைகளை கூறி அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
23 ஆம் தேதி
2+3=5 இந்த தேதியில் பிறந்தவர்களும் புதனில் ஆதிக்கம் கொண்டவர்களே. இவர்கள் வாழ்வில் எதையும் எளிதாக பெற்று விடமாட்டார்கள். தங்களது கடின உழைப்பின் மூலமே சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் கணவரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளை திறப்பார்கள். தடைகளை உடைத்து வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள். இதன் காரணமாக கணவருக்கு எந்த சூழ்நிலையிலும் பக்கபலமாக இருப்பார்கள். இவர்களின் தலைமைப் பண்பு, நிர்வாகத் திறன் ஆகியவை குடும்பத்திற்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
6 ஆம் தேதி
ஆறாம் தேதியில் பிறந்த பெண்கள் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்கள். சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், கலை, மகிழ்ச்சி, அன்பு ஆகியவற்றிற்கு சொந்தக்காரர். இந்த தேதியில் பிறந்த பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வருவார்கள். கணவரின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணவர் செய்யும் தொழிலை முன்னேற்ற பாடுபடுவார்கள். இதன் காரணமாக ஆடம்பரமான வசதிகளையும் செல்வ செழிப்பையும் பெருக்குவார்கள். தங்கள் கணவர் மற்றும் குடும்பத்தின் மீது ஆழ்ந்த அன்பு கொண்ட இவர்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும்.
15 ஆம் தேதி
1+5=6 இவர்களும் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்களே. ஆறாம் தேதியில் பிறந்தவர்களுக்கான சிறப்பான குணங்களும் அதிர்ஷ்டங்களும் இவர்களிடமும் இருக்கும். இவர்கள் கணவரின் தொழில் வியாபாரத்தில் வெற்றியை கொண்டு வருவதற்கு கடும் பாடுபடுவார்கள். கணவருக்கு தேவையான அனைத்து ஆதரவையும், ஊக்கத்தையும் வழங்குவார்கள். இவர்களின் வரவு கணவர்களின் வாழ்க்கையில் புதிய வெளிச்சத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.
(குறிப்பு: இந்த எண் கணித கருத்துக்கள் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தவை மட்டுமே. ஒருவரின் வாழ்க்கை, அதிர்ஷ்டம் மற்றும் உறவு பிணைப்புகள் ஆகியவை பல காரணிகளைப் பொறுத்தது. தனிப்பட்ட குணம், இருவரின் புரிதல், அன்பு, கடின உழைப்பு மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகள் திருமண உறவில் வெற்றியையும், அதிர்ஷ்டத்தையும் தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் ஆகும். மேற்குறிப்பிட்ட தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை மட்டுமே. எந்தவித மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் நோக்கமும் அல்ல. இந்த கருத்துக்களுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)