- Home
- Astrology
- Zodiac Signs : புதன் பகவான் வக்கிரப் பெயர்ச்சி.. அடுத்த 70 நாட்களுக்கு ராஜ யோகத்தைப் பெறும் 4 ராசிகள்
Zodiac Signs : புதன் பகவான் வக்கிரப் பெயர்ச்சி.. அடுத்த 70 நாட்களுக்கு ராஜ யோகத்தைப் பெறும் 4 ராசிகள்
புதன் வக்கிரப் பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்கள் அடுத்த சில மாதங்களுக்கு நல்ல நிலையை அடைய உள்ளனர். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

புதன் வக்கிரப் பெயர்ச்சி 2025
ஜோதிடத்தில் புதனின் வக்கிரப் பெயர்ச்சி என்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. புத்தி, பேச்சு, வியாபாரம், தகவல் தொடர்பு ஆகியவற்றிற்கு காரணியான புதன் கிரகம் வக்கிர நிலையில் (பின்னோக்கிச் செல்வது போல தோன்றும் நிலை) இருக்கும் பொழுது சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களையும், சில ராசிகளுக்கு சவால்களையும் தரக்கூடும். தற்போது ஜூலை 18 2025 அன்று புதன் கடக ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த வக்கிர நிலை ஆகஸ்ட் 11 2025 வரை நீடிக்க உள்ளது. இந்த பெயர்ச்சியால் அடுத்த 70 நாட்களுக்கு நான்கு ராசிகள் ராஜயோகத்தை பெற உள்ளன. அந்த ராசிகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் கிரகத்தின் தாக்கம் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் தரவுள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க உள்ளது. புதிய வேலைகள், புதிய ஒப்பந்தங்கள் மூலம் குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்படும். சமுதாயத்திலும் உறவினர்கள் மத்தியிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் காலம் நெருங்கியுள்ளது. புதிய முதலீடுகள், சொந்த வீடு வாங்குவது ஆகிய கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகி மகிழ்ச்சி நிலவும்.
கன்னி
புதனின் வக்கிர பெயர்ச்சியால் கன்னி ராசிக்கு அடுத்த 70 நாட்கள் சாதகமான சூழல் நிலவ உள்ளது. காதல் மற்றும் திருமண வாழ்க்கை கைகூடும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். சுயதொழில் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருப்பவர்களுக்கு அதில் ஏற்பட்ட தடங்கல்கள் விலகி சுய தொழில் செய்யும் வாய்ப்பு உருவாகும். கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தில் சொந்தமாக வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் உருவாகும். செய்த முதலீடுகளில் இருந்து லாபம், தொழில் மூலமாக பணவரவு போன்ற எதிர்பாராத செல்வம் வந்து சேரும். மனநிலையில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். புதனின் வக்கிரப் பெயர்ச்சி அடுத்த சில மாதங்களுக்கு கன்னி ராசிக்கு பல வளங்களை கொண்டு சேர்க்க உள்ளது.
துலாம்
புதன் வக்கிரம் பெறுவதால் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க உள்ளது. துலாம் ராசியினர் வேலை செய்யும் இடத்தில் உயர் பதவிகள் அவர்களைத் தேடி வரும். வருமானம் அதிகரித்து லாபம் பெருகும். சுயமாக தொழில் செய்பவர்கள் தங்களது தொழிலை விரிவு படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் விலகி, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். முழு நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிகளை குவிப்பீர்கள். குடும்பத்தைப் பொருத்தவரை மனைவியின் ஆரோக்கியத்தில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும், அவை பனி போல விலகிச் செல்லும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் தேடி வரும். தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு உரிய அங்கீகாரங்கள் கிடைக்கும்.
கும்பம்
புதன் வக்கிரப் பயிற்சி அடைவதால் கும்ப ராசியினருக்கு அடுத்த 70 நாட்கள் நல்ல காலமாக அமைய உள்ளது. இதன் காரணமாக கும்ப ராசியினருக்கு பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்கும். பிரச்சனையான சூழ்நிலைகளில் இருந்து வெளிவர இது நல்ல காலமாகும். கடன் பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். இந்த காலகட்டத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியும். தொழில் மற்றும் முதலீடுகளுக்கு ஏற்ற நல்ல லாபத்தை பெறுவீர்கள். புதிய வேலை, புதிய முதலீடுகள் மூலம் பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நிலை மீது அக்கறை கொள்வீர்கள்.
(குறிப்பு: இந்த பலன்கள் பொதுவான ஜோதிட கணிப்புகளின் அடிப்படையில் அமைந்தது. ஒருவரின் தனிப்பட்ட ஜாதகம், தசா புத்திகள் மற்றும் கிரகங்களின் நிலைகளை பொறுத்து பலன்களில் மாற்றம் ஏற்படலாம். எனவே இந்த ஜோதிட பலன்களை ஒரு வழிகாட்டியாக மட்டுமே பார்க்க வேண்டும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அனுபவமிக்க ஜோதிடரை அணுகி ஆலோசனைப் பெறுவது நல்லது)