- Home
- Astrology
- Zodiac Signs: மிதுன ராசிக்கு செல்லும் சுக்கிரன்.. கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள் இவர்கள் தான்
Zodiac Signs: மிதுன ராசிக்கு செல்லும் சுக்கிரன்.. கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள் இவர்கள் தான்
ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் பொழுது பல சுப பலன்களை தருவார் என்பது ஐதீகம். அந்த வகையில் சுக்கிரன் பெயர்ச்சியால் பலனடையவுள்ள நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சுக்கிரன் பெயர்ச்சியால் பலனடையும் ராசிகள்
சுக்கிரன் செல்வத்திற்கும், ஆடம்பத்திற்கும், மகிழ்ச்சிக்கும் அதிபதியாவார். அவரது பெயர்ச்சி பலரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். வருகிற ஜூலை 26 ஆம் தேதி அன்று காலை 8:45 மணிக்கு சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனான புதன் கிரகத்தின் ராசியான மிதுனத்திற்கு மாறுகிறார். இந்த பெயர்சியானது சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை வழங்க இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். சுக்கிரன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் பொழுது சில ராசிகள் அதிகப்படியான நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் பெற வாய்ப்புள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்
சுக்கிரனின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை வழங்க உள்ளது. சுக்கிரன் மிதுன ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் அவர்களுக்கு சிறப்பான காலம் அமைய உள்ளது. பொன், பொருள், தங்க நகைகள் வாங்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீர்ந்து காதல் உணர்வுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். தொழிலில் இதுவரை கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து வந்தவர்களுக்கு பிரச்சனைகள், கடன்கள் அனைத்தும் நீங்கி நல்ல பண வரவும், முன்னேற்றமும் ஏற்படும். சரியான வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானம் முன்பு இருந்ததை விட பன்மடங்கு பெருகும். பொருளாதார நிலை மேம்பட்டு வாழ்க்கை சிறப்பானதாக மாறும்.
சிம்மம்
சிம்மராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சியால் பல நன்மைகள் வந்து சேர உள்ளது. சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11-வது வீடான லாப ஸ்தானத்தில் அமர இருக்கிறார். இது எதிர்பாராத பணவரவை அதிகரிக்க உள்ளது. பிள்ளைகள் மூலம் சிறப்பான பலன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். வாகன வசதி மேம்படும். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருந்தவர்களுக்கு பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி சுமூகமான சூழல் ஏற்படும். வீடு, நிலம் ஆகியவற்றின் மூலமாக நல்ல ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் பணவரவு அதிகரிக்கும். அலுவலக வேலை புரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் ஆகியவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
துலாம்
சஞ்சரிப்பது துலாம் ராசிக்காரர்களுக்கு மிகுந்த சாதகமான சூழலை ஏற்படுத்த உள்ளது. பொருளாதார நிலை மேம்பட்டு புதிய வருமான வழிகள் திறக்கப்பட உள்ளது. தொழில் செய்து வருபவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க உள்ளது. சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். காதல் வாழ்க்கை இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். நிலுவையில் இருந்த அனைத்து பணிகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிப்பதால் புண்ணிய தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம், பாராட்டுகள் கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் சாதகமான சூழல் ஏற்படும் காலம் நெருங்கியுள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி நல்ல பலன்களை வழங்க உள்ளது. இவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும் இவர்களுடன் கன்னி, விருச்சகம் தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கும் சுக்கிரனின் பெயர்ச்சி நல்ல பலன்களை தரவுள்ளது. எதிர்பாராத வெற்றிகள், பொருளாதாரத்தில் திடீர் உயர்வு, எதிர்பாராத பணவரவு, நிதிநிலை மேம்பாடு, வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல், குடும்பத்தின் நிலவி வந்த பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சியான சூழல் ஏற்படும் நாள் நெருங்கியுள்ளது.
(குறிப்பு: சுக்கிரனின் இந்த மிதுன ராசி பயிற்சி பொதுவாக அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரக்கூடியதாக இருக்கும். கலை, இசை மற்றும் அழகு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமைய உள்ளது. சுக்கிரனின் பெயர்ச்சியால் சமூகத்தில் செல்வாக்கும் மரியாதையும் பல ராசிகளுக்கு கூட உள்ளது. இந்த பலன்கள் அனைத்தும் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதக அமைப்பு, கிரக நிலைகள், தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் இருக்கலாம். ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகமும் மாறுபடும் என்பதால் துல்லியமான பலன்களை அறிய ஒரு அனுபவமிக்க ஜோதிடரை அணுகுவது நல்லது)