- Home
- Astrology
- Birth Date: இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் தந்தைக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார்களாம்.!
Birth Date: இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் தந்தைக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார்களாம்.!
எண் கணிதத்தின் படி சில தேதிகளில் பிறந்த பெண்கள் அவர்களது தந்தைக்கு அதிர்ஷ்டத்தை அளிப்பார்கள் என நம்பப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தந்தைக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும் பெண் குழந்தைகள்
ஜோதிட சாஸ்திரத்தில் நியூமராலஜி எனப்படும் எண் கணிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முறையில் நாம் பிறந்த தேதி அடிப்படையில் எதிர்காலத்தை கணிக்க உதவும் என கூறப்படுகிறது. பிறக்கும் தேதியில் ஏற்படும் கிரக நிலை மாற்றங்கள் மட்டுமல்ல பிறந்த தேதியில் உள்ள எண்களும் ஒரு நபரின் வாழ்க்கையில் குறிப்பிட தகுந்த பலன்களை கொண்டு வரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சில தேதிகளில் பிறந்த பெண்கள் அவர்களது பெற்றோருக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்கள் என நம்பப்படுகிறது. அந்த எண்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
3 ஆம் தேதி
மூன்றாம் தேதியில் பிறந்த பெண்கள் ஆதிக்க பண்புகளுக்கு பெயர் பெற்றவர்களாக கருதப்படுகின்றனர். குரு பகவானின் ஆசி பெற்ற இந்த எண்களில் பிறந்த பெண்கள் தங்களை சுற்றி உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிப்பவர்களாக பார்க்கப்படுகின்றனர். இவர்கள் ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கும், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நபர்களாக கருதப்படுகின்றனர். தங்களை சுற்றியுள்ளவர்களின் நல்வாழ்விற்கு இவர்கள் தங்களால் முடிந்த ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்ய விரும்புகிறார்கள். குறிப்பாக இந்த தேதியில் பிறந்த பெண்கள் தங்களின் தந்தைக்காக எந்த காரியங்களையும் செய்து கொடுக்க முயற்சி செய்கின்றனர். தந்தைக்காக எவ்வளவு பெரிய கடினமான சவால்களையும் எதிர் கொள்ள தயாராக இருக்கின்றனர். எண் கணிதத்தின் படி இந்த தேதியில் பிறந்த பெண்கள் குடும்பத்தினருக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும் நபர்களாக பார்க்கப்படுகின்றனர்.
7 ஆம் தேதி
ஏழாம் தேதியில் பிறந்த பெண்கள் சந்திரன் மற்றும் குருவின் செல்வாக்கிற்கு ஆளானவர்கள். இவர்கள் எந்த ஒரு செயலை எடுத்தாலும் அதை தெளிவாகவும் ஆக்கபூர்வமான செயல் திட்டங்களுடனும் செய்வார்கள். கிரக நிலைகள் மற்றும் தேதி அடிப்படையில் பார்க்கும் பொழுது ஏழாம் தேதியில் பிறந்த பெண்கள் குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தை சேர்ப்பார்கள். இவர்கள் வளர்ந்த பின்னர் குடும்ப பாரத்தை தங்கள் தலையில் சுமக்க துவங்குகின்றனர். குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சவால்களை தனது தனி திறமை கொண்டு இவர்கள் கையாளுகின்றனர். ஏழாம் தேதியில் பிறந்த பெண்கள் சூரியனுக்கு நிகரான ஆற்றல் கொண்டவர்கள். அவர்களின் மன தைரியம் அவர்களை தலைவராக உயர்த்துகிறது. தனியாகவும், குழுவாகவும் செயல்படுவதில் சிறந்தவர்கள். இவர்களின் விடாமுயற்சியால் கிடைக்கும் பலன்கள் அவர்கள் குடும்பத்தினருக்கு பெரும் உதவியாக அமைகிறது. ஏழாம் தேதியில் பிறந்த பெண்கள் குடும்பத்தினருக்கு அதிர்ஷ்ட தேவதையாக பார்க்கப்படுகின்றனர்.
11 ஆம் தேதி
ஒவ்வொரு மாதத்தின் பதினோராம் தேதியில் பிறந்த பெண்கள் குருவின் சக்தியையும், செவ்வாயின் ஆளுமையையும் கொண்டுள்ளனர். எனவே இந்த பெண்களுக்கு இயல்பிலேயே ஆளுமை திறன் அதிகமாக இருக்கும். இவர்கள் லட்சியவாதிகளாகவும் விளங்குகின்றனர். தங்களின் திறமையால் எதையும் சாதிக்கும் வல்லமை இவர்களுக்கு உண்டு. இவர்கள் தங்கள் தந்தையின் தொழில் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். தந்தையுடன் இணைந்து இவர்கள் தொழில் முன்னேற்றத்தில் ஈடுபடுகின்றனர். 11 ஆம் தேதியில் பிறந்த பெண்கள் தங்கள் குடும்பத்தின் பொருளாதாரையே நிலையை மேம்படுத்தி சமூகத்தில் உயரிய அந்தஸ்து பெற வேண்டும் என உதவி புரிகின்றனர்.
12 ஆம் தேதி
மாதத்தின் 12 ஆம் தேதியில் பிறந்த பெண்கள் சூரியன் மற்றும் குருவின் அம்சத்தை பெற்ற பெண்களாகும். இவர்கள் நேர்மறை எண்ணங்களை கொண்டவர்கள். இந்த பெண் குழந்தைகள் பொதுவாகவே படிப்பு, விளையாட்டு என இரண்டிலும் ஆர்வம் காட்டுவார்கள். இதன் காரணமாக தங்கள் துறைகளில் பல சாதனைகள் செய்து பெற்றோரின் பெயரை காப்பார்கள். பெற்றோருக்கு பெருமை சேர்ப்பார்கள். திருமணம் ஆகி சென்ற இடத்திலும் பிறந்த குடும்பத்தின் பெருமையை காப்பார்கள். இவர்கள் மனோ தைரியத்திற்கு பெயர் பெற்றவர்கள். தங்கள் தன்னம்பிக்கையால் வளர்ந்த பின் தனது தந்தைக்கு உதவியாக அவர்களது தொழிலை எடுத்து செய்வதும், அதில் உள்ள தடைகளை எதிர்த்துப் போராடி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதையும் லட்சியமாகக் கொண்டிருப்பார்கள்.
முக்கியமாக கவனிக்க வேண்டியவை
பொதுவாகவே இந்திய கலாச்சாரத்தில் படி பெண் குழந்தைகள் தேவதையின் அம்சமாக பார்க்கப்படுகின்றனர். பெண் குழந்தைகள் மகாலட்சுமிகளாகவே பெற்றோர்களால் வளர்க்கப்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட தினத்தில் பிறந்தவர்கள் மட்டுமே அதிர்ஷ்டத்தை அளிப்பவர்கள் என்பது பொருள் கிடையாது. மேற்குறிப்பிட்ட தகவல்கள் பொதுவான ஜோதிட மற்றும் ஆன்மீகத்தின் அடிப்படையில் அமைந்தவை மட்டுமே. இதற்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒரு தனி நபரின் வாழ்க்கை என்பது ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள், திசை, கர்ம பலன்கள் மற்றும் தனிப்பட்ட உழைப்பு ஆகியவற்றை பொறுத்து அமையும். உங்களின் தனிப்பட்ட பலன்களை துல்லியமாக அறிய அனுபவம் வாய்ந்த ஜோதிடரை அணுகுவது நல்லது.